Popular Posts

Showing posts with label கணினி நெட்வொர்கிங். Show all posts
Showing posts with label கணினி நெட்வொர்கிங். Show all posts

Mar 29, 2011

கணிணி நெட்வொர்கிங் பாகம் 3

விண்மீன் வலையமைப்பு:

Star_Topology.png
                                             விண்மீன் வலையமைப்பு (star network) இன்று கணினி வலையமைப்பில் மிகவும்
பரவலாகப் பாவிக்கப்பட்டு வரும் வலையமைப்பாகும். இது ஈதர்நெற் தொழில் நுட்பத்தில் பாவிக்கக்கூடியது.
இவ்வகை வலையமைப்பில் ஒவ்வொரு கணினியும் நிலைமாற்றி (switch) அல்லது கூடுமையத்துடன் (ஹப், hub)
இணைக்கப்பட்டிருக்கும். இதனால் ஏதாவது ஒரு மின்கம்பி (cable) அறுந்தாலும் மீதி வலையமைப்புத் தொடர்பு
அறாமல் இருக்கும். வளைய வலையமைப்பும் (Ring network) உண்மையில் விண்மீன் வலையமப்பு போன்றே
இணைக்கப்படும், பின்னர் மென்பொருள் ஊடாக வளைய வலையமைப்பு நடைமுறைப்படுத்தப்படும்.
விண்மீன் வலையமைப்பில் எல்லா வலையைப்பில் உள்ளனவும் நடு நிலையத்தில் இணைக்கபடுவதால்
இவ்வகை இணைப்புக்கள் பழுதடைவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகும்.

பெருநகர் பரப்பு வலையமைப்புகள் விண்மீன் வலையமைப்பு முறையிலேயே இணைக்கப்படுகின்றது.

நன்மைகள்

* சிறந்த வினைத்திறன்: இவ்வகையான வலையமைப்பு இணைப்பில் 3 கருவிகளும் 2 இணைப்பும்
மாத்திரமே இணைக்கப்படுவதாலும் இதன் நடுப்பகுதியில் கூடுதல் வேலை இருந்தாலும் கூட அவை
கையாளக்கூடியவையே. ஒருபகுதியில் உள்ள மிக அதிகமான வலையமைப்புப் பயன்பாடு
வலையமைப்பில் உள்ள ஏனைய கருவிகளைப் பாதிக்காது.
* கருவிகளைப் பிரித்தல்: ஒவ்வொரு கருவியும் வலையமைப்பில் தனியே நிலைமாற்றியுடனோ
அல்லது கூடுமையத்துடனோ (ஹப் உடனோ) இணைக்கப்படுவதால் தனித்தனியாக தவறுகள்
ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே.
எல்லா கருவிகளுமே கூடுமையத்துடன் (ஹப் அல்லது சுவிச்சுடன்) இணைக்கப்படுவதால்
கூடுமையத்தை மேம்படுத்துவதன் மூலம் வலையமைப்பை மேம்படுத்தலாம்.
* இலகுத்தன்மை: இத்தொழில்நுட்பமானது இலகுவாக விளங்கக்கூடியதாக இருப்பதால் இதை
உருவாக்கி பராமரிப்பது இலகுவாகும். பழுது ஏற்பட்டாலும் இலகுவாக பிழையை அடையாளம்
காணக்கூடியதாக இருக்கும்.

தீமைகள்

வலையமைப்பில் உள்ள எல்லா கருவிகளுமே கூடுமையத்துடன் இணைக்கப்படுவதாலகூடுமையம்
பழுதடைந்தால் முழு வலையமைப்பும் பயன்படுத்த முடியாததாகிவிடும்.


