Popular Posts

Showing posts with label விண்டோஸ் 7. Show all posts
Showing posts with label விண்டோஸ் 7. Show all posts

Oct 18, 2010

விண்டோஸ் 7 இல் XP MODE

 நீங்கள் உங்கள் கணணியில் விண்டோஸ் 7 ஐ புதிதாக நிறுவியிருந்தால், விண்டோஸ் XP இல் செயல்பட்ட சில மென்பொருட்களை விண்டோஸ் 7 இல்செயற்படுத்த இயலாமல் இருக்கும். இதற்கு விண்டோஸ் 7 இல் ஒரு வழி உள்ளது.

அது Windows XP Mode (XPM) ஆகும். இதனை செயற்படுத்த முதலில் Microsoft® Hardware-Assisted Virtualization Detection Tool இனை தரவிறக்கி அதன் மூலம் உங்களது கணணி வன்பொருட்கள் Windows XP Mode (XPM) உடன் ஒத்தியங்குமா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் கீழ்வரும் இணைப்பிலிருந்து பொருத்தமான விண்டோஸ் 7 வெளியீடுக்குரிய Windows XP Mode (XPM) ஐ முதலிலும் Windows Virtual PC இனை இரண்டாவதாகவும் உங்கள் கணணியில் நிறுவி பழைய மென்பொருட்களை விண்டோஸ் 7 இல் செயற்படுத்தி பயன்பெறுங்கள்.

இதற்கான இணைப்பு இங்கே

Sep 22, 2010

விண்டோஸ் 7 டிப்ஸ்

டாஸ்க்பார் ஹாட் கீ
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பலவிதமான ஷார்ட் கட் கீ மற்றும் ஹாட் கீ தொகுப்புகளைத் தந்துள்ளது. கீழே டாஸ்க்பாரில் நாம் இயக்கக் கூடிய ஹாட் கீகளைக் காணலாம்.
டாஸ்க்பாரில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனில் இயங்கும் பைல்கள் மொத்தமாக இருப்பின், அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று கண்ட்ரோல் + கிளிக் செய்தால், அந்த குரூப்பில் உள்ள பைல்கள் வரிசையாகக் காட்டப்படும்.
டாஸ்க்பாரில் உள்ள ஐட்டம் ஒன்றில், கண்ட்ரோல் + ஷிப்ட்+கிளிக் செய்தால், அந்த புரோகிராம் அட்மினிஸ்ட்ரேட்டர் திறப்பது போலத் திறக்கப்படும். இதே போல டாஸ்க் பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட் + கிளிக் செய்தால், அதற்கான புரோகிராம் இயக்கத்தை இன்னொரு விண்டோவில் திறக்கும்.
டாஸ்க்பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட + ரைட் கிளிக் செய்தால், அந்த புரோகிராமிற்கான விண்டோ மெனு காட்டப்படும்.
கால்குலேட்டர்
பொதுவாக விண்டோஸ் சிஸ்டத்தில் கால்குலேட்டர் ஒன்று அக்செசரீஸ் பட்டியலில் தரப்படும். இது சாதாரணமான கணக்குகளைப் போட்டுப் பார்க்க பயன்படும். கூட்டல், பெருக்கல், கழித்தல் மற்றும் வகுத்தல் கணக்குகளை இதில் மேற்கொள்ளலாம்.
விண்டோஸ் 7 தொகுப்புடன் கிடைக்கும் கால்குலேட்டரில் பல புதிய சிறப்புகள் உள்ளன. விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனு மேலாக உள்ள சர்ச் பாரில் CALC என டைப் செய்து என்டர் அழுத்தவும். உடன் கால்குலேட்டர் கிடைக்கும். இதன் மேலாக உள்ள View என்பதில் கிளிக் செய்திடவும். இதன் நேர் கீழாக கால்குலேட்டர் கட்டமைப்பை மாற்றிக் காணும் வகையில் ஆப்ஷன்ஸ் தரப்படும். இவை standard, scientific, programmer மற்றும் statistics என நான்கு வகைகளில் கிடைக்கும். மேலும் View> Worksheets என்ற பிரிவில் சென்றால் நம் கடன் தொகைக்கான மாதம் கட்ட வேண்டிய தொகையினைக் கணக்கிடும் வசதி உள்ளதனைப் பார்க்கலாம். இவை எதுவும் வேண்டாம் என பின் நாளில் எண்ணுகையில் ஙடிஞுதீ>ஆச்ண்டிஞி என்பதனை அழுத்தினால் போதும். சாதாரண கால்குலேட்டர் கிடைக்கும்.
விண்டோஸ் 7 வைத்திருப்பவர்கள் இந்த கால்குலேட்டரை இயக்கிப் பாருங்கள். பின் சாதாரண கணக்குகளுக்கான கால்குலேட்டரை மூட்டை கட்டி வைத்திடுவீர்கள்.
கிளாசிக் டாஸ்க் பார்
புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறியவுடன், நீங்கள் புதிய வடிவிலான டாஸ்க் பாரினைப் பார்த்து வியந்திருப்பீர்கள். அது உங்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. செவ்வக வடிவிலான பட்டன்களுக்குப் பதிலாக, சிறிய பட்டன்களைக் காணலாம். இது பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு பழைய வடிவிலான டாஸ்க் பார் தான் பிடிக்கிறது. இவர்கள் புதிய வடிவத்தைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணியிருந்த எனக்கு, டாஸ்க் பார் ப்ராப்பர்ட்டீஸ் பார்த்த போது பழைய வகைக்கு மாறிக் கொள்ளலாம் என்று தெரிய வந்தது. நீங்களும் விரும்பினால் கீழ்க்கண்டபடி அதனை செட் செய்திடலாம்.
டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Taskbar buttons என்ற கீழ் விரி மெனுவினைக் காணவும். இதில் Combine when taskbar is full என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அந்த புரோகிராம் பெயருடன் நீளமான சதுரத்தில், முன்பு காட்டப்பட்டது போல காட்சி அளிப்பதனைக் காணலாம்.

