Popular Posts

Sep 14, 2010

கோப்புகளை இழக்காமல் FAT 32 வில் இருந்து NTFS க்கு மாற்ற?

FAT 32  மற்றும் NTFS என்ற இரண்டும் விண்டோஸ் நிறுவுதல் மற்றும் பிரித்தலின் வகைகள் ஆகும் . NTFS பிரித்தல் என்பது FAT 32 பிரித்தலை விட பாதுகாப்பனதாக கருதப்படுகிறது . NTFS அதிகம் பயன்படுத்தப்படும் பிரித்தலாகவும் இருக்கிறது.


FAT 32 வில் இருந்து NTFS க்கு மாற்ற
  1.  உங்கள் கணினியில் command prompt  க்கு செல்லவும் (START -->RUN -->டைப் CMD -->ENTER ) .
  2. பின்வருமாறு டைப் செய்யவும் ( CONVERT C:/FS:NTFS ) இங்கு C என்பது உங்களின் டிரைவ் . அடைப்புக்குள் உள்ளது மட்டும் டைப் செய்யவும்.
  3. உங்களுக்கான volume பெயரை டைப் செய்யவும் .
இப்பொழுது உங்களின் டிரைவ் FAT 32 வில் இருந்து NTFS க்கு மாறி இருக்கும் .



குறிப்பு : command prompt யில் குறிப்பிட்ட  DRIVE ல் இருந்து உங்களின் கோப்புகளை இழக்காமல் FAT 32 வில் இருந்து NTFS க்கு மாற்றி தந்து விடும்

கணினி இலவச பாதுகாப்பு

Bitdefender Anti Virus



Anti Virus தயாரிப்பில் தனக்கு என்று தனி முத்திரை பதித்த Bitdefender  தனது நிறுவனத்தின்  சார்பாக இலவசமாக  கடந்த சில மாதங்களாக தொடந்து வழங்கும், Bitdefender  V 10  இப்போது 8 மாத Free License – உடன் கிடைக்கிறது.  Virus, Spyware’s, Rootkits, போன்றவற்றியில் இருந்தும், Popup’s, Password, Firewall Alert’s, Quarantine, System Restore Setting’s, மற்றும் அனைத்துவித Scan வசதி மூலம் கணினி பாதுகாக்கலாம். I C S A  Labs யின் நற்சான்றிதழ், I S T யில் பரிசையும் வென்றுள்ளது. 41-மில்லியன் மக்களும், 200 நாடுகளும்  Bitdefender Anti Virus வாடிக்கையாளர்கள். இதை நிறுவும் போது நெட் இணைப்பு அவசியம், நிறுவும் போதே Scan – Update மேற்க்கொள்வதால் குறைந்தபட்சம் 25 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். 

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி பேஸ்ட் செய்க.

நன்றி : GVRAJ

உங்கள் கணினியை பணி நிறுத்தம் செய்யும்போது சில நேர வெகு நேரம் எடுத்தால்

உங்கள் கணினியை பணி நிறுத்தம் செய்யும்போது சில நேரங்களில் வெகு நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனென்றால் அதன் பின்புலத்தில் பல செயல்கள் (Background processes) நடைபெற்றுக்கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றாய் முடிவடையும் வரை காத்திருந்து பின்னர் கணினியின் இயக்கம் நிற்கும். ஒரு சில செயல்கள் தானாக நிற்பதில்லை. பணி நிறுத்தம் (Shut down) செய்யும்போது இந்த செயல்களை உடனடியாக நிறுத்துவதன் மூலம், கணினியின் இயக்கத்தை வேகமாக நிறுத்தலாம் உடனடியாக எப்படி நிறுத்துவதென்றுபார்ப்போம்.






1.Start ---> Run சென்று regedit என டைப் செய்யுங்கள்.

2.பின் வரும் Registry Edit சட்டத்தில் இடது புறம் 2-வது உள்ள HKEY_CURRENT USER திறக்க வேண்டும்.

3.அதை தொடர்ந்து Control Panel திறக்க வேண்டும்.

4.அதில் வரும் Desktop செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

5.இப்போது வலது புறத்தில் இருக்கும் பகுதில் AutoEndTasks என்பதை இரு கிளிக் செய்து அதன் மதிப்பை 0  என்பதிலிருந்து 1  என மாற்றுங்கள்.OK கொடுத்து வெளியேறுங்கள்.

இனி, உங்கள் கணினி பணி நிறுத்தம் செய்கையில் அதிக நேரம் எடுக்காது.

நன்றி : GVRAJ

பயாஸ் பாஸ்வேர்ட் நீக்க

1. முதலில் C P U - யை திறந்து கொள்ளவும்,
2. பின்னர் மதர்போர்டில் உள்ள சிமாஸ் அருகில் உள்ள ஜம்ப்பர் பின்னை நிப்பில் (1.2) எடுத்து அருகில் உள்ள அடுத்த நிப்பிலில் (2.3) மாட்டவும்,
3. கணினியை ஆன் செய்யவும்,
4. இப்போது பயாஸ் சென்று பாஸ்வேர்ட் க்ளீயர் செய்யவும்.
5. கணினியை ஆப் செய்யவும்.
6. மீண்டும் பழைய நிலையில் ஜம்ப்பரை நிப்பில் 1.2
எடுத்து மாற்றவும்.

விண்டோஸ் XP - Administrator பாஸ்வேர்ட் Recovery CD உதவியுடன்


1.முதலில் விண்டோஸ் XP Cd-யை பயாஸ் உதவியுடன் பூட் செய்து கொள்ளுங்கள்.

2.XP Cd - உள்ள Set Up File 5 நிமிடத்தில் காப்பியானதும் லைசன்ஸ் அக்ரிமெண்ட் F8 Key அழுத்தி தொடர வேண்டும்.

3.பின்னர் XP Insatallation ஸ்டெப் வரும் அதில் உள்ள Repair Process உரிய R Key அழுத்தி தொடர வேண்டும்.

4.பின்னர் தொடர்ந்து XP Cd 5 நிமிடம் ஒடி சிஸ்டம் ரீஸ்டாட் ஆகும்.

5.Installing Windows ஸ்கீரின் வந்து தொடர்ந்து Installing Devices வரும் போது SHIFT + F10 அழுத்த வேண்டும்.

6.கமாண்ட் பாக்ஸில் NUSRMGR. CPL டைப் செய்து Enter கொடுக்கவும்.

7.இப்போது User Accounts ஒப்பன் ஆகும் அதில் Password Remove (or) Change (or) Control UserPasswords2 கட்டளையை கேட்கும்.

8.பழைய பாஸ்வேர்ட் எடுத்து விடுவது அல்லது புது பாஸ்வேர்ட் கொடுப்பது அல்லது புது யுசர் கணக்கு2 தொடங்குவது நமக்கு வேண்டிய ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும்.

9.தேர்வு செய்து முடிந்ததும் XP Cd தொடர்ந்து Product Key கொடுத்து 15 அல்லது 20 நிமிடத்தில் XP OS Insatallation முடிந்து விடும்.

