Popular Posts

Oct 4, 2010

விரைவில் பில்கேட்ஸ் ஆக போகும் இரண்டு இந்திய நண்பர்கள் – அவர்கள் உருவாக்கிய BlixOS operating சிஸ்டம்

 
சுயெஸ் ஸ்ரிஜன் நொய்டா கேயைதான் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இவர் தன்னுடைய நண்பன் சிதிஜ் குமார்ருடன் இணைந்து உருவாக்கியது இந்த BlixOS operating சிஸ்டம்.
இதன் முக்கிய அம்சம் இது 12 நொடிகளில் கணினியை boot
செய்யும். இது main memory யை குறைந்த அளவிற்கு உபயோகித்து கொள்ளும்( 100 -120 MB ).உங்கள் Hard drive வில் ( 600 – 640 MB ) அளவுமட்டுமே இடத்தை எடுத்துக்கொள்ளுமாம்.


கணினி உபயோகிப் பவர்களில் அனைவரும் விரும்புவது தங்கள் OS வேகமாக வேலை செய்ய வேண்டும் என்பதுதான். அந்த வகையில் BlixOS சின் வேலை செய்யும் வேகம் பிரமிக்கதக்கது. 1 GB அளவிற்கான கோப்புகளை ஒரு drive வில் இருந்து மற்றொரு drive விக்கு மாற்ற 40 வினாடிகள் மட்டும் எடுத்துகொள்ளுமாம்.
பலர் இன்னும் குறைந்த செயல்பாடுடைய pentium 4 ப்ரோசெச்செர் வகை கணினியை உபயோகித்து வருகிறார்கள். இதில் விண்டோஸ் XP, Vista மற்றும் 7 Operating System தை இயக்குவது கடினம். ஆனால் BlixOS நீங்கள் நினைத்து பார்க்கமுடியாத செயல்பாட்டை காட்டுமாம்.BlixOs மூன்று வெவ்வேறு வடிவில் உருவாக்க பட்டு உள்ளது. BlixOS Home ,BlixOS Professional மற்றும் BlixOS ultimate ஆகும். இதில் BlixOS Home ஒரு operating environment, இது OS இல்லை.
__________
__________
ஒரு பொருளை உருவாக்கினால் போதுமா அந்த பொருளை
சரியான முறையில் வியாபாரம் செய்ய வேண்டும்.
அந்த வகையில் சுயெஸ் தன் நண்பனுடன் இணைந்து தங்களுடைய
Blix Corporation நிறுவனத்தை உருவாக்கினார். வரும் செப்டம்பர் 30
அதிகாரப்பூர்வமாக BlixOS Professional Beta வை வெளியிட உள்ளனர்.




இவர்கள் வெற்றிபெற வாழ்த்துகள்.

இதை  பற்றிய அனைத்து வீடியோக்களும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும். 
நன்றி : www.blixcorp.com, www.youtube.com

விண்டோஸ் எக்ஸ்பி - பூட் ஆகாத கணினியை சரி செய்ய..

  விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை
பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில்
கீழே உள்ளது போன்ற பிழைச்செய்தி கருப்புத் திரையில் வந்திருக்கலாம்.

Windows could not start because the following file missing
or corrupt:
\WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE

You can attempt to repair this file by starting Windows Setup using the original Setup CD-ROM.
Select 'r' at the First screen to start repair.
அல்லது



என்றோ பிழைச் செய்தி
வந்திருக்கலாம். எத்தனை முறை Restart செய்தாலும் கணினி பூட் ஆகாமல் இதே
செய்தி தொடர்ந்து வரும். safe mode சென்றாலும் இதே நிலைதான்.
இந்த நிலையில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை மறுபடி நிறுவாமல் இதனை சரிசெய்ய என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம்.
முதலில் வருகின்ற பிழைச் செய்தியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். அதாவது, \WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE என வருகிறதா? அல்லது \WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM என வருகிறதா? என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். (SOFTWARE / SYSTEM).
இந்த
பணியை நாம் Windows Recovery Console லில் செய்ய வேண்டும். மிகச் சில
கணினிகளில் மட்டுமே இது நிறுவப்பட்டிருக்கும். இது போன்ற கணினிகளில் பூட்
ஆப்ஷனில் Windows Recovery Console என்பது பட்டியலிடப்பட்டிருக்கும்.





ஒரு வேளை உங்கள் கணினியில் இந்த
வசதி நிருவப்படவில்லை எனில், உங்களுடைய விண்டோஸ் XP பூட் CD யை உபயோகித்து
பூட் செய்து கொள்ளுங்கள். இனி கீழே தரப்பட்டுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள
Repair திரை வரும் வரை தொடருங்கள்.



இந்த திரையில் 'R' கீயை அழுத்தினால் Recovery Console வந்துவிடும்.



மேலே உள்ள படத்தில் குறிப்பிட்டிருப்பது போல்,
1: C:\WINDOWS
(C: என்பது ரிப்பேர் செய்யப்போகும் இயங்குதளம் அமைந்துள்ள ட்ரைவ்)
இது சரியெனில் 1 டைப் செய்து என்டர் கொடுத்து, Administrator கடவு சொல்லை
டைப் செய்யவும். (விண்டோஸ் பதியும் பொழுது பெரும்பாலானோர் Administrator
க்கு கடவு சொல்லை கொடுப்பதில்லை, அப்படியிருந்தால் வெறுமனே என்டர்
கொடுத்தால் போதுமானது).

இப்பொழுது திரையில்,

C:\WINDOWS> என்ற ப்ராம்ப்ட் வரும், இங்கு கீழ்கண்ட கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
DEL C:\WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM
COPY C:\WINDOWS\REPAIR\SYSTEM C:\WINDOWS\SYSTEM32\CONFIG
(Corrupt ஆன கோப்பு SYSTEM ஆக
இருந்தால் மேலே உள்ளதைப் போலவும் SOFWARE ஆக இருந்தால் கீழே உள்ளதைப்
போலவும் கொடுக்கவும். இதில் 'C:' என்பது உங்கள் கணினியில் எந்த ட்ரைவில்
இயங்குதளம் நிருவப்பட்டிருக்கிறதோ அதனை குறிக்கிறது. உங்கள் கணினிக்கு
தக்கவாறு மாற்றிக்கொள்ளவும்)
DEL C:\WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE
COPY C:\WINDOWS\REPAIR\SOFTWARE C:\WINDOWS\SYSTEM32\CONFIG
பிறகு, EXIT கொடுத்து பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்யுங்கள். இனி உங்கள் கணினி பூட் ஆகும்.

இது போன்று எனது முந்தய பதிவில் விவரமாக உள்ளது. அந்த பதிவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும். இல்லை என்றால்  மேலே உள்ளது போன்று முயற்சி செய்து பார்க்கவும்.  