Sep 17, 2010

எவ்வாறு windows 7 ஐ USB drive ல் இருந்து install செய்வது?

முதலில் இதன் சிறப்பு என்ன என்பதை
பார்ப்போமானால் Windows 7ஆனது DVD களிலேயே கிடைக்கும் DVD Drive
இல்லாதவர்கள் USB Drive மூலமாக Windows 7 னை Install செய்து கொள்ளலாம்
அதே போல விரைவாகவும் Install செய்து கொள்ளலாம்....

தேவையானது:
*USB Flash Drive (Minimum 4GB)
*Windows 7 or Vista files.

இனி எவ்வாறு Windows 7 bootable ளினை USB Flash ல் உருவாக்குவது என்று பார்ப்போம்.

1.USB Portல் USB Flash Drive யினை செருகவும்
2. USB Flash Drive யினை NTFS ஆக Format செய்யவும்
3. Windows7/Vista DVD யினை அதற்குரிய Drive ல் இடவும்
4. பின் dvd Drive மற்றும் Flash Drive களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை (drive letter) பார்க்கவும். My Computer ல் இதனை காணலாம்
(இங்கு நான் DVD Drive க்கு 'D' யும் Flash Drive க்கு 'H' எனவும் கொடுத்துள்ளேன்
5.Command Prompt ஐ திறக்கவும்
*Type cmd in Start menu search box and hit Ctrl+ Shift+ Enter.
அல்லது
*Start menu > All programs > Accessories, right click on Command Prompt and select Run as administrator.
6. Command Prompt ல் பின்வருவதை டைப் செய்து என்டர் தட்டவும்

D: CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்
இங்கு D பதிலாக உங்கள் DVD drive letter யினை தரவும்
அடுத்து CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்

7. BOOTSECT.EXE /NT60 H: என டைப் செய்து என்டர் தட்டவும்.
இங்கு H பதிலாக உங்கள் Flash drive letter யினை தரவும்



8. Windows 7/Vista DVD உள்ள கோப்புகள் அனைத்தையும் USB flash drive க்கு கொப்பி செய்யவும்
9. இனி உங்கள் flash Drive ஆனது windows 7 bootable Flash Drive ஆக மாறிவிட்டது..
இனி நீங்கள் எந்தக் கணணிக்கும் உங்கள் windows 7 bootable Flash Driveல் இருந்து Windows7னை நிறுவிக் கொள்ளலாம்..
------
Bios ல் boot priority யினை USB from the HDD or CD ROM drive க்கு மாற்றி பின் வழமை போலவே நிறுவிக் கொள்ளலாம்------

