முன்பெல்லாம், கம்ப்யூட்டரை முதலில் செட் செய்திடுகையிலேயே, ஹார்ட் டிஸ்க்கினைப் பல பிரிவுகளாகப் (Drives) பிரித்து அமைப்பார்கள். பின்னர், அவற்றை மீண்டும் கூடுதல் பிரிவுகளாகவோ, அல்லது ஏதேனும் ஒரு பிரிவினை, இரண்டு அல்லது மூன்றாகவோ பிரிப்பது என்பது இயலாத செயலாக இருந்தது.
ஆனால், காலப் போக்கில், ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கூட, அதன் பிரிவுகளில், உட் பிரிவுகளை ஏற்படுத்தும் வகையில் பல இலவச டூல் புரோகிராம்கள் இணையத்தில் கிடைத்து வருகின்றன.
இவற்றைப் பொதுவாக பார்ட்டிஷன் டூல் புரோகிராம் என அழைக்கின்றனர். இவற்றில் மேஜிக் பார்ட்டிஷன் புரோகிராம் என்பது பலராலும் பயன்படுத்தப்படும் டூல் ஆகும்.
இணையத்தில் இந்த டூல் சார்ந்த புரோகிராம்கள் குறித்துத் தேடுகையில், எளிய,ஆனால் அதிகப் பயனுள்ள புரோகிராம் ஒன்று தென்பட்டது. அதன் பெயர் மினி டூல் பார்ட்டிஷன் விஸார்ட் (MiniTool Partition Wizard).
இதனைhttp://www.partitionwizard.com/freepartitionmanager.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இவற்றின் பயன்பாடுகள் குறித்து இங்கே காணலாம்.
இந்த புரோகிராம் மூலம் நாம் மேற்கொள்ளக் கூடிய சில சிறப்பான பயனுறை செயல்பாடுகள்:
1. ஒரு பார்டிஷனை இரண்டாக, எளிதாகப் பிரிக்கலாம்.
2. அனைத்து பிரிவுகளையும், அல்லது குறிப்பிட்ட ஒரு பிரிவினை மற்றவற்றிற்கு இணையாக அமைக்கலாம்.
3. டேட்டா இழப்பு எதுவுமின்றி, ஒரு பிரிவின் அளவைக் குறைக்கலாம். அல்லது நகர்த்தலாம். பிரிவு ஒன்றை உருவாக்கலாம்; பார்மட் செய்திடலாம்; நீக்கலாம்.
4. பார்ட்டிஷன் பார்மட்டினை FAT வகையிலிருந்து NTFS பார்மட்டுக்கு மாற்றலாம்.
5. பிரிவுகளை மறைக்கலாம்; மறைத்ததை மீண்டும் கொண்டு வரலாம். ட்ரைவ் லேபில் எழுத்தை மாற்றலாம்.
6. பிரிவுகளை இணைக்கலாம்.
7. ஒரு பிரிவில் உள்ளதை அப்படியே காப்பி செய்து, ஒதுக்கப்படாத இடத்தில், அதிக திறன் கொண்ட செயல்பாட்டினைத் தரும் வகையில் அமைக்கலாம்.
8. டேட்டாவினை பேக் அப் செய்திடலாம்; அல்லது எந்தவித இழப்புமின்றி நகர்த்தலாம்.
9. டிஸ்க் ஸ்கேன் செய்து அழிக்கப்பட்ட பைல்களை மீட்டு எடுக்கலாம் அல்லது கெட்டுப்போன இடத்திலிருந்து மீட்டு எடுக்கலாம்.
10. டிஸ்க் ஒன்றினை முழுவதுமாக, இன்னொரு டிஸ்க்கிற்கு காப்பி செய்திடலாம். இதற்கு data clone technology என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
11. டிஸ்க்கின் டேட்டாவினை எந்த இழப்புமின்றி, பத்திரமாக பேக் அப் செய்திடலாம்.
12. டிஸ்க் எந்த இடத்திலேனும் கெட்டுப் போயுள்ளதா என அறிந்து, அறிக்கையாகத் தர டிஸ்க் சர்பேஸ் டெஸ்ட்டினை (Disk Surface Test) இதில் மேற்கொள்ளலாம்.
நன்றி : anbuthil.com