தமிழ் செய்திதாள்கள் மற்றும் வார இதழ்கள்

 * தினகரன்
* தினத்தந்தி
* தினமலர்
* தினமணி
* தினபூமி
* தமிழ்முரசு
* குமுதம்
* குங்குமம்
* விகடன்
* கல்கி
* முத்தாரம்
* வண்ணத்திரை

17" எல் சி டி மானிட்டர் ரெசல்யூசன் 1440 x 900 பிரச்சினைக்கான தீர்வு

  17”எல் சி டி மானிட்டர் வாங்கிய நண்பர்களுக்கு அதன் ரெசல்யூசன்
பிரச்சினை ஒரு தலைவலியாகத்தான் இருக்கும் சாதரணமாக அதில் உள்ள செட்டிங்ஸ்
வழியாக முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள் அதிகபட்சமாக 1280 x 1024 என
கிடைத்திருக்கும் எனக்கும் அப்படித்தான் கிடைத்தது எனக்கு தெரிந்த எல்லா
வழிகளும் கைகொடுக்கவில்லை சரி நம்ம பெரிய அண்ணாச்சி கூகுள் கிட்டே
கேட்டுபார்த்தாலும் சரியான பதில் கிடைக்கல எனக்கு தெரிந்த கம்ப்யூட்டர்
சம்பந்தபட்ட தளங்களில் எல்லாம் எனது கேள்வியை பதிந்தேன் எல்லா இடத்திலும்
பதில் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது இருதியில் நானகவே வெவேறு வழிகளில்
முயற்சி செய்ய தொடங்கினேன் அப்பொழுதுதான் நமது கணிணியிலேயே எந்த சிரமமும்
இல்லாமல் நாம் எதிர்பார்க்கிற ரெசல்யூசன் கொண்டு வரமுடியும் என்பதை
தெரிந்து கொண்டேன் இதை படித்து முடிக்கும் போது நீங்களும் ஆச்சரியபடத்தான்
போகிறீர்கள்
இனி விஷயத்துக்குள் செல்லலாம் இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன் இந்த
முறை எனக்கு சாத்த்யாமாயிற்று எல்லோருக்கும் இது சாத்தியாமா என்பது
குறித்து சரியாக தெரியவில்லை இருப்பினும் சாத்தியம் ஆகுமென்றே நம்புவோம்
1) கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் ஏதாவது ஒரு இடத்தில் வலது கிளிக் செய்து அதன் பிராப்பர்ட்டிஸ் தேர்ந்தெடுக்கவும்

2) புதிதாக திறக்கும் விண்டோவில் செட்டிங்ஸ் டேப் சென்று அட்வான்ஸ்டு பட்டன் திறக்கவும்

3) இனி புதிய விண்டோவில் (இண்டெல் (ஆர்) எக்ஸ்டிரிம் கிராப்பிக்ஸ் டேப்
கிளிக்கவும் அதில் உள்ள Download the Latest Intel Software and Driver
என்பதை தேர்ந்தெடுக்கவும்

4)இனி இண்டர்னெட் வழியாக இந்த தளம் திறக்கும் அதில் உள்ள Check your
system for the Latest updates என்பதை கிளிக்கவும் ஒருவேளை அந்த லிங்க்
திறக்கவில்லையென்றால் அதன் கீழே உள்ள Are you having trouble running the
intel (R )driver update utility? என்பதை தேர்ந்தெடுத்து ஜாவா இன்ஸ்டால்
செய்யவும்
Enlarge this imageReduce this image Click to see fullsize


5)இனி Check your system for the Latest updates இந்த முறையில்
பிரச்சினை இருந்தால் மட்டும் Are you having trouble running the intel (R
)driver update utility? என்பதை செலக்ட் செய்வீர்களேயானால் இந்த தளம்
திறக்கும் இதில் தங்களின் உலவிக்கானதை தேர்ந்தெடுக்கவும்
Enlarge this imageReduce this image Click to see fullsize


6)இனி மீண்டும் Check your system for the Latest updates என்பதை
தேர்ந்தெடுக்கவும் இனி தங்களின் கணிணிக்கான லேட்டஸ்ட் டிரைவர் மற்றும்
மென்பொருளுக்கான ஸ்கேனிங் நடக்கும்
Enlarge this imageReduce this image Click to see fullsize


7) ஸ்கேனிங் முடிந்தவுடன் பின்வருமாறு தளம் திறந்து இருக்கும் அதில்
நமது கணிணியில் இருக்கும் அனைத்து டிரைவர்களுக்கும் லேட்டஸ்ட் அப்டேட்
இருக்கும் அதில் நமக்கு தேவையானது கிராப்பிக்ஸ் டிரைவர் கீழே உள்ள படத்தை
பாருங்கள் புரியும் , படத்தில் Graphics Driver என்பதற்கு அருகில்
Download என இருக்கும் இனி Download என்பதை கிளிக்கி தரவிறக்கம் செய்யவும்
பின்னர் வழக்கம் போலவே இன்ஸ்டால் செய்யவும் (இந்த படத்தில் அதுபோல
இருக்காது ஏற்கனவே செய்தாகிவிட்டது )
Enlarge this imageReduce this image Click to see fullsize


இனி கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் ஏதாவது ஒரு இடத்தில் வலது கிளிக்
செய்து அதன் பிராப்பர்ட்டிஸ் தேர்ந்தெடுக்கவும் settings செல்லவும் கீழே
உள்ள ரெசல்யூசன் அளவை 1440 x 900 என மாற்றிக்கொள்ளவும் தாங்கள் டவுன்லோட்
செய்த பைலை Resolution 1440 x 900 என போல்டர் உண்டாக்கி அதில் சேமித்து
வைத்துக்கொள்ளவும் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்

தகவல் அனைவருக்கும் உபயோகமானதாக இருக்குமென்று நம்புகிறேன் இதில்
பிரச்சினை தீரவில்லையென்றால் கணிணி மென்பொருள்  தளத்திலேயே சந்தேகம் குறித்து
பதிவிடவும் நிச்சியாமாய் முயற்சிப்போம்
வாழ்க வளமுடன்

நன்றி : தமிழர்களின் சிந்தனைகளம்

Oct 2, 2010

மடிக்கணினியின் திரையை மட்டும் அணைப்பது எப்படி?

மேசைக்கணினிகளின் மானிட்டரை ஆஃப் செய்துவிட்டுப் பாடல்களை மட்டும் ஒலிக்கும்படி செய்யும் இணைஞர்கள் எத்தனையோ பேர் இருக்கிறோம்.

ஆனால்
மடிக்கணினியில் இவ்வாறு மானிட்டரை மாத்திரம் அணைத்துவிட்டுப் பாடல்களைக்
கேட்பதற்கு வழிவகை உள்ளதா? இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக
அமைந்ததுதான் இந்தப் பதிவு.



65 கேபி அளவுள்ள ஒரு சிறிய மென்பொருள் பயன்பாட்டை இயக்குவதன் மூலம் மானிட்டரை அணைத்துவிட முடியும்.
இந்த அப்ளிகேசனை நிறுவுவதற்கு முன் உங்கள் கணினியில் மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம் ஒர்க் 2.0 நிறுவியிருக்க வேண்டும்.