விண்டோஸ்-7 தீர்வுகள் கைவசம்

விண்டோஸ் 7 ஏறத்தாழ அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக மாறி வருகிறது. கம்ப்யூட்டர் திறன் இந்த சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ள, அதிகமாக இருக்க வேண்டும் என்றாலும், நவீன வசதிகளை நாமும் அனுபவிப்போமே, ஏன் அவற்றை விலக்க வேண்டும் என பலரும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பல சின்னஞ்சிறு வசதிகள் நேரடியாக அறிந்து கொள்ள முடியாத வகையில் தரப்பட்டுள்ளன. இவை நம்முடைய பல பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதாய் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1.பிரச்னைகளைப் பதிவு செய்: (PSRProblems Step Recorder) நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில் ஏதேனும் ஒரு பிரச்னையை எதிர் கொள்கிறோம். அது எதனால் ஏற்படுகிறது, அல்லது அந்த பிரச்னை தான் என்ன என்று நம்மால் விளக்க இயலவில்லை. இதற்கான தீர்வு தான் Problems Step Recorder என்னும் வசதி. பிரச்னைகள் ஏற்படுகிறது எனத் தெரிந்தால், அந்த அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்கும் முன், ஸ்டார்ட் கிளிக் செய்து, PSR என டைப் செய்து, என்டர் தட்டவும். அதன் பின்னர் Start Record என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், நீங்கள் கம்ப்யூட்டரில் என்ன செய்தாலும், செலக்ட் செய்தாலும், கிளிக் செய்தாலும், டைப் செய்தாலும் அவை அனைத்தும் பதியப்படும். ஒவ்வொரு திரை மாற்றத்தினையும் காட்சிகளாக எடுத்துப் பதிந்து கொள்ளும். இவை அனைத்தையும் சுருக்கி ஒரு MHTL பைலாக உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கும். இதனை விரித்துப் பார்த்து எங்கு பிரச்னை ஏற்பட்டது எனத் தெரிந்து கொள்ளலாம். அல்லது பிரச்னையைத் தீர்க்க வரும் கம்ப்யூட்டர் டெக்னீஷியனிடம் காட்டி தெரிந்து கொள்ளலாம்.

2.”சிடி’யில் இமேஜ்: மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு வசதியை, இம்முறை மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் தந்துள்ளது. அது சிடி மற்றும் டிவிடிக்களில் I.S.O. . இமேஜ்களை பதிவதுதான். கம்ப்யூட்டரில் உள்ள ஐ.எஸ்.ஓ. இமேஜ் மீது டபுள் கிளிக் செய்து, காலியாக உள்ள சிடி வைத்திருக்கும் ட்ரைவைத் தேர்ந்தெடுத்து, Burn என்பதில் கிளிக் செய்தால், டிஸ்க்கில் இமேஜ் எழுதப்படும்.

3. பிரச்னைகளைத் தீர்க்க: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பிரச்னை ஏற்பட்டால், ஏடாகூடமாக அது செயல்பட்டால், அதன் காரணம் உங்களுக்குத் தெரியவில்லை என்றால், Control Panel > Find and fix problems (or ‘Troubleshooting’) எனச் சென்று, பிரச்னைகளைக் கண்டறியும் பல சிறிய தொகுப்புகளைக் காணலாம். இவற்றைக் கிளிக் செய்து பிரச்னைகளைக் கண்டறிந்து, நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் சரி செய்து, சிஸ்டத்தை கிளீன் செய்தால், சிஸ்டத்தின் பிரச்னைக்குரிய செயல்பாடு தானாகவே சரி செய்யப்படும்.