10.இப்போது எந்த விதமான மாற்றம் இல்லாமல் நமது புதிய பாஸ்வேர்ட் உ டன் கணினி செயல்படும்

ADMINISTRATOR PASSWORD - HARD DISK மற்றும் PROCESSOR மூலம் DELETE செய்வது

HARD DISK 

1. உங்களுடைய HARD DISK  கழற்றி  மற்றொரு கணினியில் பொருத்தவும் .

2. இப்போது உங்களுடைய HARD DISK பொருத்தப்பட்டுள்ள கணினியை SECONDARY HARD DISK  மூலம்  பூட் செய்யவும் .

3. தயவு செய்து PRIMARY HARD DISK  பயன்படுத்தாதிர்கள் ..

4. Windows போல்டர் -> system32 போல்டர் -> config போல்டர் வரிசையாக திறக்க வேண்டும்

5. கடைசியாக திறந்த config போல்டரில் உள்ள  SAM.exe மற்றும் SAM.log   இரு File களை  Delete  செய்யவும்.

 
உங்களுடைய  HARD DISK  கழற்றி CPU போட்டு  Boot   செய்யவும்.



PROCESSOR 



1.CPU -  முதலில் ஒப்பன் செய்து மதர் போர்டை கழட்டி அதில் உள்ள சீமாஸ் பேட்டரியை தனியாக எடுத்துவிடவும்.

2.Processor Fan  கிளிப்பியை எடுத்து அதன் கீழ் பகுதில் உள்ள  ஜாக்கெட் லீவர் மேல் பக்கம்மாக தூக்கி Processor  பிளேட்டை தனியாக எடுத்துவிடவும்.

3.15 நிமிடம் கழித்து பழைய படி மீண்டும் Processor  பிளேட் -  Processor Fan  -  சீமாஸ் பேட்டரி மாட்ட பழைய செட்டிங் மற்றும் பாஸ்வேர்ட் நீக்கப்பட்டு சிஸ்டம் தயார் நிலையில் இருக்கும்.

               இது கொஞ்சம் ரிஸ்க் அதிகம்

நன்றி  : GVRAJ

Sep 13, 2010

கணிணி எடுக்கும் மின்திறனை கணக்கிடும் மென்பொருள்

நமது அத்தியாவசிய பொருளில் ஒன்றாக மாறி கொண்டிருக்கும் ஒன்று கணிணி.உங்கள் கணிணி எவ்வளவு மின்சாரத்தை எடுக்கிறது என்பதை கணக்கிட மென்பொருள் ஒன்றை Microsoft அறிமுகபடுத்தியுள்ளது.



இந்த மென்பொருள் உங்கள் கணிணியின் திரை(Monitor),நினைவகம்(Memory) மற்றும் CPU எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகின்றன என்பதை தனித்தனியாகவும் , மொத்தமாகவும் கணக்கிட்டு கூறுகிறது.இந்த மென்பொருளின் பெயர் Joulemeter.



இந்த மென்பொருளை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.ஆனால் இந்த மென்பொருளை இயக்க .NET Framework 3.5 தேவை.மேலும் மடிக்கணிணிகளுக்கான இந்த மென்பொருள் விரைவில் வெளியிட போவதாக Microsoft அறிவித்துள்ளது.

கொசுவை விரட்டும் மென்பொருள்

 கொசுக்களை அழிக்க அல்லது விரட்ட தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம்.பலர் டென்னிஸ் மட்டை போன்ற ஒன்றை வைத்து கொசுக்களை அடிப்பதை பார்த்து இருக்கிறோம்.நாம் கணிணியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது கொசு கடிக்காமல் இருக்க இந்த Anti Mosquito என்ற மென்பொருள் உதவுகிறது.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இயக்கினால் கீழ்க்கண்ட விண்டோ தோன்றும் அதில் Active என்பதை கிளிக் செய்தால் இந்த மென்பொருள இயங்க ஆரம்பித்து விடும்.

 Active என்பதை கிளிக் செய்தவுடன் இந்த மென்பொருள் கொசுவை விரட்டும் அல்ட்ரா ஒலிகளை வெளிபடுத்த ஆரம்பித்து விடும்.இந்த அல்ட்ரா ஒலிகளை நாம் கேட்க முடியாது.
 மீண்டும் INACTIVE கிளிக் செய்து இந்த மென்பொருளின் இயக்கத்தை நிறுத்தலாம்.மேலும் Hide என்பதை கிளிக் செய்து பின்புலத்தில் இயக்கலாம்.
இந்த மென்பொருளில் இருந்து வரும் அல்ட்ரா ஒலி கொசுக்களை பறக்க விடாமல் கட்டுபடுத்துகிறது.இதனால் இதை இயக்கிய சில நிமிடங்களில் உங்கள் கணிணிக்கு அருகில் இருந்து கொசுக்கள் ஓடிவிடும்.நீங்கள் உங்கள் ஒலிப்பான்களை On செய்து வைத்திருந்தால் போதும்.CNET தளம் இந்த மென்பொருளில் எவ்வித வைரஸ்களும் இல்லை என உறுதி செய்துள்ளது.இந்த மென்பொருளை தரவிறக்க கீழ்க்கண்ட சுட்டிகளை பயன்படுத்தலாம்.

CNET தளத்தில் இருந்து தரவிறக்க இங்கு கிளிக் செய்க

மேலும் விபரங்களுக்கு மென்பொருளின் வலைத்தளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்க

Sep 12, 2010

விண்டோஸ் 98 பூட் டிஸ்க் இமேஜ் (Windows 98 Boot Disk Image File)

உங்களுக்கு விண்டோஸ் 98 பூட் டிஸ்க் (Windows 98 Boot Disk) வேண்டுமா? 

இதை பயன்படுத்தி உங்களுடைய கணிணியை பழுது நீக்கலாம், புதிதாய் OS -  யை நிறுவலாம், இதில் நார்ட்டன் கோஸ்ட் மென்பொருளும் இணைந்துள்ளது, இதை பயன்படுத்தி ஒரு Boot CD – ஐ உருவாக்கி அதன்மூலம் உங்களின் முழு Hard Disk – Backup செய்து வைத்துக்கொண்டு தேவையான பொழுது Restore  செய்து பயன்படுத்தலாம், 

நீங்கள் Ultra ISO Software – ஐ பயன்படுத்தினால் CD -  க்கு பதில் Pen Drive – ஐ பயன்படுத்தி Boot செய்யலாம்.


அளவு : 4.5 MB
Type : ISO

Download செய்து பயன்பெறவும்.

ஐபி அட்ரஸ் பற்றிய விபரங்களை அறியுங்கள்

தற்போது, நமக்கு நிறைய தேவையில்லாத மெயில்கள் அல்லது பேங்கிலிருந்து வருவது போலவே Duplicate மெயில்கள் வருகின்றன, அப்படிப்பட்ட மெயிலின் அனுப்புனர் IP Address - ஐ சோதித்து பின்னர் நமக்கு தேவையான விபரங்களை பயன்படுத்தலாம், அதற்கு நமக்கு அந்த IP Address பற்றிய விபரம் தெரிய வேண்டும், அதற்கு இணையத்தில் தேடி அலைய வேண்டும், அப்படியில்லாமல் தேவையான விபரங்களை ஒரு சொடுக்கில் பெறமுடிந்தால் ?