பயன்பாட்டை தரவிறக்கம் செய்ய

மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம் ஒர்க் 2.0

நன்றி : தமிழர்களின் சிந்தனைகளம் 

உங்கள் கணிணி தானாகவே குறிப்பிட்ட நேரத்தில் அணைக்க

நண்பர்களே உங்கள் கணிணி தானாகவே குறிப்பிட்ட நேரத்தில் அணைக்க இந்த
மென்பொருள் உதவும். இந்த மென்பொருளில் எந்த நேரம் அணைக்க வேண்டும் என்று
நேரத்தை குறித்து விட்டு எவ்வளவு நேரத்திற்கு முன் நினைவூட்ட வேண்டும்
என்று செட் செய்யலாம். மென்பொருள் தரவிறக்க சுட்டி

Oct 1, 2010

Kaspersky KIS/KAV All Version Keys (30 September 2010)

 

INFO:

Quote:
KASPERSKY KEYS
*****Kaspersky Anti-Virus 5
*****Kaspersky Anti-Virus 6
*****Kaspersky Anti-Virus 7
*****Kaspersky Anti-Virus 8
*****Kaspersky Anti-Virus 2010
*****Kaspersky Anti-Virus for WKS and FS
*****Kaspersky OpenSpace Security
*****Kaspersky Personal Security Suite 2.0
*****Kaspersky Internet Gateway
*****Kaspersky Internet Security 6
*****Kaspersky Internet Security 7
*****Kaspersky Internet Security 8
*****Kaspersky Internet Security 2010
*****Kaspersky Internet Security 2011

*NOTE*
FOR KASPERSKY INTERNET SECURITY 2011 YOU USE THE KIS 11 KEYS.
FOR KASPERSKY INTERNET SECURITY 2010 YOU USE THE KIS 9 KEYS.
FOR KASPERSKY INTERNET SECURITY 2009 YOU USE THE KIS 8 KEYS.
FOR KASPERSKY INTERNET SECURITY 2008 YOU USE THE KIS 7 KEYS.
FOR KASPERSKY ANTI-VIRUS 2011 YOU USE THE KAV 11 KEYS.
FOR KASPERSKY ANTI-VIRUS 2010 YOU USE THE KAV 9 KEYS.
FOR KASPERSKY ANTI-VIRUS 2009 YOU USE THE KAV 8 KEYS.
FOR KASPERSKY ANTI-VIRUS 2008 YOU USE THE KAV 7 KEYS.
HOW TO INSTALL A KEY??:
Quote:
ACTIVATE

1) Remove before old licenses
2) To activate by means of a code
3) To wait messages on a mistake
4) Below in a window to press (review) and to choose a key file
5) To press to activate

OR

1-Close your internet connection.
2-Select the trial activation.
3-It will want a key, as it can not connect to internet then, enter the key

OR for KASPERSKY 2011
Below is a 100% working trick to activate latest version of KAV/KIS 11.0.1.400 using a license key file. Check the method below:

1. Disable/Unplug your internet connection.
2. Click for trial version or enter this Bad code

11111-11111-11111-1111X

3. Kaspersky will show you an error.
4. A new window will appear with key file browsing option.
5. Select your key from browsing window.

DOWNLOAD:
30 September 2010

Code:
http://www.fileserve.com/file/TGfBauB

பவர் பாய்ண்ட் டிப்ஸ் 2010 : லேசர் பாயிண்டர்

மைக்ரோசாப்ட் பவர் பாய்ண்ட் பயன் படுத்தி பிரசண்டேஷன்களை ப்ரொஜெக்டரில், காண்பிக்கும் பொழுது, லேசர் பாயிண்டரை பயன் படுத்துவது வழக்கம். 
 
 சமயத்தில் லேசர் பாயிண்டர் நம்மிடம் இல்லையெனில், நமது மௌஸ் பாயிண்டரையே லேசர் பாயிண்டராக பயன்படுத்தும் வசதி மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட் 2010 -இல் தரப்பட்டுள்ளது. 

பவர் பாயிண்டில் ஸ்லைடு ஷோவை உருவாக்கியபிறகு F5 கீயை அழுத்தியோ அல்லது From beginning, அல்லது From Current Slide பொத்தானை, Slide Show டேபிலிருந்து க்ளிக் செய்து  ஸ்லைடு ஷோவை துவக்குங்கள்.


ஸ்லைடு ஷோ ஆரம்பித்தவுடன், Ctrl கீ மற்றும் மௌஸ் இடது பட்டனை அழுத்துவதன் மூலமாக, சிவப்பு நிற லேசர் பாயிண்டரை திரையில் தோன்றவைக்க முடியும். 

இந்த வசதி 2010 பதிப்பில் மட்டுமே உண்டு. மேலும் இந்த லேசர் பாயின்டரின் நிறத்தை default ஆக உள்ள சிவப்பு நிறத்திலிருந்து வேறு நிறத்திற்கு மாற்ற, Slide show tab -இல் Set up Slide show பொத்தானை அழுத்துங்கள். 


இப்பொழுது திறக்கும் Set up show வசனப் பெட்டியில், Laser Pointer Color க்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் சிவப்பு, பச்சை அல்லது நீல நிறத்தை தேர்வு செய்து கொள்ளலாம். 


நன்றி : சூர்யா கண்ணன் 

Sep 27, 2010

இந்த பிழை அடிகடி உங்கள் கணினியில் வருகிறதா? Add or Remove Programs குடுத்து அளித்தாலும் போகமாட்டிங்குதா?

 
மற்றும் இது போல பிழை வருகிறதா?

* Cannot delete file: Access is denied

* There has been a sharing violation

* The source or destination file may be in use

* The file is in use by another program or user

* Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use


கிழே உள்ள இணையதளத்திற்கு சென்று UNLOCKER எனும் மென்பொருள்-ய் பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் Install செய்து பின்பு அதன் மூலம் அழித்துவிடுங்கள்.






இதற்கு நீங்கள் Administrator or Administrator Power உள்ள User-ல் Login ஆகிஇருக்க வேண்டும் விடுங்கள்.

இணையதள முகவரி http://ccollomb.free.fr/unlocker/



சிகப்பு Mark உள்ள இடத்தை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் அந்த இணையதள பக்கத்தில் அங்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளுங்க
 இதை பற்றிய ஆங்கில வலைத்தளம் http://ccollomb.free.fr/unlocker/


360º வியூ மைசூர் அரண்மனை: கலக்கல்.. அவசியம் பாருங்க..

இணையத்தில் 360º வியூவில் பல முக்கியமான இடங்களை நாம் பார்த்திருப்போம், கட்டிடக்கலையில் அசத்தும் மைசூர் அரண்மனையின் 360º வியூ.
மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 


21 பணரோமிக் படங்களை உள்ளடக்கியது. சிறந்த ஆடியோ விளக்கமும் உண்டு..
ஆங்காங்கே உள்ள கேமராவை க்ளிக் செய்து மேலதிக விவரத்தை பார்க்கலாம். 




அரண்மனையின் உள்ளே உள்ள ஒவ்வொரு அறையும், அதன் விளக்கமும் மிக அருமை. 


அசத்தலான ஆர்க்கிடேக்ச்சர்! நேரில் பலரும் பார்த்திருந்தாலும், இந்த தளத்தில் பொறுமையாக ரசிக்கலாம். 
அவசியம் பாருங்க.. 


நன்றி : சுர்யகண்ணன்

Sep 25, 2010

தொலைந்த சாஃப்ட்வேர்(software) சீரியல் எண்களை மீட்க

பலவகையான மென்பொருட்களை நமது கணினியில் நிறுவுகிறோம்.அந்த மென்பொருட்களின் சீரியல் எண்ணை குறித்து கொள்ள மறந்து விட வாய்ப்புள்ளது.சில சமயம் அந்த மென்பொருட்களை மீண்டும் நிறுவும் போதோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலோ மென்பொருளின் சாப்ட்வேர் சீரியல் எண் தேவைப்படுகிறது.

கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களின் சீரியல் எண்களையும் தெரிந்து கொள்ள இந்த எளிமையான 75KB அளவுள்ள இலவச மென்பொருள் உதவுகிறது.தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்


http://www.freewarefiles.com/downloads_counter.php?programid=44343

கடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்




கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்

நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்.

கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம். இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு 8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த முகவரியைச் சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.
http://www.luxand.com/blink/

Sep 24, 2010

Kaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி :-


Kaspersky தனது வாடிக்கையாளர்களை 30 நாட்கள் இலவசமாக பரீட்சித்துப்பார்க்க விட்டுள்ளது, இந்த 30 நாட்களும் Kaspersky ஆனது காசு கொடுத்து வாங்குவதை போலவே இயங்கும்,

இந்த முயற்சியின் மூலம் கிடைத்த விடை, நாம் அந்த பரீட்சாத்த மென்பொருளை (Trial), எவளவு நாட்கள் வேண்டுமெண்றாலும் பாவிக்கலாம்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது 29 நாட்களுக்கு ஒருமுறை தல 1 நிமிடம் வரை செலவு செய்ய வேண்டும்.

செய்முறை

*kaspersky இன் எந்த மென்பொருளயும் நீங்கள் வைத்திருக்கலாம், (Kaspersky IS, Kaspersky AV)

1. நீங்கள் பழய அனுமதி வைத்திருந்தால் (KEY FILE) அதை அழித்துவிடுங்கள்
2. Kaspersky ஐ open செய்து Enable Self-Defense ஐ Un-tick செய்யவும்.

Enable Self-Defense ஐ Un-tick செய்யும் முறை

1. Open the kaspersky
2. Go to “Settings” on the right hant top corner
3. you will prompt a box
4. in the box click the “option Button”
5. u can see in the right hand side ” Enable Self-Defens”
6. un-tick that

3. பின்னர் kaspersky ஐ exit செய்யவும்

Kaspersky Trial Resetter v1.8.0.0 Final REZMAN1984
4. kaspersky Trial Resetter v1.8.0 ஐ தள இறக்கம் செய்து உங்கள் கணனியின் முகதிரையில் வைத்துக்கொள்ளவும் (SAVE ON DESKTOP)
5. extract the file (password : kaspersky)
6. in the folder u can find kaspersky resetter.exe
7. run it
8. press “start”

9. ஒரு 30 நொடி (sec) பொறுங்கள்….. உங்களது Kaspersky மறுபடியும் செயற்பட்டு உங்களிடம் Activate செய்ய கேட்கும்…
அப்பொளுது “Activate Trial vertion” என்பதை அளுத்துங்கள்….

உங்களது மென்பொருள் 30 நாட்கள் பாவனக்கு தயாராகுவிடும்…
முக்கிய குறிப்பு :
1. trial resetter ஐ வேலை முடிந்தவுடன் அழித்துவிடவும் (delete the restetter but don’t delete the .rar file)
2. உங்களது Kaspersky trail இல் இயங்குகிறது எண்று சொல்லும்.. அதை நீங்கள் “Hide Message” இல் மறைத்து விடலாம்
29 நாட்களுக்கு ஒருமுறை இதை செய்து கொள்ளவும்…. (29 நாள் தான் என்று கட்டாயம் இல்லை, நீங்கள் விரும்பும் நேரத்திலும்
செய்து கொள்ளலாம்)
இது Windows XP, Vista, 7, என்பவற்றில் பரீட்சித்து பார்க்கப்பட்டது

Sep 23, 2010

MS-ஆப்பிஸ் 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும்


   தற்சமயம் வந்திருக்கும் ஆபீஸ் 2010 தொகுப்பு, அதன் பதியப்பட்ட நிலையில் தரப்பட்டிருக்கும் சில வடிவமைப்புகளையும், வசதிகளையும், நம் விருப்பப்படி மாற்றி அமைத்துக் கொள்ள வழிகளைத் தந்துள்ளது. பற்றியும் 

இந்த தொகுப்பினைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், தொடக்க நிலையில் உள்ள இதன் வண்ணம், பயன்பாட்டில் உள்ள சில வழிகள் ஆகியவை தங்கள் ரசனைக்கும் பயன்படுத்தும் முறைக்கும் இணைந்து செல்வதில்லை என்றே கருதுகிறார்கள். எனவே இவற்றை மாற்றும் வழிகளையும் இந்த தொகுப்பு தருகிறது. அவற்றை இங்கு காணலாம்.

1.வண்ணக் கட்டமைப்பை மாற்றுக: 
இது ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்து வதிலான மாற்றம் அல்ல. அதனைப் பயன்படுத்தும் சூழ்நிலை சம்பந்தப்பட்டது. இந்த தொகுப்பு அமைக்கப்பட்டுள்ள மென்மையான ஊதா வண்ணத்துடன் தரப்பட்டுள்ள அனைத்து வண்ணங்களும், வேலை பார்க்கையில் சற்று எரிச்சலைத் தந்து, வேகத்தைக் கட்டுப்படுத்துவதாகப் பலரும் எண்ணுகின்றனர். 

குறிப்பாக கருப்பு வண்ணப் பின்னணியில் கிடைக்கும் வெள்ளை வண்ணத்திலான எழுத்துக்களை யாரும் விரும்புவதில்லை. இந்த வண்ணக் கட்டமைப்பினையே மாற்றிவிடலாம். இந்த வழிகள் ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து புரோகிராம்களுக்கும் பொருந்தும். முதலில் பைல் டேப்பினத் தேர்ந்தெடுக்கவும். இதன் இடது பக்கம் உள்ள ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடுக. மீண்டும் கிடைக்கும் பிரிவுகளில், இடது புறம், ஜெனரல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 