4. ஆபத்துக்கால “சிடி’: நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திருந்தால், சிஸ்டத்தில் பிரச்னை ஏற்பட்டு இயங்கா நிலை ஏற்படும் காலங்களில் பயன்படுத்த, சிஸ்டம் பூட் செய்திட சிடி ஒன்றை மிக எளிதாக உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். Click Start > Maintenance > Create a System Repair Disc எனச் சென்று, ஆபத்துக்காலத்தில் கம்ப்யூட்டர் பூட் செய்திட சிடி ஒன்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

5. கம்ப்யூட்டரைச் சிறுவர்களிடமிருந்து காப்பாற்ற: நீங்கள் இல்லாத போது, சிறுவர்கள், சில வேளைகளில் பெரியவர்களும் கூட, பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, பிரச்னையை உருவாக்கு கின்றனரா? அல்லது இயக்கிப் பார்க்கக் கூடாத அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறார்களா? இவை உங்கள் நிறுவனம் நீங்கள் பயன்படுத்தத் தந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்கான புரோகிராமாக இருக்கலாம். இவற்றைத் தடுக்க, AppLocker என்ற ஒரு புரோகிராம் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ளது GPEDIT.MSC என்ற புரோகிராமினை இயக்கி, Computer Configuration > Windows Settings > Security Settings > Application Control Policies > AppLocker எனச் சென்று எப்படியெல்லாம், அப்ளிகேஷன்களை இயக்குவதை நீங்கள் தடுக்கலாம் மற்றும் அனுமதிக்கலாம் என்று பாருங்கள்.

6. கூடுதலாக கணக்கிடும் வசதி: விண்டோஸ் 7தரும் கால்குலேட்டர் பார்ப்பதற்கு, விஸ்டாவில் இருந்த கால்குலேட்டர் போல இருந்தாலும், இதன் Mode என்பதைக் கிளிக் செய்து பார்த்தால், இந்த கால்குலேட்டர் தரும் கூடுதல் வசதிகளை அறிந்து கொண்டு பயன்படுத்தலாம்.

7. மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ரெஸ்டோர்: முந்தைய நாள் ஒன்றில் இருந்த நிலைக்கு, நம் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்லும் வசதிதான் சிஸ்டம் ரெஸ்டோர். இதனால், ஏதேனும் வைரஸ் தாக்குதல்கள், அப்ளிகேஷன் சாப்ட்வேர் இயக்கப் பிரச்னைகள் இருந்தால், அவை எதுவும் இல்லாத நாள் ஒன்றுக்கு உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று இயக்கலாம். ஆனால் எந்த அப்ளிகேஷன் மற்றும் ட்ரைவர் பைல்கள் இதனால் பாதிக்கப்படும் என நமக்குக் காட்டப்பட மாட்டாது. இது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மேம்படுத்தப்பட்டு நவீனப் படுத்தப்பட்டுள்ளது. மை கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்து, பின்னர் Properties > System Protection > System Restore > Next எனச் சென்று நீங்கள் செல்லவிருக்கும் ரெஸ்டோர் பாய்ண்ட், அதாவது எந்த நாளில் இருந்த நிலைக்குச் செல்ல ரெஸ்டோர் பாய்ண்ட் ஏற்படுத்தினீர்களோ, அந்த நிலையில் கிளிக் செய்திடலாம். பின்னர், புதியதாகத் தரப்பட்டிருக்கும் ‘Scan for affected programs’என்பதில் கிளிக் செய்தால், விண்டோஸ் எந்த புரோகிராம்கள் மற்றும் ட்ரைவர்கள் அழிக்கப்படும் அல்லது சரி செய்யப்படும் என்று பட்டியலிட்டுக் காட்டும்.

8.எக்ஸ்பி வகை இயக்கம்: பல லட்சக்கணக் கானவர்களால், பல ஆண்டுகள் மிகப் பிரியமுடன் இயக்கப்பட்டு வந்த சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி. ஏன், இன்னமும் கூட அதுதான் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படுகிறது. இதற்குக் காரணம் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள், இதில் மட்டுமே இயங்கும்படி அமைக்கப்பட்டிருப்பதுதான். அப்படியானால், விண்டோஸ் 7 இயக்கத்திற்கு மாறிவிட்டால் என்ன செய்வது? என்ற கேள்வி பலருக்கு எழும். இதற்காகவே விண்டோஸ் 7 இயக்கத்தில், எக்ஸ்பி வகை இயக்கத்திற்கு மாற்றிக் கொள்ள ஒரு வசதி தரப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து (http://www.microsoft.com/windows/virtualpc/download.aspx) எக்ஸ்பி மோட் என்பதின் நகல் ஒன்றை டவுண்லோட் செய்து பதிந்து வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது இயக்கிப் பயன்படுத்தலாம்.