அதற்கான ஒரு Software கீழேயுள்ள லிங்கில் (IPNetInfo) உள்ளது, இது ஒரு Portable Application ஆகும், இதை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு IP Address - ன் Country Name, IP addresses Range, Contact Information (Address, Phone, Fax, and Email) முதலியவைகளை அறிய முடியும்

இதே லிங்கில் CurrPorts என்று மற்றும் ஒரு Software-ம் உள்ளது, இதுவும் ஒரு Portable Application - தான், இதை பயன்படுத்தி உங்கள் கணிணியின் தேவையில்லாத TCPIP / UDP Port- களை கட்டுப்படுத்தலாம், தேவையான Report களை HTML வடிவிலும் பெறலாம்,

Software களை தறவிரக்கம் செய்ய : Download Software

இது ஒரு Portable மற்றும் Freeware ஆகும். File அளவும் வெறும் 1.25 MB தான். 

Laptop Recovery: அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியது.

நாம் புதிதாக லேப்டாப் வாங்கும் பொழுது, அதனுடன் அதற்கான Recovery DVD களை தருவார்கள். ஆனால் ஒரு சில லேப்டாப்களுக்கு இந்த DVD களை வாங்கும் பொழுது தருவதில்லை. கேட்டால் 'Recovery partition உள்ளேயே இருக்கு' என்று கூறிவிடுகிறார்கள். மற்றும் சிலர் புதிய லேப்டாப் வாங்கும் பொழுது, இது பற்றி யோசிப்பதில்லை என்பது வேறு விஷயம். 

இப்படி Recovery Disc தரப்படவில்லை எனில்  பெரும்பாலும் உங்கள் லேப்டாப்பின் வன்தட்டில் Recovery partition என ஒன்று இருக்கும். 

இந்த பார்ட்டிஷனை திறக்க முயற்சிக்கும் பொழுது கீழே திரையில் உள்ளது போல எச்சரிக்கை செய்தி வருவதை கவனித்திருக்கலாம். 


இந்த Recovery Disc அல்லது Recovery partition நமக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். நமது லேப்டாப்பில் வைரஸ் தாக்குதல், அல்லது வேறு ஏதாவது இயங்குதளத்தை நிறுவலாம் என்ற எண்ணத்தில் முயற்சிக்கும் பொழுது, லேப்டாப்புடன் வந்த இயங்குதளம் மற்றும் டிரைவர்கள், மென்பொருட்கள் ஆகியவை அழிக்கப்பட்டிருக்கலாம். அந்த சமயத்தில் இந்த வசதியை பயன் படுத்தி நாம் நமது லேப்டாப்பை ஃபேக்டரி Default Settings இற்கு ரீஸ்டோர் செய்துக் கொள்ளும் பொழுது, புதிதாக நாம் லேப்டாப் வாங்கும் பொழுது அதில் இயங்குதளம் மற்றும் மென்பொருட்கள், டிரைவர்கள் எவ்விதம் இருந்தனவோ அவ்விதம் திரும்ப பெற முடியும்.

இந்த  Recovery Disc அல்லது Recovery partition இல் உள்ள இயங்குதளம் உரிமம் பெற்றது (Licensed OS) என்பதும் இதற்காக நாம் லேப்டாப் வாங்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தியிருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். 

சரி இப்படி Recovery Disc இல்லாத லேப்டாப்பிற்கு அதன் Recovery partition -இல் இருந்து Recovery டிஸ்க் உருவாக்கி வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. அதுவும் லேப்டாப் வாங்கி குறுகிய காலத்திற்குள்ளாக, அதாவது இந்த Recovery partition சேதம் எதுவும் ஆவதற்கு முன்பாக உருவாக்கி வைத்துக் கொள்வது மிகவும் புத்திசாலித்தனமானது. இதை HP லேப்டாப்பில் எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம். 

இதை உருவாக்குவதற்கு நம்மிடம் தயாராக இரண்டு DVD + R டிஸ்க்குகள் இருக்கவேண்டும். (ஒரு சில Recovery disc உருவாக்கும் மென்பொருட்கள் DVD-RW, DVD+RW போன்ற டிஸ்க்குகளை ஏற்றுக் கொள்வது இல்லை). மேலும் லேப்டாப் பாட்டரி அளவை சோதித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த உருவாக்கத்தின் நேரம் சுமார் ஒரு மணி நேரம் என்பதால்,  இடையில் மின் வெட்டு ஏதும் இல்லாமலிருத்தல் நலம். 

முதலில் உங்கள் லேப்டாப் ஏற்கனவே இயக்கத்தில் இருந்தால் ரீஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள். இணைய இணைப்பு மற்றும் Wireless ஐ அனைத்து விடுங்கள். இந்த செயல்பாட்டின் போது மற்ற எந்த அப்ளிகேஷனையும் இயக்க வேண்டாம். 

Start பட்டனை க்ளிக் செய்து All Programs சென்று  PC Help & Tools மற்றும் Recovery Disc Creation  ஐ க்ளிக் செய்து கொள்ளுங்கள். அல்லது ஸ்டார்ட் மெனுவில் சர்ச் பாக்ஸில் Recovery Disc Creation என டைப் செய்து HP Recovery Manager ஐ திறந்து கொள்ளுங்கள். 

 
இப்பொழுது Blank DVD+R டிஸ்க்கை நுழையுங்கள். இச்சமயத்தில் ஏதேனும் AutoPlay திரை வந்தால் அதனை மூடி விடுங்கள்.
Next பட்டனை அழுத்தி பொறுமையாக காத்திருங்கள்.
 
முதல் DVD உருவான பிறகு தானாகவே eject ஆகிவிடும். இதை எடுத்து முதலில் "Recovery Disc 1 of 2" என எழுதி வைத்துக் கொண்டு, அடுத்த DVD ஐ நுழைத்து Next பட்டனை க்ளிக் செய்யுங்கள். 
 
இந்த பணி முடிந்த பிறகு, இரண்டாவது DVD க்கும் அதே போல பெயர் எழுதி வைத்துக் கொண்டு, Finish பட்டனை க்ளிக் செய்து மூடி விடுங்கள்.  
 
பெரும்பாலான லேப்டாப்களில் இந்த Recovery டிஸ்க் உருவாக்குவது ஒரே ஒருமுறை மட்டும்தான் அனுமதிக்கப் படுகிறது என்பதனால், இந்த செயல்பாட்டின் பொழுது மிகவும் கவனமாக இருப்பதுடன், நல்ல தரமான DVD களை பயன்படுத்துவதும், அவற்றை பத்திரமாக வைத்திருப்பதும் அவசியம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.