Sep 22, 2010

விண்டோஸ் 7 டிப்ஸ்

டாஸ்க்பார் ஹாட் கீ
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பலவிதமான ஷார்ட் கட் கீ மற்றும் ஹாட் கீ தொகுப்புகளைத் தந்துள்ளது. கீழே டாஸ்க்பாரில் நாம் இயக்கக் கூடிய ஹாட் கீகளைக் காணலாம்.
டாஸ்க்பாரில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனில் இயங்கும் பைல்கள் மொத்தமாக இருப்பின், அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று கண்ட்ரோல் + கிளிக் செய்தால், அந்த குரூப்பில் உள்ள பைல்கள் வரிசையாகக் காட்டப்படும்.
டாஸ்க்பாரில் உள்ள ஐட்டம் ஒன்றில், கண்ட்ரோல் + ஷிப்ட்+கிளிக் செய்தால், அந்த புரோகிராம் அட்மினிஸ்ட்ரேட்டர் திறப்பது போலத் திறக்கப்படும். இதே போல டாஸ்க் பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட் + கிளிக் செய்தால், அதற்கான புரோகிராம் இயக்கத்தை இன்னொரு விண்டோவில் திறக்கும்.
டாஸ்க்பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட + ரைட் கிளிக் செய்தால், அந்த புரோகிராமிற்கான விண்டோ மெனு காட்டப்படும்.
கால்குலேட்டர்
பொதுவாக விண்டோஸ் சிஸ்டத்தில் கால்குலேட்டர் ஒன்று அக்செசரீஸ் பட்டியலில் தரப்படும். இது சாதாரணமான கணக்குகளைப் போட்டுப் பார்க்க பயன்படும். கூட்டல், பெருக்கல், கழித்தல் மற்றும் வகுத்தல் கணக்குகளை இதில் மேற்கொள்ளலாம்.
விண்டோஸ் 7 தொகுப்புடன் கிடைக்கும் கால்குலேட்டரில் பல புதிய சிறப்புகள் உள்ளன. விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனு மேலாக உள்ள சர்ச் பாரில் CALC என டைப் செய்து என்டர் அழுத்தவும். உடன் கால்குலேட்டர் கிடைக்கும். இதன் மேலாக உள்ள View என்பதில் கிளிக் செய்திடவும். இதன் நேர் கீழாக கால்குலேட்டர் கட்டமைப்பை மாற்றிக் காணும் வகையில் ஆப்ஷன்ஸ் தரப்படும். இவை standard, scientific, programmer மற்றும் statistics என நான்கு வகைகளில் கிடைக்கும். மேலும் View> Worksheets என்ற பிரிவில் சென்றால் நம் கடன் தொகைக்கான மாதம் கட்ட வேண்டிய தொகையினைக் கணக்கிடும் வசதி உள்ளதனைப் பார்க்கலாம். இவை எதுவும் வேண்டாம் என பின் நாளில் எண்ணுகையில் ஙடிஞுதீ>ஆச்ண்டிஞி என்பதனை அழுத்தினால் போதும். சாதாரண கால்குலேட்டர் கிடைக்கும்.
விண்டோஸ் 7 வைத்திருப்பவர்கள் இந்த கால்குலேட்டரை இயக்கிப் பாருங்கள். பின் சாதாரண கணக்குகளுக்கான கால்குலேட்டரை மூட்டை கட்டி வைத்திடுவீர்கள்.
கிளாசிக் டாஸ்க் பார்
புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறியவுடன், நீங்கள் புதிய வடிவிலான டாஸ்க் பாரினைப் பார்த்து வியந்திருப்பீர்கள். அது உங்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. செவ்வக வடிவிலான பட்டன்களுக்குப் பதிலாக, சிறிய பட்டன்களைக் காணலாம். இது பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு பழைய வடிவிலான டாஸ்க் பார் தான் பிடிக்கிறது. இவர்கள் புதிய வடிவத்தைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணியிருந்த எனக்கு, டாஸ்க் பார் ப்ராப்பர்ட்டீஸ் பார்த்த போது பழைய வகைக்கு மாறிக் கொள்ளலாம் என்று தெரிய வந்தது. நீங்களும் விரும்பினால் கீழ்க்கண்டபடி அதனை செட் செய்திடலாம்.
டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Taskbar buttons என்ற கீழ் விரி மெனுவினைக் காணவும். இதில் Combine when taskbar is full என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அந்த புரோகிராம் பெயருடன் நீளமான சதுரத்தில், முன்பு காட்டப்பட்டது போல காட்சி அளிப்பதனைக் காணலாம்.

கம்ப்யூட்டர் சாவியாக யு.எஸ்.பி. ஸ்டிக்


நீங்கள் பணியாற்றும் சூழ்நிலை மிகவும் கும்பலான இடமாக இருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் வேறு யாரேனும் உட்புகுந்து இயக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா? கம்ப்யூட்டரை எப்படி பூட்டிச் செல்வது? லாக் ஆப் செய்திடாமல் எப்படி இதனைப் பாதுகாப்பாக வைப்பது? என்ற கேள்விகளுக்குப் பதிலாக பிரிடேட்டர் (Predator) என்னும் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதனை ஒரு யு.எஸ்.பி. ஸ்டிக்கில் பதிந்து வைத்து, அந்த ஸ்டிக்கை, உங்கள் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம். http://www.montpellier-informatique.com/predator/en/index.php?n=Main.Telechargement என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பிரிடேட்டர் புரோகிராமின் ஸிப் பைலை டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின் இதனை விரித்து, உங்கள் சி ட்ரைவில் இதனைப் பதிந்து கொள்ளுங்கள். யு.எஸ்.பி. ட்ரைவில் இதனைப் பதிய வேண்டாம். இப்போது பிரிடேட்டர் பைலை இயக்குங்கள். உங்கள் யு.எஸ்.பி.போர்ட்டில், யு.எஸ்.பி. ஸ்டிக்கினை இன்ஸெர்ட் செய்திடும்படி உங்களைக் கம்ப்யூட்டர் கேட்டுக் கொள்ளும். பின் இதற்கான பாஸ்வேர்ட் ஒன்றை நீங்கள் அமைக்க வேண்டும். அவ்வளவுதான்.

இனி விண்டோஸ் ஸ்டார்ட் செய்கையில், இந்த யு.எஸ்.பி. ஸ்டிக்கை அதன் போர்ட்டில் செருகி வைக்கவும். விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும்போது பிரிடேட்டரை இயக்கவும். பின், எப்போதெல்லாம், கம்ப்யூட்டரை லாக் செய்து செல்ல வேண்டும் என விரும்புகிறீர்களோ, அப்போது, இந்த யு.எஸ்.பி.ஸ்டிக்கினை எடுத்துச் செல்லலாம். எடுத்தவுடன் கீ போர்ட் மற்றும் மவுஸ் லாக் செய்யப்பட்டு, திரை கருப்பாக மாறிவிடும். மீண்டும் இதனை அதன் இடத்தில் செருகிப் பயன்படுத்தினால் மட்டுமே, கம்ப்யூட்டர் இயங்கும்.
கம்ப்யூட்டரை லாக் ஆப் செய்து செல்லலாமே என நாம் நினைக்கலாம். விண்டோஸ் கீ + எல் கீயை அழுத்தினால், லாக் செய்திடலாமே என்ற எண்ணம் ஓடலாம். இதனையும் பயன்படுத்தலாம். இங்கு நீங்கள் மீண்டும் இயக்க பாஸ்வேர்டினை டைப் செய்திட வேண்டும். இந்த பாஸ்வேர்ட் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால், தொல்லைதான். ஆனால் பிரிடேட்டர் ஒரு சாவி போலவே செயல்படுகிறது. யு.எஸ்.பி. ஸ்டிக்கினை கம்ப்யூட்டர் வீட்டின் சாவி போலப் பயன்படுத்தலாம்.