9.சகலமும் ரைட் கிளிக்: இந்த வசதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் முற்றிலும் புதுமையான முறையாகும். டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். உங்கள் ஸ்கிரீன் ரெசல்யூசனை செட் செய்திட இடம் கிடைக்கும். முன்பு போல டிஸ்பிளே செட்டிங்ஸ் என்றெல்லாம் செல்ல வேண்டியதில்லை. அதே போல டாஸ்க் பாரில் உள்ள எக்ஸ்புளோரர் ஐகான் மீது ரைட் கிளிக் செய்தால், Documents, Pictures, the Windows folder போன்ற பல சிஸ்டம் போல்டர்களுக்கு நேரடியாகச் செல்லலாம். உங்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்து வதில் நாட்டம் இல்லையா! அப்படியானால், அந்த ஐகானை டாஸ்க் பாரில் இருந்து நீக்கிவிடலாம். பயர்பாக்ஸ் அல்லது குரோம் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

10. மாறும் வால் பேப்பர்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பல அழகான வால் பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. எனவே எவற்றை விடுத்து, எதனை நம் வால் பேப்பராக அமைப்பது என்று நம்மால் முடிவு செய்திட முடியாது. இதற்காகவே, அந்த வால் பேப்பர்கள் அனைத்தையும், அல்லது நீங்கள் விரும்பும் சிலவற்றை மட்டும், ஒரு ஸ்லைட் ÷ஷாவாக அமைக்கும் வசதி தரப்பட்டுள்ளது. டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, Personalise > Desktop Background என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, நீங்கள் விரும்பும் வால்பேப்பருக்கான படங்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும். பின்னர் எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை இந்த படங்கள் மாறிக் காட்சியாகத் தெரிய வேண்டும் என்பதனை முடிவு செய்து அமைக்கவும். இது 10 விநாடிகள் முதல் ஒரு நாள் வரை இருக்கலாம். இவை வரிசையாக இல்லாமல், மாறி மாறி வர வேண்டும் எனில் Shuffle என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

விண்டோஸ் 7 அற்புத வசதிகள்

 altவிண்டோஸ் விஸ்டாவில் கிடைக்காத புகழை, எப்படியும் விண்டோஸ் 7 மூலம் பிடித்துவிட எண்ணிய மைக்ரோசாப்ட், தன் புதிய சிஸ்டத்தில் பல எதிர்பாராத வசதிகளைத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். இந்த சிஸ்டத்திற்கு மாறியுள்ள அனைவருக்கும் இவை உதவலாம்.
1. வேகமாக இயங்க பிளாஷ் ட்ரைவ்: கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கும் வேகத்தினை அதிகப்படுத்த ஓர் எளிய வழி, அதன் ராம் (RAM Random Access Memory) மெமரியை அதிகப்படுத்து வதுதான். ராம் மெமரியை அதிகப்படுத்துகையில், உங்கள் கம்ப்யூட்டர் சி.பி.யு. தனக்கு வேண்டிய டேட்டாவிற்காக, ஹார்ட் டிஸ்க்கை அணுக வேண்டிய தேவை குறையும். ராம் மெமரியிலிருந்து டேட்டா படிக்கப்படுவதால், ராம் மெமரி, ஹார்ட் டிஸ்க்கினைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைத் தருவதால், கம்ப்யூட்டர் அதிக வேகத்தில் இயங்கும். மேலும் ராம் மெமரி தற்காலிக மெமரி என்பதால், அதில் ஏற்றப்படும் டேட்டா, கம்ப்யூட்டர் இயங்கும் வரையில் மட்டுமே இருக்கும். கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன், டேட்டா தங்காது.