நன்றி : தமிழ் கம்ப்யூட்டர் மற்றும்  சூர்யா கண்ணன்

Sep 9, 2010

5.1 பிளேயரும் ஆடியோ சிடி காப்பியும்

கணினியில் நீங்கள் பாடல்களை 5.1ல் கேட்க விரும்புகிறீர்களா? நீங்கள் விரும்பினால் இங்கே தரவிறக்குங்கள் எல்லா இயங்குதளத்திற்கும் கிடைக்கிறது தற்போது இது சோதனை பதிப்பு அளவிலே தான் இருக்கிறது ஆனால் பாடல் கேட்பதென்றால் 2.1 என்பதுதான் சிறப்பாக இருக்கும் சினிமா பார்ப்பதென்றால் 5.1 நல்ல விருந்தாக இருக்கும்.

அடுத்து நாம் சாதரணமாக நாம் பாடல்களை அதிகமாக விலையின் காரணம் கொண்டும் MP3 பாடல்களை கேட்கிறோம் சரி இந்த MP3 பாடல் கேட்கும் போது நாம் முழுமையான இசையை கேட்கிறோமா என்றால் நிச்சியம் இல்லை காரணம் ஒரு பாடலின் தரம் குறையாமல் இருக்கும் போது குறைந்தபட்சம் 70 முதல் 80MB இருக்கும் அதைத்தான் நாம் அதன் தரத்தையும் சில நம் காதுகளால் கேட்க முடியாத இசையையும் இந்த MP3 பார்மட்டானது முழுவதுமாக நீக்கிவிட்டு நமக்கு அதை வெறும் 4MBக்குள் மாற்றித்தருகிறது எனவேதான் நல்ல இசையை விரும்பும் பிரியர்கள் ஆடியோ சிடியைத்தான் பயன்படுத்தி கேட்பார்கள் அதிலும் நம்மைப்போல 5.1 ஹோம் சிஸ்டம் பாடல் கேட்பதற்கு சுகமாக இருக்காது சரி விஷயத்துக்கு வருவோம் இந்த ஆடியோ சிடியில் உள்ள பாடலை நாம் நேரடியாக காப்பி எடுக்கமுடியாது நீங்கள் வேண்டுமானல் அதை காப்பி எடுத்து பாருங்கள் மொத்த அளவு வெறும் 200Kbக்குள் இருக்கும் சரி நமக்கு விருப்பமான பாடலை ஆடியோ சிடியில் இருந்து எப்படி MP3பார்மட்டுக்கும் காப்பி எடுப்பது என பார்க்கலாம் இதற்கு எந்த மென்பொருளும் அவசியமில்லை காரனம் மைக்ரோசாப்ட்டின் இயங்குதளம் பொதியில் windows media player இனைக்கப்பட்டு தான் வருகிறது இனி நீங்கள் சிடி டிரைவில் ஆடியோ சிடி குறுந்தகடை உள்ளிடுங்கள் அடுத்து உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரை திறந்துகொள்ளுங்கள் இனி இடது புறம் பான் விண்டோவில் Copy from Cd என்பதை தெரிவு செய்யுங்கள் அடுத்ததாக பாடல்களை தேர்வு செய்யுங்கள் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள்.



இனி நீங்கள் செய்யவேண்டியது Tools ->Options கிளிக்கி திறக்கும் பாப் அப் விண்டோவில் Copy Music என்கிற டேப் திறந்து அதில் Change என்பதில் கிளிக்கி பாடல்களை சேமிக்க விரும்பும் இடத்தை பிரவுஸ் செய்து ஓக்கே கொடுத்து வெளியேறவும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும்.



இனி உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரின் வலது பக்கம் பாருங்கள் Copy Music என ஒரு ரேடியோ பட்டன் இருக்கிறதா அதை கிளிக்குங்கள் அவ்வளவுதான் இனி உங்கள் கணினியின் வேகத்தை பொருத்து உங்கள் ஆடியோ சிடியில் இருந்து பாடலை MP3யாக மாற்றியிருக்கும்.

Sep 6, 2010

மெமரி ஸ்டிக்கில் உங்கள் கம்ப்யூட்டர்

நம்மில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். வீட்டில் நம் கம்ப்யூட்டரில் நாம் விரும்பும் பிரவுசரில் இணைய உலா வருவோம்; அதில் புக்மார்க் செய்த தளங்களை மட்டுமே பார்ப்போம்.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் நம் பிரிய இமெயில் கிளையண்ட் புரோகிராமினை நம் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்து பயன்படுத்துவோம்.

சரி, அதற்கென்ன என்கிறீர்களா! திடீரென வெளியூர் செல்கிறோம். அல்லது உங்கள் ஊரிலேயே வேறு ஒரு நண்பர் வீட்டிற்குச் செல்கிறோம். அங்கு இன்டர்நெட்டில் ஒன்றை உங்கள் நண்பருக்குக் காட்ட விரும்புகிறீர்கள். நண்பரின் கம்ப்யூட்டரில் வேறு ஒரு பிரவுசர்; பட்டன்களெல்லாம் மாறி இருக்கிறது. புக்மார்க் எல்லாம் எப்படி இருக்கும்? தடுமாறுகிறீர்கள், இல்லையா? அதே போலத் தான் இமெயில் கிளையண்ட் புரோகிராம் மற்றும் வேர்ட் புராசசிங் சாப்ட்வேர் தொகுப்புகளும்.

இதற்காக நம் சிபியூ டவரைத் தூக்கிக் கொண்டு செல்லவா முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். அதெல்லாம் வேண்டாம். ஒரு சின்ன பிளாஷ் டிரைவ் இருந்தால் போதும். உங்களுடைய பிரியமான, உங்களுடைய விருப்பங்களுக்கேற்றபடி வடிவமைக்கப் பட்ட சாப்ட்வேர் புரோகிராம்களைத் தூக்கிச் சென்று பயன்படுத்தலாம். ஒரு மெமரி ஸ்டிக்கில் எடுத்துச் சென்று உங்களுடையதாக மட்டும் பயன்படுத்தும் பல புரோகிராம்கள் இப்போது புழக்கத் தில் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிளாஷ் டிரைவில் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் வேர்ட் புரோகிராம் முழுவதையும் இன்ஸ்டால் செய்து கொண்டு போய் பயன்படுத்த முடியாது. இதற்கென போர்டபிள் அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளன. அவற்றைத்தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும்.



அவை புரோகிராம்களையும் அதில் உள்ள ஸ்பெஷல் செட்டிங்குகளையும் பதிந்து வைத்து எடுத்துச் சென்று பயன்படுத்த தருகின்றன. இப்படி அனைத்து புரோகிராம்களும் நமக்குக் கிடைப்பதில்லை. ஒரு சில முக்கிய பயன்பாடு களுக்கான போர்ட்டபிள் புரோகிராம்கள் கிடைக்கின்றன. முதலில் இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கான புரோகிராம் குறித்து பார்க்கலாம். இது பயர்பாக்ஸ் வெப் பிரவுசர் புரோகிராம். இதற்கு ஒரு மெமரி கீ ஸ்டிக்கில் 30 எம்பி அளவு இடம் இருந்தால் போதும். இதனை www.portableapps.com/apps.internet/firefox_portable என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். இதனை முதலில் டெஸ்க்டாப்பில் டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின் மெமரி ஸ்டிக்கை அதன் ஸ்லாட்டில் செருகி ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். பின் டெஸ்க்டாப்பில் இருக்கும் புரோகிராமினை இருமுறை கிளிக் செய்து இன்ஸ்டாலேஷன் செயல்பாட்டை மேற்கொள் ளுங்கள்.