புரோகிராம்கள் அனைத்தையும் எடுத்துச் செல்லலாம்


கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த, பயன்படுத்திப் பழக்கப்பட்ட புரோகிராம்களில் செயல்படுவதனையே விரும்புவார்கள். இதனால் தான் பெரும்பாலும், பயன்படுத்தும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களையே பணியாற்ற தேர்ந்தெடுப்பார்கள். நாம் பணியாற்றும் பிற கம்ப்யூட்டர்களில், நாம் விரும்பும் அனைத்து புரோகிராம்களையும் இன்ஸ்டால் செய்திட முடியாது. ஏன், எடுத்துச் செல்வது கூட சிரமமாக இருக்கும்.
இந்த சிரமத்தைப் போக்கும் வகையில் அனைத்து புரோகிராம்கள் மற்றும் புக்மார்க்குகள், புரோகிராம் அமைப்புகள், இமெயில் கிளையண்ட் புரோகிராம் அமைப்புகள் என அனைத்தையும் எடுத்துச் சென்று, எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படும் வகையில் ஒரு தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வேறு கம்ப்யூட்டர்களில் பயன்படுத்துகையில், நம் தனிநபர் தகவல்கள் எதுவும், பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் களில் தங்காது என்பது இதன் சிறப்பு.
இந்த அப்ளிகேஷனை PortableApps.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இலவசமாகக் கிடைக்கும் இந்த வசதி இரண்டு தொகுப்பாக PortableApps.com Suite and PortableApps Platform என்று கிடைக்கின்றன. இது முற்றிலும் இலவசம். சோதனைக் காலம், அதன் பின் கட்டணம் என்று எதுவும் இல்லை. இதில் ஸ்பைவேர் எதுவும் இணைக்கப்படவில்லை. இதனை காப்பி செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். Portable Apps.com Suite என்பதில் நமக்குத் தேவைப்படும் இணைய பிரவுசர், இமெயில் கிளையண்ட், ஆபீஸ் தொகுப்பு, காலண்டர்/ திட்டமிடுதல், இன்ஸ்டண்ட் மெசெஜ் அனுப்ப, ஆண்ட்டி வைரஸ், ஆடியோ பிளேயர், சுடோகு கேம்ஸ், பாஸ்வேர்ட் மேனேஜர், பிடிஎப் ரீடர்,பேக் அப் எடுக்க என அனைத்து பணிகளுக்கும் போர்ட்டபிள் அப்ளிகேஷன்கள் தரப்பட்டுள்ளன. மொஸில்லா பயர்பாக்ஸ், தண்டர்பேர்ட், சன்பர்ட், க்ளாம் விண், பிட்ஜின், சுமத்ரா பிடிஎப், கீ பாஸ் பாஸ்வேர்ட், சுடோகு, மைன்ஸ் பெர்பக்ட் கேம், கூல் பிளேயர், ஓப்பன் ஆபீஸ் / அபி வேர்ட் என அனைத்து வேலைகளுக்குமான புரோகிராம்கள் அனைத்தும் இதில் அடக்கம்.
இந்த தளத்தில் உள்ள சப்போர்ட் பிளாட்பார்மில், இந்த போர்ட்டபிள் அப்ளிகேஷன்கள் அனைத்தையும் பயன் படுத்தும் வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.
முதன் முதலில் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான போர்ட்டபிள் அப்ளிகேஷனை உருவாக்கிய ஜான் டி ஹாலர், பின் படிப்படியாக, ஒருவரின் கம்ப்யூட்டர் செயல்பாட்டிற்குத் தேவையான அனைத்து புரோகிராம்களையும் உருவாக்கி, இவ்வாறு முழுத் தொகுப்பாகக் கொடுத்துள்ளார். இந்த போர்ட்டபிள் அப்ளிகேஷன் தொகுப்பினை பிளாஷ் ட்ரைவ், ஐபாட், மெமரி கார்ட், போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் போன்ற எந்த போர்ட்டபிள் மெமரி சாதனத்திலும் எடுத்துச் செல்லலாம்.