ஆனால் சில கம்ப்யூட்டர் மதர்போர்டுகளில் தான், ராம் மெமரியை அதிகப்படுத்த காலியான ஸ்லாட்டுகள் இருக்கும். சில கம்ப்யூட்டர்கள் இவற்றை ஏற்றுக் கொள்ளாது. மேலும் மதர்போர்ட் வரை சென்று, புதிய ராம் மெமரி சிப்களை இணைப்பது எல்லோராலும் இயலாத காரியம். இதற்கு விண்டோஸ் 7 ஓர் எளிய வழி ஒன்றைத் தருகிறது. இதன் பெயர் ரெடி பூஸ்ட்  (Ready Boost). கூடுதல் மெமரி கொள்வதற்கு, ராம் நினைவகச் சிப்களைப் பயன்படுத்த வேண்டிய தில்லை. நம்மிடம் உள்ள பிளாஷ் ட்ரைவினையே அதற்குப் பயன்படுத்தலாம். ஆம், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, அதன் போர்ட்டில் செருகி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் சில அமைப்புகளை ஏற்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டர், பிளாஷ் ட்ரைவினை கூடுதல் ராம் மெமரியாக எடுத்துக் கொண்டு செயல்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பின்புறம் ஏதேனும் யு.எஸ்.பி.போர்ட்டில், பிளாஷ் ட்ரைவ் ஒன்றினைச் செருகி, இந்த செட் அப் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அப்போதுதான், நிலையாக அந்த பிளாஷ் ட்ரைவ், கூடுதல் ராம் மெமரியாக என்றும் செயல்படும்.

பிளாஷ் ட்ரைவினைச் செருகியவுடன், சிறிய விண்டோ பாக்ஸ் ஒன்று எழுந்து வரும். இதில்  “Speed up my system, using Windows Ready Boost”என்று ஒரு பிரிவு இருக்கும். இந்த விண்டோ கிடைக்கவில்லை என்றால்,Start  மெனு சென்று  My Computer தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்படும் பிளாஷ் ட்ரைவில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ் விரி மெனுவில்,  Propertiesஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் , கிடைக்கும் டேப்களில்Ready Boostஎன்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டேப்பிற்கான விண்டோவில் Use this device என்று ஒரு வரி இருக்கும். இந்த ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், கீழாக உள்ள வேகத்தின் அளவை ஓரளவிற்கு அதிகப்படுத்தவும்.

இதற்குக் குறைந்த பட்சம் 256 எம்பி அளவு உள்ள பிளாஷ் ட்ரைவ் தேவை. ஆனால் 1 ஜிபி பயன்படுத்துவது நல்லது. இப்போது மிகவும் குறைவான விலையில், பிளாஷ் ட்ரைவ் கிடைப்பதால், இன்னும் கூடுதலாக கொள்ளளவு கொண்ட பிளாஷ் ட்ரைவினைப் பயன்படுத்தலாம். உங்கள் கம்ப்யூட்டர் இதன் பின் வேகமாகச் செயல்படுவதனைக் காணலாம்.

2.கிளிப் போர்டைக் காலி செய்திட: பல வேளைகளில் நாம், நம்மை அறியாமல், பெரிய அளவில் டேட்டாவினை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்வோம். அதனைப் பயன்படுத்துவோம்; ஆனால் கிளிப் போர்டில் இருந்து நீக்க மாட்டோம்; அல்லது மறந்துவிடுவோம். அதனால் தான் ஆபீஸ் புரோகிராம்களை மூடுகையில், நீங்கள் அதிகமான டேட்டாவினைக் கிளிப் போர்டில் வைத்திருக்கிறீர்கள். அதனை அப்படியே வைத்திருக்கவா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். இவ்வாறு கிளிப் போர்டில் வைக்கப்படும் டேட்டா அளவு பெரிய அளவில் இருந்தால், சிஸ்டம் இயங்கும் வேகம் குறையும். ஏனென்றால், இது அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும். பெரிய அளவிலான டெக்ஸ்ட் அல்லது படம் ஒன்றைக் காப்பி செய்கிறீர்கள். அது கிளிப்போர்டில் சென்று அமர்ந்து கொள்கிறது.

பின் அதனை இன்னொரு பைலில் ஒட்டுகிறீர்கள். ஒட்டப்பட்டாலும், அது கிளிப் போர்டில் இடத்தைப் பிடித்துக் கொண்டுதான் இருக்கும். இதனால் கம்ப்யூட்டர் இயங்கும் வேகம் தடைப்படும். இதனைத் தீர்க்க, கிளிப் போர்டில் உள்ளதை, உடனே எளிதான முறையில் காலி செய்திட வேண்டும். இதற்கென ஷார்ட் கட் ஒன்றை டெஸ்க் டாப்பில் அமைக்கலாம். மேலும் காலி செய்வதன் மூலம், கிளிப் போர்டில் உள்ளதை, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள் அறியும் வாய்ப்பினைத் தடுக்கலாம்.