http://upload.wikimedia.org/wikipedia/commons/4/4f/RING_Topology.பங்

வளைய வலையமைப்பு


வளைய வலையமைப்பு

வளைய வலையமைப்பு
        வளைய வலையமைப்பு என்பது கணினி வலையமைப்பில் ஒரு வகையாகும். இதில் ஒவ்வொரு
கணினியும் மற்ற இரு கணினிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு தொடர்ந்து கணினிகள்
இணைக்கப்பட்டு ஒரு வளையத்தை உருவாக்குகின்றன. இதுவே வளைய வலையமைப்பு என்று
அழைக்கப்படுகிறது. வளைய வலையமைப்பில் எந்த இரண்டு இணைப்பிற்கும் ஒரே வழியே உள்ளதால்
ஓர் அந்தத்தில் (Node) உள்ள இணைப்பு பழுதடைந்தால் முழுவலையமைப்புமே பாதிப்படையும்.
கண்ணாடியிழைகளூடாகத் தரவுப் பரிமாற்றத்தில் (FDDI) வலையமைப்பில் பிழை ஏற்படும் போது
மணிக்கூட்டுத் திசையாகவும் அதற்கு எதிர்த் திசையாகவும் தரவு அனுப்படுவதால் இந்தப் பிரச்சினை
அங்கு இல்லை. இது C வளைய வலையமைப்பு அல்லது ஐபிஎம் டோக்கின் றிங் வலையமைப்பு
எனப்படும் இங்கு பௌதீகரிதியாக (Physically) விண்மீன் வலையமைப்பு மாதிரி நடுவில் கணினி சுவிச்சுடன்
இணைக்கப்பட்டிருக்கும் பின்னர் தர்க்கரீதியாக வளைய வலையமைப்பில் நடைமுறைப்படுத்தப்படும்.
பெரும்பாலான வலையமைப்புக்கள் மேலதிகமாக சுழலும் திசைக்கு எதிராகவும் ஓர் வலையமைப்பை
ஏற்படுத்திக்கொள்ளும்.

அநுகூலங்கள்

  • பழைய வலையமைப்பில் எல்லாச் சாதனங்களுமே டோக்கின் (Token) ஐப் பெற்று அதை அநுப்பக்கூடிய வசதி.
  • அதிக வேலைப் பழுவுள்ள வலையமைப்பில் விண்மீன் வலையமைப்பை விட வினைத்திறனாக இயங்கக்கூடியது.
  • டோக்கின் றிங் ஐப் பாவித்துப் பெரிய வலையமைப்பை உருவாக்கலாம்.
  • ஒவ்வொரு கணினிக்கும் இடையிலான தொடர்பை நிர்வாகிக்க கணினி வழங்கி (சர்வர் server) தேவையில்லை.

பிரதிகூலங்கள்

  • ஒரு ஒழுங்காக வேலை செய்யாத கணினி அல்லது வலையமைப்பு அட்டை முழு வலையமைப்பிற்குமே பிரச்சினையை உண்டு பண்ணும்.
  • இவ்வலையமைப்பில் இணைப்புக்களை நகர்த்துதல், சேர்த்தல் மற்றும் சாதனங்களை மாற்றுதல் வலையமைப்பைப் பாதிக்கும்.
  • சாதாரண ஈதர்நெட் வலையமைப்பு அட்டையை விட இந்த வலையைமைப்பு அட்டை விலைகூடியது.
  • சாதாரண ஈதர்நெட் வலையமைப்பை விட இந்த வலையைமைப்பு மெதுவானது.

கணினி நெட்வொர்கிங் - பாகம் 2

 * Communication மீடியம்
     (i) கேபிள் ===============================>NIC ,HUB ,Switch ,cable ................
     (ii) கம்பியில்லா தொடர் இணைப்பு ========>கம்பியில்லா தொடர் இணைப்பு NIC , ரௌட்டர்

கேபிள் வகைகள்
 * Co-axial cable
         (i) Thinnet Cable
                 Data transfer speed limit 185 meters
       
  (ii) Thick-net cable
                 Data transfer speed limit 500 meters
* UTP Cable (Unshielded Twisted Pair)
        * Cat 3=========> Data transfer Speed 10Mbps
        * Cat 5=========> Data transfer Speed 100Mbps
        * Cat 5e&6======> Data transfer Speed 1000Mbps

220px-UTP_cable.jpg
* UTP Cable standard color
    01. Orange
    02. Orange/White
    03. Blue
    04. Blue/White
    05. Green
    06. Green/White
    07. Brown
    08. Brown/White

* Fiber optic Cable  
Networking Devices :
      (i) HUB

images?q=tbn:ANd9GcQQLjaP2M86TjBJ7uaJuh8kzN-8SJSk_F_7uYXbwbHhZ512L1jQ

      (ii) Switch
images?q=tbn:ANd9GcRhz1UaYeq0e-d0TfE3IuypMDkBGE05AGISsWT-Bwb2qR7iFXU7

வலையமைப்பு இணைப்பு முறைப் படி (Topology )

  • பாட்டை வலையமைப்பு (Bus Network)
  • விண்மீன் வலையமைப்பு (Star Network)
  • வளைய வலையமைப்பு (Ring Network)
  • கண்ணி வலையமைப்பு (Mesh Network)
  • விண்மீன்-பாட்டை வலையமைப்பு (Star-bus Network)

பாட்டை வலையமைப்பு :

                         பாட்டை வலையமைப்பு (Bus Topology) என்பது வலையமைப்பு வடிமைப்பில் ஒன்றாகும்.
இதில் வாங்கிகள் (கிளையண்ட்ஸ்) ஒரு பொதுவான ஓர் ஊடகத்தைப் பாவிக்கும் அது பாட்டை (பஸ்)
என்று அழைக்கப்படும். பொதுவாக கணினியின் தாய்பலகையில் (மதபோட் Motherboard) கணினி
வலையமைப்புக்களிலும் இதைக் காணலாம்.