ஆபீஸ் 2010 – வேகமாக இயக்க

தற்சமயம் வந்திருக்கும் ஆபீஸ் 2010 தொகுப்பு, அதன் பதியப்பட்ட நிலையில் தரப்பட்டிருக்கும் சில வடிவமைப்புகளையும், வசதிகளையும், நம் விருப்பப்படி மாற்றி அமைத்துக் கொள்ள வழிகளைத் தந்துள்ளது. இந்த தொகுப்பினைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், தொடக்க நிலையில் உள்ள இதன் வண்ணம், பயன்பாட்டில் உள்ள சில வழிகள் ஆகியவை தங்கள் ரசனைக்கும் பயன்படுத்தும் முறைக்கும் இணைந்து செல்வதில்லை என்றே கருதுகிறார்கள். எனவே இவற்றை மாற்றும் வழிகளையும் இந்த தொகுப்பு தருகிறது. அவற்றை இங்கு காணலாம்.
1.வண்ணக் கட்டமைப்பை மாற்றுக: இது ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்து வதிலான மாற்றம் அல்ல. அதனைப் பயன்படுத்தும் சூழ்நிலை சம்பந்தப்பட்டது. இந்த தொகுப்பு அமைக்கப்பட்டுள்ள மென்மையான ஊதா வண்ணத்துடன் தரப்பட்டுள்ள அனைத்து வண்ணங்களும், வேலை பார்க்கையில் சற்று எரிச்சலைத் தந்து, வேகத்தைக் கட்டுப்படுத்துவதாகப் பலரும் எண்ணுகின்றனர். குறிப்பாக கருப்பு வண்ணப் பின்னணியில் கிடைக்கும் வெள்ளை வண்ணத்திலான எழுத்துக்களை யாரும் விரும்புவதில்லை. இந்த வண்ணக் கட்டமைப்பினையே மாற்றிவிடலாம். இந்த வழிகள் ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து புரோகிராம்களுக்கும் பொருந்தும். முதலில் பைல் டேப்பினத் தேர்ந்தெடுக்கவும். இதன் இடது பக்கம் உள்ள ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடுக. மீண்டும் கிடைக்கும் பிரிவுகளில், இடது புறம், ஜெனரல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் கலர் ஸ்கீமில் ஒரு கீழ்விரி கட்டம் தரப்படும். இங்கு உங்களுக்குத் தேவையான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும். இப்படியே ஒவ்வொரு வண்ணத்தையும் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
2. ரிப்பனை மாற்றி அமைக்க: ஆபீஸ் 2007 தொகுப்பில், முதல் முதலாக ரிப்பன் இன்டர்பேஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போது பலரும் இதனை விரும்பவில்லை. புதியதாக ஒன்றைத் தந்து பயன்படுத்து என்று சொன்னால், பொதுவாக யாருக்குமே ஒரு வெறுப்பு வரும். ஆனாலும் வேண்டா வெறுப்பாக இதனை அனைவரும் பயன்படுத்தினார்கள்.
இப்போது ஆபீஸ் 2010 தொகுப்பிலும் இது தரப்பட்டுள்ளது. இதனை ஏன் நமக்கேற்றபடி வைத்துக் கொள்ளக் கூடாது? என்ற நம் கேள்விகளுக்கேற்ப, மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்த ரிப்பனை வளைக்க சில வழிகளைத் தந்துள்ளது. இந்த வழிகள் மூலம், ஆபீஸ் 2003 தொகுப்பிலிருந்து, புதிய தொகுப்பிற்கு மாறுபவர்களுக்கு ஏற்படும் சில தொல்லைகளைத் தீர்க்கலாம். இதில் ஒருவர் அடிக்கடி பயன்படுத்தாத சில கட்டளைகளை இதிலிருந்து நீக்கலாம். அல்லது அவற்றைத் தனியே பிரித்து, டேப் ஒன்றில், இன்னொரு இடத்தில் வைக்கலாம். கட்டளைகளின் பெயர்களைக் கூட மாற்றலாம். இதில் இன்னொரு சிறப்பான அம்சமும் உள்ளது. இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட ரிப்பனை, சேவ் செய்து இன்னொரு கம்ப்யூட்டரில் உள்ள ஆபீஸ் 2010 தொகுப்பிலும் அமல் படுத்தலாம். உங்கள் வீட்டு டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் ஆபீஸ் தொகுப்பில் மாற்றப்பட்டதனை, அலுவலகக் கம்ப்யூட்டருக்கும், லேப் டாப் கம்ப்யூட்டருக்கும் கொண்டு செல்லலாம். மாற்றும் வழிகள் அனைத்தும் http://news.officewatch.com/t/n.aspx?a=968 என்ற முகவரியில் உள்ள தளத்தில் தரப்பட்டுள்ளது.
3. குயிக் அக்செஸ் டூல்பார்: ரிப்பனை நம் வழிக்குக் கொண்டு வந்தது போல, அடிக்கடி நாம் பயன்படுத்தும் சில கட்டளைகளை, அவை எந்த ரிப்பன் டேப்பில் இருந்தாலும், விரைவாகப் பெற வேண்டும் என விரும்புவோம். இங்கு தான் குயிக் அக்செஸ் டூல் பார் நம் உதவிக்கு வருகிறது. ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்துபவர்கள் பலர் இந்த வசதியினை அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை. இந்த டூல்பாரில் Save, Save As, Undo, Redo, Email, New Comment மற்றும் New Document போன்ற அனைத்து கட்டளைகளையும் போட்டு வைத்துப் பயன்படுத்தலாம். அதே போல இந்த டூல்பாரையும், ரிப்பனுக்கு மேலாக இல்லாமல், அதன் கீழாக வைப்பது, இவற்றை இயக்குவதற்கு எளிதாக இருக்கும்.
4. லைவ் பிரிவியூ இயக்கலாமே!: வேர்ட் டாகுமெண்ட்களில் ஏதேனும் ஒன்றை பேஸ்ட் செய்கையில், அது எந்த வடிவமைப்பில், டாகுமெண்ட்டில் ஒட்டிக் கொள்ளும் என்பது தெரியவராது. ஒட்டிய பின்னரே, இதனை வேறு முறையில் வைத்திருக்கலாமே என்று எண்ணுவோம். இந்த குழப்பத்தினைத் தவிர்க்க, வேர்ட் தொகுப்பில் லைவ் பிரிவியூ என ஒரு வசதி தரப்பட்டுள்ளது. பிரிண்ட் கொடுக்கும் முன், டாகுமெண்ட் எப்படி அச்சில் கிடைக்கும் என்பதனைப் பிரிண்ட் பிரிவியூ மூலம் அறிந்து கொள்வது போல, ஒட்டும் முன் எப்படி ஒட்டப்படும் என்பதனையும் அறிந்து கொள்ளலாம். எந்த பார்மட்டில் ஒட்டப்பட வேண்டும் என்பதனையும் தேர்ந்தெடுத்து, அந்த வகையில் ஒட்டலாம். ஆனால், இந்த வசதி, ஆபீஸ் 2010 தொகுப்பினைப் பதிகையில், இயக்கப்படாமல் உள்ளது. இதனை இயக்க நிலையில் வைத்திட, File | Options சென்று General பிரிவில் Enable Live Preview செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
5. ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன்ஸ் சரி செய்க: டாகுமெண்ட் தட்டச்சு செய்கையில் ஏற்படும் பொதுவான பிழைகள் தானாகச் சரி செய்யப் படுவதற்காகத் தரப்பட்டுள்ள ஒரு அருமையான வசதி ஆட்டோ கரெக்ட் ஆகும். இதனால் நமக்கு நேரம் மிச்சமாகும். ஆனால் சில வேளைகளில் நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என சில சொற்களை டைப் செய்தாலும், ஆட்டோ கரெக்ட் வசதி, அதனைத் திருத்தி மாற்றி அமைக்கும். எடுத்துக்காட்டாக, சொல் ஒன்றின் முதல் இரு எழுத்துக்களைப் பெரிய எழுத்துக்களாக அமைத்து எழுத வேண்டிய சூழ்நிலையில், அப்படி அமைத்திடும்போது, ஆட்டோ கரெக்ட் அதனைத் தவறென்று கருதி, மாற்றிவிடும். நாம் என்ன செய்தாலும் இரண்டு எழுத்துக்களைத் தொடர்ந்து பெரிய எழுத்துக்களாக அமைத்து சொல்லை அமைக்க முடியாது. எடுத்துக்காட்டாக, Thomas Rick என்பவர் அமைத்த ஒரு நிறுவனம் TRick என்றே எழுதப்படும். இதனை TRick என தட்டச்சு செய்கையில் ஆட்டோ கரெக்ட் TRick என மாற்றிவிடும். இதற்காக ஆட்டோ கரெக்ட் பட்டியல் சென்று TWo INitial Caps என்ற பதிவையே எடுத்துவிட்டால், பின் மற்ற தவறுகள் திருத்தப்படாமல் அமைக்கப்படும். எனவே சில விதிவிலக்குகளை இங்கு அமைத்திட வேர்டில் வழி தரப்பட்டுள்ளது. இந்த வழியைக் கீழ்க்காணும் முறையில் பெறலாம்.
1. BackStage மெனுவில் இடது பக்கம் உள்ள பிரிவில் Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Proofing என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து AutoCorrect என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. AutoCorrect டேப்பில், Exceptions என்னும் பட்டனில் கிளிக் செய்திடுக.
4. பின்னர் INitial CAps என்ற டேப்பில் கிளிக் செய்து, Don’t Correct என்பதின் கீழ் குறிப்பிட்ட சொல்லை நீங்கள் விரும்பும் வகையில் டைப் செய்து, அதன்பின் Add என்பதில் கிளிக் செய்து, பின்னர் ஓகே அழுத்தி வெளியேறவும்.
இவ்வாறு விதிவிலக்கான சொற்கள் அனைத்தையும் இதில் இணைத்து வைத்துவிட்டால், ஆட்டோ கரெக்ட் உங்கள் விருப்பத்திற்கு மாறாகத் திருத்தாது.
மேலே தரப்பட்டுள்ள மாற்றங்களைப் போல, வேர்ட் தொகுப்பில் இன்னும் சில மாற்றங்களையும் மேற்கொண்டு, அதனை நம் வசதிக்கேற்ப அமைத்து வேகமாகப் பணியை மேற்கொள்ளலாம்.

