விண்மீன் வலையமைப்பு:
விண்மீன் வலையமைப்பு (star network) இன்று கணினி வலையமைப்பில் மிகவும்
பரவலாகப் பாவிக்கப்பட்டு வரும் வலையமைப்பாகும். இது ஈதர்நெற் தொழில் நுட்பத்தில் பாவிக்கக்கூடியது.
இவ்வகை வலையமைப்பில் ஒவ்வொரு கணினியும் நிலைமாற்றி (switch) அல்லது கூடுமையத்துடன் (ஹப், hub)
இணைக்கப்பட்டிருக்கும். இதனால் ஏதாவது ஒரு மின்கம்பி (cable) அறுந்தாலும் மீதி வலையமைப்புத் தொடர்பு
அறாமல் இருக்கும். வளைய வலையமைப்பும் (Ring network) உண்மையில் விண்மீன் வலையமப்பு போன்றே
இணைக்கப்படும், பின்னர் மென்பொருள் ஊடாக வளைய வலையமைப்பு நடைமுறைப்படுத்தப்படும்.
விண்மீன் வலையமைப்பில் எல்லா வலையைப்பில் உள்ளனவும் நடு நிலையத்தில் இணைக்கபடுவதால்
இவ்வகை இணைப்புக்கள் பழுதடைவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகும்.
பெருநகர் பரப்பு வலையமைப்புகள் விண்மீன் வலையமைப்பு முறையிலேயே இணைக்கப்படுகின்றது.
நன்மைகள்
* சிறந்த வினைத்திறன்: இவ்வகையான வலையமைப்பு இணைப்பில் 3 கருவிகளும் 2 இணைப்பும்மாத்திரமே இணைக்கப்படுவதாலும் இதன் நடுப்பகுதியில் கூடுதல் வேலை இருந்தாலும் கூட அவை
கையாளக்கூடியவையே. ஒருபகுதியில் உள்ள மிக அதிகமான வலையமைப்புப் பயன்பாடு
வலையமைப்பில் உள்ள ஏனைய கருவிகளைப் பாதிக்காது.
* கருவிகளைப் பிரித்தல்: ஒவ்வொரு கருவியும் வலையமைப்பில் தனியே நிலைமாற்றியுடனோ
அல்லது கூடுமையத்துடனோ (ஹப் உடனோ) இணைக்கப்படுவதால் தனித்தனியாக தவறுகள்
ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே.
எல்லா கருவிகளுமே கூடுமையத்துடன் (ஹப் அல்லது சுவிச்சுடன்) இணைக்கப்படுவதால்
கூடுமையத்தை மேம்படுத்துவதன் மூலம் வலையமைப்பை மேம்படுத்தலாம்.
* இலகுத்தன்மை: இத்தொழில்நுட்பமானது இலகுவாக விளங்கக்கூடியதாக இருப்பதால் இதை
உருவாக்கி பராமரிப்பது இலகுவாகும். பழுது ஏற்பட்டாலும் இலகுவாக பிழையை அடையாளம்
காணக்கூடியதாக இருக்கும்.
தீமைகள்
வலையமைப்பில் உள்ள எல்லா கருவிகளுமே கூடுமையத்துடன் இணைக்கப்படுவதாலகூடுமையம்பழுதடைந்தால் முழு வலையமைப்பும் பயன்படுத்த முடியாததாகிவிடும்.
http://upload.wikimedia.org/wikipedia/commons/4/4f/RING_Topology.பங்
வளைய வலையமைப்பு
கணினியும் மற்ற இரு கணினிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு தொடர்ந்து கணினிகள்
இணைக்கப்பட்டு ஒரு வளையத்தை உருவாக்குகின்றன. இதுவே வளைய வலையமைப்பு என்று
அழைக்கப்படுகிறது. வளைய வலையமைப்பில் எந்த இரண்டு இணைப்பிற்கும் ஒரே வழியே உள்ளதால்
ஓர் அந்தத்தில் (Node) உள்ள இணைப்பு பழுதடைந்தால் முழுவலையமைப்புமே பாதிப்படையும்.
கண்ணாடியிழைகளூடாகத் தரவுப் பரிமாற்றத்தில் (FDDI) வலையமைப்பில் பிழை ஏற்படும் போது
மணிக்கூட்டுத் திசையாகவும் அதற்கு எதிர்த் திசையாகவும் தரவு அனுப்படுவதால் இந்தப் பிரச்சினை
அங்கு இல்லை. இது C வளைய வலையமைப்பு அல்லது ஐபிஎம் டோக்கின் றிங் வலையமைப்பு
எனப்படும் இங்கு பௌதீகரிதியாக (Physically) விண்மீன் வலையமைப்பு மாதிரி நடுவில் கணினி சுவிச்சுடன்
இணைக்கப்பட்டிருக்கும் பின்னர் தர்க்கரீதியாக வளைய வலையமைப்பில் நடைமுறைப்படுத்தப்படும்.
பெரும்பாலான வலையமைப்புக்கள் மேலதிகமாக சுழலும் திசைக்கு எதிராகவும் ஓர் வலையமைப்பை
ஏற்படுத்திக்கொள்ளும்.
அநுகூலங்கள்
- பழைய வலையமைப்பில் எல்லாச் சாதனங்களுமே டோக்கின் (Token) ஐப் பெற்று அதை அநுப்பக்கூடிய வசதி.
- அதிக வேலைப் பழுவுள்ள வலையமைப்பில் விண்மீன் வலையமைப்பை விட வினைத்திறனாக இயங்கக்கூடியது.
- டோக்கின் றிங் ஐப் பாவித்துப் பெரிய வலையமைப்பை உருவாக்கலாம்.
- ஒவ்வொரு கணினிக்கும் இடையிலான தொடர்பை நிர்வாகிக்க கணினி வழங்கி (சர்வர் server) தேவையில்லை.
பிரதிகூலங்கள்
- ஒரு ஒழுங்காக வேலை செய்யாத கணினி அல்லது வலையமைப்பு அட்டை முழு வலையமைப்பிற்குமே பிரச்சினையை உண்டு பண்ணும்.
- இவ்வலையமைப்பில் இணைப்புக்களை நகர்த்துதல், சேர்த்தல் மற்றும் சாதனங்களை மாற்றுதல் வலையமைப்பைப் பாதிக்கும்.
- சாதாரண ஈதர்நெட் வலையமைப்பு அட்டையை விட இந்த வலையைமைப்பு அட்டை விலைகூடியது.
- சாதாரண ஈதர்நெட் வலையமைப்பை விட இந்த வலையைமைப்பு மெதுவானது.