பாட்டை வலையைப்பானது பல்வேறு வாங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கு இலகுவான வழிமுறையாக
இருந்தாலும் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட வாங்கிகள் தொடர்பினை மேற்கொள்ள முயன்றால்
தரவுப் பொதிகள் (Data packets) மோதலிற்கு உள்ளாகும். சில வலையைப்புக்களில் தரவுப் பொதிகளில்
மோதற் தவிர்பு யுக்தியைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலான வலையைப்புக்களில் பல் அணுக்கத்திற்கான
காவியை உணரும் (Carrier Sense Multiple Access) தொழில் நுட்பத்தையே கொண்டுள்ளன.
இப்பொழுது கம்பியிணைப்புக்கள் பெரும்பாலும் இதைக் கைவிட்டுவிட்டாலும் கம்பியற்ற இணைப்புக்கள்
(Wireless) இணைப்புக்கள் பாட்டை இணைப்புக்களாகக் கருதலாம். பாட்டைத் வலையமைப்பில் நேரடியாகவே
புதிய சாதனங்களை இணைத்துக் கொள்ளலாம்.

Advantages:
  • இலகுவாக நடைமுறைப்படுத்தக் கூடியதும் விரிவாக்கப்படக்கூடியதும்.
  • தற்காலிக அல்லது சிறிய வேகம் ஒரு பிரச்சினையாக இல்லாதவிடத்தில் இது சிறந்த தீர்வாகும்.
  • ஏனைய வலையமைப்புக்களை விட மலிவானது.
  • ஒரே ஒரு கம்பியே பயன்படுவதால் இலாபகரமானது.
  • கம்பியில் உள்ள வழுக்களை இலகுவாகக் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.
Disadvantages:
  • குறைந்தவிலான கணினிகளையே இணைக்கலாம். அத்துடன் ஓரளவுக்குத்தான் கம்பியை நீட்டிப் பயன்படுத்தலாம்.
  • கம்பியில் பிரச்சினை ஏற்பட்டால் முழு வலையமைப்புமே செயலிழந்து விடும்.
  • நீண்ட பாவனையில் பராமரிப்புச் செலவுகள் அதிகம்.
  • வலையமைப்பு வினைத்திறனானது அதிக கணினிகளை இணைக்கும் பொழுது குறைவடையும்.
  • அந்தங்களில் முறையாக முடிவடைய வேண்டும்.
  • இது ஏனைய வலையைப்புகளை விட மெதுவானது.

Mar 28, 2011

கணினி நெட்வொர்கிங் பாகம்-1

வணக்கம் நண்பர்களே!
இன்று நாம் காணப்போவது கணினி நெட்வொர்கிங்.

கணினி நெட்வொர்க்கிங்க்கு தேவையான

(i) குறைந்த வன்பொருள் Requirements :

* NIC (நெட்வொர்க் இண்டர்பேஷ் கார்டு)

* Communication மீடியம்
(i) கேபிள்
(ii) கம்பியில்லா தொடர்இணைப்பு

* நெட்வொர்கிங் devices
(i) ஹப்(HUB)
(ii) சுவிட்ச்

(ii) மென்பொருள் requirements :

* OS (இயங்குதளம்)
(எ .கா : MS DOS , லினக்ஸ் ,நோவல்........)
* NIC Drivers
* Protocal

நெட்வொர்க் இண்டர்பேஷ் கார்டில் உள்ள வகைகள் :

* ARCNET கார்டு ------------------------------> இதன் வேகம் 2MBPS ,

* ETHERNET கார்டு -----------------------------> இதன் வேகம் 10MBPS ,

* FAST ETHERNET கார்டு ------------------------> இதன் வேகம் 10 /100MBPS ,

* GIGABYTE N/W கார்டு -------------------------> இதன் வேகம் 10/100/1000MBPS.

இதில் 10 & 100 MBPS ஆனது மூன்று கணினி கார்டுகளுக்கும் இடையில் உள்ள தகவல்

பரிமாற்ற வேகம் ஆகும்.

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்