பென் டிரைவ்வில் பூட் பைல்

                   வைரஸ்களை நீக்கும் மற்றும் எதிர்த்து அழிக்கும் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், பல இலவச ஆபத்துக் கால சிஸ்டம் பூட் சிடிக்களைத் தருகின்றன. ஏதேனும் வைரஸ் பாதிப்பால், சிஸ்டம் இயங்குவது முடங்கிப் போனால், உடனே இந்த ஆபத்துக்கால மீட்பு சிடிக்கள் மூலம் கம்ப்யூட்டரை இயக்கி, உள்ளே இருக்கும் வைரஸ் மற்றும் சார்ந்த கோப்புகளை அழித்து, நம் செயல்பாட்டினைத் தொடரலாம்.
இப்போது முதல் முறையாக, ஒரு பிளாஷ் ட்ரைவ் மூலம் இதே போன்ற ஆபத்துக்கால பாதுகாப்பு பயன்பாட்டினை ஒரு ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் தந்துள்ளது. இந்த வகையில் பிரபலமான காஸ்பெர்ஸ்கி (Kaspersky)  நிறுவனம், அண்மையில் Kaspersky USB Rescue Disk Maker  என்ற புரோகிராமினை வழங்குகிறது. இந்த புரோகிராம் மூலம், வைரஸால் சிஸ்டம் முடங்குகையில், கம்ப்யூட்டரை இயக்க, ஒரு பிளாஷ் ட்ரைவினை உருவாக்கி வைக்கலாம்.
Kaspersky Rescue Disk 10   என அழைக்கப்படும் இந்த சாதனம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ் புரோகிராம்களை அழித்து, கம்ப்யூட்டரை பழைய இயங்கு நிலைக்குக் கொண்டு வருகிறது. கம்ப்யூட்டரில் ஏற்கனவே பதியப்பட்டு இயங்கி வரும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களால், பாதிப்பை உருவாக்கிய வைரஸ் புரோகிராம்களை ஒன்றும் செய்திட முடியவில்லை என்ற நிலைக்கு வந்த பின்னரே, இதனைப் பயன்படுத்த வேண்டும்.  இதன் கூடுதல் சிறப்பு இதனை ஒரு பிளாஷ் ட்ரைவில் உருவாக்கிப் பயன்படுத்தலாம் என்பதே. இதனை எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.
காஸ்பெர்ஸ்கி யு.எஸ்.பி. ரெஸ்க்யூ டிஸ்க்கினைத் தயார் செய்திட இரண்டு புரோகிராம்களை டவுண்லோட் செய்திட வேண்டும்.
1. அண்மையில் வெளிவந்த காஸ்பெர்ஸ்கி ரெஸ்க்யூ டிஸ்க் 10 க்கான ஐ.எஸ்.ஓ. இமேஜ் மற்றும் இரண்டாவதாக, காஸ்பெர்ஸ்கி யு.எஸ்.பி. ரெஸ்க்யூ டிஸ்க் மேக்கர் http://support.kaspersky.com/viruses/rescuedisk/main?qid=208282163 என்ற முகவரியிலிருந்து பெறலாம்.


                     இவற்றைக் கொண்டு நாம் பாதுகாப்பினை அமைக்க இருக்கும் யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்  FAT16  அல்லது  FAT32 பைல் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். என்.டி.எப்.எஸ். பைல் வகையினைக் கொண்டிருக்கக் கூடாது.
இந்த இரண்டு பைல்களையும் டவுண்லோட் செய்து, மேலே கூறியபடி பார்மட் செய்யப்பட்ட, எதுவும் எழுதப்படாத பிளாஷ் ட்ரைவ் ஒன்றையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இனி எப்படி இந்த ஆபத்துக் கால பாதுகாப்பு யு.எஸ்.பி. டிஸ்க்கினைத் தயார் செய்வது எனப் பார்ப்போம்.
1. முதலில் Kaspersky USB Rescue Disk Maker  என்ற பைலை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
2.புரோகிராம் இன்டர்பேஸில், காஸ்பெர்ஸ்கி ரெஸ்க்யூ டிஸ்க்  இமேஜைத் தேடிப் பெறுங்கள். பின்னர், இணைக்கப்பட்டுள்ள யு.எஸ்.பி. ட்ரைவினை யும் தேர்ந்தெடுங்கள்.
3.இந்த ட்ரைவில் உள்ள பிளாஷ் ட்ரைவினைத்தான், ரெஸ்க்யூ ட்ரைவாக உருவாக்கிப்  பயன்படுத்த இருக்கிறோம்.
4. ஸ்டார்ட் என்பதில் கிளிக் செய்தவுடன், ஐ.எஸ்.ஓ. இமேஜிலிருந்து தேவையான பைல்கள், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவில் காப்பி ஆகும். காப்பி செய்து முடித்தவுடன், பிளாஷ் ட்ரைவ் உங்கள் ஆபத்துக் கால நண்பனாக இருக்கும்.
இதனை ஒருமுறை இயக்கி சோதனை செய்து பார்த்து வைத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் சிஸ்டம் இயங்கும்படி செய்து, இது நோக்கத்திற்கேற்ற முறையில் செயல்படுகிறதா என்பதனையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.  இதனை சிடி அல்லது டிவிடி யிலும் காப்பி செய்து வைத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவை பற்றி ஆங்கிலத்தில் பார்க்க மேலே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கிழ் உள்ள படத்தை பற்றி உங்கள் கருத்து
என்னுடைய கருத்து இது கலிகால உலகமடா சாமி !!!!!!!!!!!!!!!!!!!!!!

Sep 21, 2010

ஒரு வருடத்திற்கான இலவச ஆண்டி வைரஸ்-AVAST 5.0.677

காலை வணக்கம் நண்பர்களே !
         
             இன்று ஒரு வருடத்திற்கு இலவசமாக ஆண்டி வைரஸ் மென்பொருளை கொடுத்து உள்ளேன். இந்த மென்பொருளின் பெயர் அவாஸ்ட் ஆண்டி வைரஸ் ஆகும். இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

             இதை தரவிறக்கம் செய்து வந்த பைல்லை வின் ரார் என்ற மென்பொருள் கொண்டு விரிவாக்கம் (EXTRACT) செய்யவும். விரிவாக்கம் செய்யும் போது password கேட்கும். password - avast5.0

             விரிவாக்கம் செய்த பின்னர் கிடைக்கும் பைல்லில்  setup_av_free என்ற பைல்லை இன்ஸ்டால் செய்யவும். ( இன்ஸ்டால் செய்த பின் அவாஸ்ட் ஆண்டி வைரஸ் ஓபன் செய்து maintenance-registration-insert license key என்ற இடத்தில் C32589011H1200A0712-SZ7HY12P ரோஸ் கலர்ரில் உள்ள கீயை காபி செய்து பேஸ்ட் செய்யவும் ).
     
            இனி நீங்கள் ஒரு வருடத்திற்கான இலவசமாக ஆண்டி வைரஸ் மென்பொருளை பெற்று விட்டிர்கள். update செய்வதற்கு  vpsupd என்ற பைல்லை இன்ஸ்டால் செய்யவும். அவாஸ்ட் ஆண்டி வைரஸ் மென்பொருள் 4.8 trial version வைத்து இருப்பவர்கள் அடைப்பு குறிக்குள் உள்ளதை செய்யவும். இத்துடன் அவாஸ்ட் ஆண்டி வைரஸ் Removal Tool கொடுத்துள்ளேன். இது இன்ஸ்டால் செய்த மென்பொருள் வேண்டாம் என்றால் அன்இன்ஸ்டால் செய்ய பயன்படுகிறது.  
 
         WIN RAR 3.93 FULL மென்பொருள் இல்லாதவர்கள் கிழே உள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்யலாம்.
http://www.4shared.com/file/V8ORIw4I/WinRAR393Final.html 

        அவாஸ்ட் ஆண்டி வைரஸ் மென்பொருள் தரவிறக்கம் செய்ய கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
http://www.4shared.com/file/s0Ewted_/AVAST_VIRUS__UPDATE.html 


   
 

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்