முதலில் கிடைக்கும் விண்டோக்களில் லைசன்ஸ் அக்ரிமெண்ட் ஆகியவற்றிற்கு சரி என்று கிளிக் செய்து எங்கு இன்ஸ்டால் செய்திட என்று கேட்கும்போது மெமரி ஸ்டிக்கின் டிரைவைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுக்கவும். சில நிமிடங்களில் மெமரி ஸ்டிக்கில் புதிய போல்டர் ஒன்று உருவாக்கப்பட்டு பயர்பாக்ஸின் போர்டபிள் பதிப்பு ஒன்று அதில் இருக்கும். இதன் மீது டபுள் கிளிக் செய்து இயக்கிப் பார்க்கவும். மெமரி ஸ்டிக்கில் இருந்து இயங்கும் பிற புரோகிராம்கள் மற்றும் பைல்களைப் போல இதுவும் சற்று மெதுவாகத்தான் இயங்கும். அது குறித்து கவலைப் படாமல் தொடர்ந்து பிரவுஸ் செய்திடுங்கள்.

உங்கள் வழக்கமான செட்டிங்குகளை ஏற்படுத்துங்கள். புக் மார்க்குகளை உருவாக்குங்கள். இனி இந்த மெமரி ஸ்டிக் மூலம் நீங்கள் யாருடைய கம்ப்யூட்டரில் வேண்டுமென்றாலும் உங்களுக்குப் பிரியமான பிரவுசர் மூலம் இன்டர்நெட் உலா வரலாம். போர்ட்டபிள் பயர்பாக்ஸ் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் இன்டர்நெட் தளம் சென்று இமெயில்களைக் காண முடியும் என்றாலும் நீங்கள் உங்களுடைய இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் மூலம் அவர்களின் சர்வரில் இருந்து மெயில் களை டவுண்லோட் செய்திட உங்களுக்கு ஒரு இமெயில் கிளையண்ட் புரோகிராம் தேவை. இதற்கென தண்டர்பேர்ட் போர்ட்டபிள் இமெயில் கிளையண்ட் புரோகிராம் கிடைக்கிறது. www.portableapps.com/nes/20080502_ thunderbird_portable_2.0.0.14 என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இதனை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

ஏற்கனவே முன் பத்தியில் போர்ட்டபிள் பயர்பாக்ஸ் புரோகிராமினை மெமரி ஸ்டிக்கில் இன்ஸ்டால் செய்தது போல இதனையும் இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்து இயக்கி எப்படி டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள தண்டர்பேர்ட் தொகுப்பில் அக்கவுண்ட் உருவாக்கி இமெயில்களை டவுண்லோட் செய்து கையாண்டீர்களோ அதே போல இதிலும் செயல்படலாம். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் டவுண்லோட் செய்திடும் இமெயில்களெல்லாம் மெமரி ஸ்டிக்கிலேயே இடம் பெறும். எனவே மிக அதிக அளவில் இமெயில்களைப் பெறுபவர்கள் சற்று கவனத்துடன் அவற்றை டெஸ்க் டாப்பிற்கு அல்லது இணையத்தில் உள்ள ஸ்டோரேஜ் டிரைவ்களுக்கு மாற்றிவிட வேண்டும். இந்த தொல்லையைத் தவிர்க்க விடுமுறை நாட்களில் வெளியே செல்கையில் அவசியம் ஏற்பட்டால் மட்டும் இந்த மெமரி ஸ்டிக் இமெயில் டவுண்லோடிங் செயல்பாட்டை மேற்கொள்ளவும்.

ஓகே. உங்கள் ஸ்டிக் மூலம் நீங்கள் விரும்பும் வகையில் இணையம் செல்வதும் இமெயில் பார்ப்பதுவும் சரி. வேறு டெக்ஸ்ட் உருவாக்கும் செயல்பாடுகளை மெமரி ஸ்டிக் மூலம் மேற்கொள்வது எப்படி? அதிர்ஷ்டவசமாக நமக்கு ஓர் அருமையான வேர்ட் பிராசசிங் புரோகிராம் கிடைத்துள்ளது. எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு தரும் அனைத்து புரோகிராம் வசதிகளும் இதில் உள்ளன. அது ஓப்பன் ஆபீஸ் என அழைக்கப்படும் புரோகிராம் ஆகும்.

ஓப்பன் ஆபீஸ் சற்று பெரிய புரோகிராம். மெமரி ஸ்டிக்கில் 190 எம்பி இடம் எடுத்துக் கொள்கிறது. இதனை http://tinyurl.com/y84z89 என்ற தளத்திலிருந்து இன்ஸ்டால் செய்திடலாம். இதனை இன்ஸ்டால் செய்வது பயர்பாக்ஸ் மற்றும் தண்டர் பேர்டைக் காட்டிலும் எளிதானது. ஏனென்றால் லைசன்ஸ், கண்டிஷன் என்பதெல்லாம் கிடையாது. இது சற்று நேரம் பிடிக்கும் என்பதால் மெமரி ஸ்டிக்கில் பதியும்போது பொறுமையாக இதனைப் பதிய வேண்டும். இதுவும் செயல்படுகையில் சற்று மெதுவாகவே செயலாற்றும் என்றாலும் இது தரும் வசதிகளுக்காக இதனைப் பொறுத்துக் கொள்ளலாம்.

போட்டோக்களைக் கையாளவும் நமக்கு ஒரு போர்ட்டபிள் அப்ளிகேஷன் உள்ளது. இதனை எடிட்ணீ என்று அழைக்கின்றனர். இதனை www.portableapps.com/apps/ graphics_pictures/gimp_portable என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். இது மெமரி ஸ்டிக்கில் 18 எம்பி இடத்தைக் கேட்கிறது. இந்த பைலை டவுண்லோட் செய்த பின்னர் டபுள் கிளிக் செய்து Extract என்பதில் கிளிக் செய்திடவும்.

இது Gimp portable என்ற போல்டரை உருவாக்கும். இந்த போல்டரை அப்படியே மெமரி ஸ்டிக்கில் காப்பி செய்திடவும். பின் இன்ஸ்டால் செய்திடவும். பயர் பாக்ஸ், தண்டர் பேர்ட், ஓப்பன் ஆபீஸ் போல இது விண்டோஸ் மற்றும் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் நன்றாக இயங்குகிறது. போட்டோக்களைக் கையாளவும் ஒரிஜினல் ஆர்ட் ஒர்க் மேற் கொள்ளவும் தேவையான அனைத்து டூல்களும் இந்த புரோகிராமில் கிடைக்கின்றன. பெரும்பான் மையான இமேஜ் பைல்களை இது ஏற்றுக் கொள்கிறது.

