தித்திக்கும் திருநாளாம்!
தீபாவளி ஒரு நாளாம்!
தீப்பொறிகள் விளையாடும்
திரும்பிய திசையெங்கும்.
வருடத்தில் ஒரு நாளாம்!
வசந்தத்தை தரும் நாளாம்!
வான வேடிக்கையை பார்த்து
வருத்தத்தை மறந்திடுவோம்.
ஒளிவீசும் திருநாளாம்!
ஒலி கேட்கும் ஒருநாளாம்!
ஓயாமல் வெடித்திடுவோம்-இவ்
ஒருநாளில் துன்பம் மறந்திடுவோம்.
புத்தாடை உடுத்திடுவோம்!
புன்னகையில் ஜொலித்திடுவோம்!
கவனத்துடன் வெடித்திடுவோம்
கலைப்பின்றி மகிழ்ந்திடுவோம்...