முதலில், டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில்New, பின் Shortcut என்பவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, Create Shortcut என்னும் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் நீள் சதுரம் ஒன்று தரப்படும். அதில் cmd/c “echo off /clip” என டைப் செய்திடவும். அடுத்து நெக்ஸ்ட் என்பதில் டைப் செய்து, பின் இந்த ஷார்ட் கட் கீக்கு ஒரு பெயர் கொடுத்து, Finish என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த ஷார்ட் கட் ஐகானில் கிளிக் செய்திடுகையில், கிளிப் போர்டில் காப்பி செய்த டெக்ஸ்ட், படம் போன்றவை நீக்கப்பட்டு, மெமரி இடம் அதிகமாகும்.

3. விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாக்க: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் டெக்ஸ்ட் சைஸ் 96 டி.பி.ஐ. (DPI  dots per inch)  அதாவது 100%. ஆனால் இதனையும் நாம் விரும்பும்படி அட்ஜ்ஸ்ட் செய்திடலாம். இதனை நம் மானிட்டரின் ஸ்கிரீன் ரெசல்யூசனை மாற்றாமலேயே மேற்கொள்ளலாம். ஸ்டார்ட்(Start)மெனு சென்று, கண்ட்ரோல் பேனல்(Control Panel) தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில் டிஸ்பிளே (Display) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர்  Adjust Font Size (DPI) என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Large Sizeஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply  மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து விண்டோஸ் மீண்டும் பூட் ஆகும்போது, இந்த மாற்றங்கள் அமலாக்கப்பட்டு, விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாகக் காட்டப்படும்.

இந்த DPI Scaling Windowவில், நமக்கேற்ற வகையில், எழுத்தின் அளவை செட் செய்திட, ஒரு ஸ்கேல் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை எப்படிக் கையாள்வது என்பது, இதனைப் பார்த்தாலே புரியும். இதனை நீங்களாக செட் செய்து, பின் டெக்ஸ்ட் அளவைப் பார்த்து, அதன் பின் உங்கள் மனதிற்கு நிறைவைத் தரும் வரையில், அளவை மாற்றிப் பின் சரியான அளவு வந்த பின், அதனையே கொள்ளலாம்.

4. அட்ரஸ் பார் வழி இணைய தளம்: நாம் எல்லாரும், இணையதளம் ஒன்றைப் பார்க்க, முதலில் பிரவுசரைத் திறக்கிறோம். பிரவுசரில் ஹோம் பேஜாக ஏதேனும் தளம் ஒன்றை அமைத்திருந்தால், முதலில் அது திறக்கப்படுகிறது. பின்னர், நாம் காண விரும்பும் தளத்தின் முகவரியினை, அட்ரஸ் பாரில் டைப் செய்து பெறுகிறோம். இது சற்று தேவையற்ற நேரத்தை எடுத்துக் கொள்கிறது. விண்டோஸ் 7 தொகுப்பில் இதற்கு ஒரு சுருக்கு வழி உள்ளது.

முதலில் உங்கள் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Toolbars தேர்ந்தெடுத்து, அதில் Addressஎன்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் டாஸ்க் பாரில், Address என்ற வரி கிடைக்கும். இதில் நேரடியாக, நீங்கள் காண விரும்பும், இணைய தள முகவரியினை டைப் செய்திடலாம். இதில்http:// அல்லது www என்பதெல்லாம் தேவையில்லை. எடுத்துக்காட்டாக GOOGLE என்று நேரடியாக டைப் செய்திடலாம். டைப் செய்தவுடன், என்டர் தட்டவும். நீங்கள் செட் செய்துள்ள பிரவுசர் இயக்கப்பட்டு, இந்த இணைய தளம் காட்டப்படும். டாஸ்க் பாரில் உள்ள அட்ரஸ் பாரில் உள்ள இணைய முகவரியின நீக்க, ஷார்ட் கட் மெனுவில் அட்ரஸ் பாரில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இது போல பல செயல்பாடுகளில், விண்டோஸ் 7 தொகுப்பு நம் வேலைத்திறனைக் குறைப்பதுடன், விரைவாகவும் செயல்பட பல வழிகளைத் தருகிறது. பின்னர் அவற்றைக் காணலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்