மேலே சொன்னவை எல்லாம் கடமைகளை மேற்கொள்ள நமக்கு உதவிடும் போர்ட்டபிள் அப்ளிகேஷன்கள். பொழுது போக்குவதற்கான அப்ளிகேஷன்கள் ஒன்றுமே கிடையாதா? என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். VLC என்ற புரோகிராம் இதற்கெனவே தயாரிக்கப்பட்டு கிடைக்கிறது. மெமரி ஸ்டிக்கில் 17 எம்பி இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இதனை http://tinyurl.com/2erg6s என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். மேலே சொன்ன வழிகளிலேயே இதனையும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். எம்பி3, ஙிMஅ மற்றும் டிவ் எக்ஸ் வீடியோ போன்ற பலவகை ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை இந்த போர்ட்டபிள் புரோகிராம் மூலம் இயக்கலாம்.

பி.டி.எப். பைல்களை நாம் அடிக்கடி திறந்து படிக்க வேண்டியுள்ளது. சிலர் இந்த பைல்களை அறவே பயன்படுத்துவதில்லை. அப்படிப்பட்டவர்களின் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துகையில் நாம் பி.டி.எப். பைல்களை எப்படி படிக்க முடியும். இதற்கெனவே http://tinyurl.com/2Vr39c என்ற தளத்தில் Sumatra PDF என்ற புரோகிராம் கிடைக்கிறது. இதே போல Clamwin Portable என்ற புரோகிராம் ஆண்டி வைரஸ் புரோகிராமாகவும், 7Zip என்ற புரோகிராம் விண்ஸிப் புரோகிராம் போலவும் செயல்படுகின்றன.

ஒரு காலத்தில் செங்கல் ஒன்றில் பாதியளவு ஹார்ட் டிஸ்க் ஒன்று எடுத்துச் சென்று பயன்படுத்தும் விதத்தில் 20 எம்பி டேட்டாவை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. இன்று பாக்கெட்டில் பல ஜிபி டேட்டாவை எடுத்துச் செல்ல முடிகிறது. மேலே குறிப்பிட்ட போர்ட்டபிள் அப்ளிகேஷன்களை ஒரு மெமரி ஸ்டிக்கில் பதிந்து எடுத்து செல்வதன் மூலம் ஒரு கம்ப்யூட்டரை அல்லவா பாக்கெட்டில் எடுத்துச் செல்கிறோம்.

Sep 4, 2010

உங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள் - Free Memory Improve Master

நம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணினியின் Ram முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணினியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம், இன்னொரு விண்டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப்போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணினியின் வேகம் மெமரி அதிகமாக உபயோக படுத்தப்படும். நம் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இந்த குறைகளை தீர்க்கவே இந்த பதிவு.


இந்த மென்பொருளை நீங்கள் Install செய்து விட்டால் போதும் உங்கள் கணினியில் நீங்கள் எத்தனை ப்ரோக்ராம் ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் மெமரியை கட்டு படுத்தி உங்கள் கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும்.   இந்த மென்பொருளை நீங்கள் Download செய்ய உங்கள் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.


டவுன் லோட் செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup பைல் வந்திருக்கும். அதை இரண்டு முறை கிளிக் செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 
இதில் நான் மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து  வகையான பிரிவுகள்  நமக்கு தெரியும்.
  • Information Overview
  • Memory Optimization
  • System Tuneup
  • Process Management
  • Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும்.  
Information Overview : 
 இந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும். 


இந்த பிரிவில் நம் கணினி இப்பொழுது எவ்வளவு மெமரி உபயோக படுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த விண்டோவில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு மெமரி காலியாக உள்ளது என்று அர்த்தம். 

Memory Optimization 
இந்த பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • இந்த விண்டோவில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும் இவை இரண்டுமே நம் கணினியின் மெமரிய கட்டு படுத்த உதவும் வசதிகளாகும். 
  • இதில் உள்ள Fast Free என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே ஒரு மெசேஜ் விண்டோ வரும். 
  • அதில் உங்களுடைய கணினி இதற்க்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரிய கட்டு படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.   
  • இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணினியின் மெமரியை கட்டுபடுத்தும். 
  • இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள். 
அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதர்க்கும், நம் கணினியில் எந்த பைல்கள் எவ்வளவு மெமரியை உபயோகித்து கொள்கிறது போன்ற தகவல்கள். கண்டிப்பாக உங்கள் கணினி முன்பை விட வேகமாக இயலும்.

டுடே லொள்ளு 
Photobucket
அவுங்க கிரகத்துக்கு போறது எவ்ளோ சந்தோசம் பாருங்க 

நன்றி : சசி 

கணிணி பாதுகாப்பிற்க்கு Deep Freeze மென்பொருள்.

என்னதான் நல்ல ஆண்டிவைரஸ் உபயோகித்தாலும், சில சமயம் அவை வைரஸ்களை கட்டுபடுத்துவது இல்லை. இதனால் உங்கள் கணினியின் வேகம் குறைய வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இந்த வைரஸ்கள் முக்கியமான புரோகிராம் கோப்புக்களை காலி பண்ணிவிட்டால், அவ்வளவுதான் மீண்டும் OS-யை Install செய்தால்தான் முடியும்.
இது போண்ற பல பிரச்சனைகளிலிருந்து சிஸ்டத்தை காப்பாற்ற இப்போதெல்லாம் Deep Freeze என்ற மென்பொருளை பயன்படுத்துகிறார்கள். இந்த மென்பொருளை நிறுவி விட்டால், உங்கள் சிஸ்டத்தை வைரஸ் தாக்காது. தாக்கவும் முடியாது. Computer Lock என்று விவேக் சொல்லுவது போல உங்கள் கணினியை இந்த மென்பொருள் மூலம் பூட்டியாகிவிட்டது.
வைரஸ்கள் இணையம் மூலமாகவும், பென் டிரைவ், டிஸ்க் மூலமாகவும் வந்து கணினியை தாக்குகின்றன. வைரஸ் உள்ள பென் டிரைவ் மூலம் உங்கள் சிஸ்டத்துக்கு வைரஸ் வந்துவிட்டாலும், நீங்கள் சிஸ்டத்தை Restart செய்யும் போது அந்த வைரஸ் அழிந்துவிடும். மேலும் நீங்கள் தெரியாமல் Delete பண்ண கோப்புகள் கூட Restart செய்தால் அப்படியே இருக்கும். சுருக்கமாக சொன்னால் ”சி” டிரைவ் (அ) நீங்கள் OS Install பண்ணியுள்ள டிரைவ் முழுவதும் பாதுகாப்பாக இருக்கும். சிஸ்டத்தின் Administrative மட்டுமே இதை மாத்த இயலும்.
இணையதளத்தில் உலவும் அனைவருக்கும் இந்த மென்பொருள் முக்கியமானது. ஏனெனில் இணையத்தில் இருந்துதான் 90% வைரஸ்கள் சிஸ்டத்தை தாக்குகின்றன…
இந்த  மென்பொருளை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும் .

ரேபிட்ஷேரில் தேடலும் தரவிறக்கமும்

இனையத்தில் எப்படி கூகுளை தெரியாதவர்கள் இருக்கமுடியாதோ அதே போல ரேபிட்ஷேர் பற்றியும் தெரியாமல் இருக்கமுடியாது ஏதாவது ஒரு முக்கியமான பைல் தேடி தரவிறக்க முகவரி கிடைத்தால் அது ரேபிட்ஷேர் தள முகவரியாக இருக்கும் இதில் சிலருக்கு எப்படி இந்த ரேபிட்ஷேர் தளத்தில் தேடுவது என்பது தெரியாமல் இருக்கலாம் அப்படியே தேடி எடுத்த முகவரிகளில் தரவிறக்கம் செய்ய சென்றால் அங்கு ஒன்று உங்கள் ஐபி தற்போது உபயோகத்தில் இருக்கும் என செய்தி வரும் ஆனால் உண்மையில் நீங்கள் உப்யோகிக்க தொடங்கியிருக்கவே மாட்டீர்கள் அல்லது கொஞ்சம் நேரம் கழித்து முயற்சிக்க சொல்லி செய்தி வரும் சரி இது போல உள்ள பிரச்சினைக்கு தீர்வு இருக்கிறதா எனக்கேட்டால் அந்த தீர்வை பற்றித்தான் இந்த பதிவு.


முதலில் ரேபிட்ஷேர் தளத்தில் எப்படி தேடுவது என பார்க்கலாம் ரேபிட்ஷேர் தளத்தை பொருத்தவரை நேரடியாக தேடுதல் வசதி அந்த தளத்தில் இல்லை ஆனால் அதை நிவர்த்தி செய்வதற்காகவே வேறு சில தளங்கள் இருக்கின்றன என்றாலும் நான் இங்கு மூன்று தளங்களுக்கான முகவரி தருகிறேன் இந்த மூன்று தளத்தில் நீங்கள் ரேபிட்ஷேர் பைல்களை எளிதில் தேடலாம்.


ரேபிட்ஷேர் எஞ்ஜின்


ரேபிட்டாக்


ரேபிட்4மீ


சரி ரேபிட்ஷேர் பைல்களை கண்டுபிடித்து விட்டீர்கள் அடுத்து எப்படி இதை தரவிறக்கம் செய்வது நான் மேலே கொடுத்துள்ள மூன்று தளங்களிலிலும் தரவிறக்க வசதி இருக்கிறது ஆனால் அதில் சில முறை முழுவதுமாக தரவிரக்கமுடிவதில்லை அந்த பிரச்சினையை தீர்க்க இனையத்தில் எத்தனையோ மென்பொருள்கள் தளங்கள் இருந்தாலும் நான் உபயோகிப்பது ரேபிட்8 இந்த தளத்திற்கு சென்று உங்களின் ரேபிட்ஷேர் முகவரியை கொடுத்து விட்டால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை மேலும் இது Mega Upload , Mega Video , MP , Mega Shares , Hot File , Upload.To , File Factory , Deposit Filesபோன்ற தளங்களின் முகவரியை கொடுத்தாலும் அழகாக தரவிறக்கி கொடுத்துவிடும்


என்ன நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதா?

ரேபிட்ஷேர் பிரீமியம் தரவிறக்கம் இலவசம்

வணக்கம் நண்பர்க்ளே இந்த பதிவில் நாம் பார்க்கபோவது ரேபிட்ஷேர் பைல்கள் தரவிறக்கம் பற்றித்தான் சாதரணமாக மற்ற தளங்களுக்கும் இதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது இவர்கள் தேடுவதற்கான வசதி கூட அளிப்பதில்லை அதையே நாம் மூன்றாம் தளங்களின் வாயிலாகத்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கிறத, சில நேரங்களில் உங்கள் ஐபி தற்போது உபயோகத்தில் இருக்கிறது என்பது போல செய்தி வரும், ஆனால் நீங்கள் அந்த தளத்தை அப்போதுதான் திறந்திருப்பீர்கள் அது உங்கள் தவறு இல்லை உங்கள் ஐபி யை யாரும் தவறாக உபயோகிப்பதாகவும் அர்த்தம் இல்லை மாறாக உங்கள் சர்வீஸ் புரைவைடர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே ஐபி யை அந்த மொத்த ஏரியாவிற்க்கும் வழங்கியிருப்பார்கள்.

இந்த வசதியை வழங்குபவர்கள் நம்மிடம் ஒரு சிறிய உதவியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் அவர்கள் தளத்தை பலருடன் பகிர்ந்துகொள்வதன் வாயிலாக நல்ல டிராபிக்கை ஏற்படுத்த முடியும் அதன் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாய் அவர்களுக்கு இந்த வசதியை மேலும் சிறப்பாக கொடுக்க முடியும்தானே மேலும் அவர்கள் உங்களிடம் பிரீமியம் கணக்கு இருந்தாலும் நண்கொடை கொடுக்க சொல்கிறார்கள் ஆனால் கட்டாயமில்லை ஆனால் நம்மாள் அவர்கள் தள முகவரியை நாம் பல தளங்களிலும் பகிர்ந்து கொள்ள முடியும்தானே நாம் ஊக்குவிப்பதன் மூலமே மேலும் அவர்களால் சிறப்பாக செயல்படமுடியும்.

படத்தை கிளிக்குவதன் மூலம் அவர்கள் தளத்திற்கு செல்லலாம்.



இனி நீங்கள் செய்யவேண்டியது உங்கள் ரேபிட்ஷேர் தரவிறக்க முகவரியை அவர்கள் கொடுத்துள்ள உரலை இனைக்கும் கட்டத்தில் ஒட்டி விட்டு தரவிறக்க பொத்தானை கிளிக்கினால் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை நேரடியாக தரவிறங்கும் இவர்கள் தினமும் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பிரீமியம் கணக்குகளை இலவசமாக வழங்குவதன் மூலம் நமக்கு தரவிறக்க உதவுகிறார்கள் எனவே முடிந்தால் நீங்களும் இந்த தளத்தை பொது போரங்களில் உங்கள் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எந்த மென்பொருளையும் போர்ட்டபிளாக மாற்றலாம்

 சில தளங்களில் போட்டபிள் மென்பொருள் கிடைக்கும் ஆனால் எல்லா மென்பொருளுக்கும் கிடைக்குமாவென்றால் இல்லை என்பதாக பதில் இருக்கும் ஆனால் இங்கு நீங்கள் விரும்பும் எந்த மென்பொருளையும் போர்ட்டபிளாக மாற்றலாம் அதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கிறது ஆனால் பதிவின் நீளம் கருதி இப்போடு ஒன்றை மட்டுமே எழுதுகிறேன் மேலும் இந்த பதிவின் வரவேற்பை பொறுத்து அடுத்த வழிமுறையும் விரைவில் எழுதப்படும் சரி விஷயத்துக்குள் செல்வோம் நீங்கள் இந்த கையடக்க மென்பொருள் மாற்றி தரவிறக்கவும் இதன் அளவு 7எம்பி-க்கும் குறைவே இதை வின்ரார் கொண்டு விரித்ததும் படத்தில் இருப்பது போல இருக்கும் இது விலையுள்ள மென்பொருள்தான் ஆனால் நான் கொடுத்துள்ளது கிராக் செய்யப்பட்டது தான் இதுவும் ஒருவகை குற்றமே இனி உங்கள் எலியால் இருமுறை கிளிக்கவும் புதிய சிறிய விண்டோ திறக்கும் இதனுள்ளேயே இன்ஸ்டாலேசன் மற்றும் இதற்கான கீயும் இருக்கிறது.



இப்போது நீங்கள் Serial என்பதை கிளிக்கினால் ஒரு நோட்பேட் திறக்கும் அதில் ஐந்து சீரியல் எண்கள் இருக்கிறதா அதில் முதலாவதாக இருக்கும் கீ எண் தான் நமக்கு தேவையானது அதை காப்பி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.



இனி Install என்பதை கிளிக்கவும் இப்போது ஒரு புதிய விண்டோ திறக்கும்.



இனி I accept the terms in the License agreement என்பதன் அருகில் இருக்கும் கட்டத்தில் டிக் மார்க் குறி ஏற்படுத்தி பின்னர் Next என்பதை கிளிக்கவும்.



இனி இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் அதில் Serial Number என்பதில் நீங்கள் முன்னமே காப்பி எடுத்த சீரியல் எண்ணை முதல் கட்டத்தில் ஒட்டவும் இரண்டாவதாக கீழே இருக்கும் கட்டத்தில் உங்கள் விருப்பம் போல ஒரு பெயரை கொடுத்ததும் Install என்பதை கிளிக்கவும் கணினி பற்றி தெரியாதவர்களும் இதை பயன்படுத்த வேண்டுமென்பதற்காகத்தான் இத்தனை விளக்கவும் தெரிந்தவர்கள் பொறுத்துக்கொள்ளவும்.



இனி மென்பொருளில் கம்பைள் செய்யப்பட்டவைகளி உங்கள் கணினிக்கு காப்பியாகி கொண்டிருக்கும் Next என்பது எனாபிள் ஆனதும் Next கொடுக்கவும்.



இப்போது உங்கள் மென்பொருள் இன்ஸ்டாலேசன் முடிந்தது என்பதாக தோன்றும் இனி நீங்கள் Finish என்பதை கிளிக்கவும் அவ்வளவுதான் இன்ஸ்டாலேசன் முடிந்துவிட்டது.



இனி நீங்கள் உங்கள் கணினியின் Start ->Programs -> VMware -> ThinApp Setup Capture என்பதை கண்டுபிடித்து புரோகிராமை திறக்கவும்.



இப்போது திறந்திருக்கும் விண்டோவில் Next என்பதை கிளிக்கவும்.



திறக்கும் இந்த விண்டோவிலும் ஒன்றும் யோசிக்க வேண்டியது இல்லை Next என்பதை கிளிக்கவும்.



இனி இப்படியாக இருக்கும் இதில் நீங்கள் ஒன்றுமே செய்யவேண்டாம் தானகவே அடுத்த பக்கத்திற்கு சென்றுவிடும்.



இந்த பக்கம் வந்தவுடன் இந்த விண்டோவே மினிமைஸ் செய்துவிட்டு நீங்கள் எந்த மென்பொருளை போர்ட்டபிளாக மாற்ற விரும்புகிறீர்களோ அந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுங்கள், நிறுவி முடித்ததும் இரண்டு நிமிடம் கழித்து நீங்கள் மினிமைஸ் செய்து வைத்திருந்த விண்டோவை மேக்சிமைஸ் செய்து Next என்பதை சொடுக்கவும்.



இந்த பக்கம் வந்தவுடன் நீங்கள் நிறுவிய மென்பொருளின் ஸ்நாப்ஷாட் எடுக்க தொடங்கிவிடும் முடிந்ததும் தானகவே அடுத்த பக்கத்திற்கு செல்லும்.



இனி இப்படியாக பக்கம் இருக்கும் அதில் நீங்கள் நிறுவிய மென்பொருளின் .Exe மட்டும் தெரிவு செய்யவும் அதிகபட்சம் முதலாவதாக இருக்கும் மற்றவை தேவையில்லை, தெரிவு செய்ததும் Next என்பதை சொடுக்கி அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.



இந்த பக்கத்தில் USB flash / poratble media (stored in directory with application) என்பதை தெரிவு செய்து Next கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.



இந்த பக்கத்தில் Merged isolotion mode என்பதை தெரிவு செய்து Next கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.



இப்போது திறந்திருக்கும் விண்டோவில் Project Location என்பதை பிரவுஸ் செய்து நீங்கள் மாற்றும் போர்ட்டபிள் மென்பொருள் சேமிக்க விரும்பும் இடத்தை தெரிவு செய்யவும் அடுத்து அதன் கீழே இருக்கும் No compression (fastest for testing builds) என்பது தெரிவாகியிருக்கிறதா என பார்த்துக்கொண்டு Next என்பதில் கிளிக்கி அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.



இனி இப்படியாக வந்ததும் நீங்கள் ஒன்றும் செய்ய தேவையில்லை தானாக நாம் மாற்ற விரும்பிய மென்பொருளில் ரிஜிஸ்டரி குறிப்புகளை சேமித்ததும் அடுத்த பக்கம் சென்றுவிடும்.



இனி இப்படியான இறுதி பக்கம் வந்ததும் Build Now என்பதை கிளிக்கவும் இதன் மூலம் நமது போர்ட்டபிள் மென்பொருள் கம்பைள் செய்யப்பட்டுவிடும் அல்லது Browse Project என்பதை கிளிக்கி திற்க்கும் போல்டரில் build என்கிற பேட்ச் பைல் இருக்கும் அதை இருமுறை கிளிக்குவதன் மூலமாகவும் கம்பைள் செய்யலாம் அவ்வளவுதான்.



இப்போது உங்கள் போர்ட்டபிள் மென்பொருள் bin எனும் போல்டரின் உள்ளே தயாராய் இருக்கும் அங்கு உங்கள் போர்ட்டபிள் மென்பொருள் தவிர மற்ற அனைத்தையும் அழித்து விடுங்கள் அது எதுவும் தேவையில்லை மேலும் நீங்கள் ஏற்கனவே நிறுவிய மென்பொருளை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு உங்கள் போர்ட்டபிள் மென்பொருளை இயக்கவும், நீங்கள் போர்ட்டபிள் மென்பொருள் இயக்க தொடங்கியதும் சில போல்டர்கள் உருவாகும் அதை நீங்கள் அழித்தலும் மீண்டும் மென்பொருள் இயக்க தொடங்கியதும் அதேபோல போல்டர்கள் உருவாகும் எனவே அந்த போல்டரில் வலது கிளிக்கில் பிராப்பர்ட்டிஸ் திறந்து Hiden கொடுத்து ஓக்கே கொடுத்து விடவும்.

நான் விளையாட்டு மென்பொருள் இன்னும் சில மென்பொருள்களை சோதித்து இயக்கி பார்த்துவிட்டேன் எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் துரதிருஷ்டவசமாக NHM Writer போர்ட்டபிளாக மாற்றினால் போனாடிக் இயங்கவில்லை தமிழ்99 யூனிக்கோட் மட்டுமே இயங்குகிறது எனவே தமிங்கிலிஷ் அடிப்பவர்களுக்கு இது உதவாது.

நன்றி : ஞானசேகர்

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்