விண்டோஸ் XP இயங்குதளத்தில் பல தலைவலிகள் உள்ளன. இவற்றில் ஒரு சில வகைகளுக்கு மட்டுமான இலவச மருந்துகள் கிடைக்கும் மருந்துக் கடையின் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக வெவ்வேறு விதமான தலைவலிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
1. File Folder Association:-
உங்கள் வன்தட்டில் உள்ள எந்த ஃபோல்டரையும் திறக்க இயலாது. Open with என்று கேட்கும்.
2. Gif file Association:-
Gif - Extension கொண்டுள்ள கோப்புகளை திறக்க இயலாது.
3. Drive Association:-
உங்கள் வன்தட்டில் உள்ள C,D,E போன்ற ட்ரைவ்களை திறக்க இயலாது.
4. EXE file Association:-
பெரும்பாலான EXE கோப்புகளை திறக்க முடியாமல் போவது.
5. LNK file Association:-
Application shortcut கள் .lnk Extension கொண்டுள்ளதால், அப்ளிகேஷன் ஷார்ட்கட் களை திறக்க முடியாமல் போவது.
6. Jpeg file Association:-
நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எடுத்து வைத்திருந்த புகைப்படங்கள், மற்றும் கணினியில் உள்ள jpeg கோப்புகளை திறக்க இயலாது.
7. TXT file Association :-
Text கோப்புகள் எதுவும் திறக்க இயலாது.
8. ZIP Folder Association:-
சொல்ல வேண்டுமா?
விண்டோஸ் இயங்குதளத்தில் வருகின்ற பல வியாதிகளில் மேலே சொல்லப்பட்டவை ஒரு பகுதி மட்டுமே. மொத்த வியாதியும் ஒன்றாக வந்தால்..
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..
ட்ரைவை திறக்க முடியாது,
ஃபோல்டரை திறக்க முடியாது
கோப்புகளை திறக்க முடியாது..
படங்களையும் பார்க்க முடியாது..
விவேக் காமெடி தான் நினைவிற்கு வருகிறது..
"சாய்ங்காலம் 6 மணிக்கு மேல கண்ணு ரெண்டும் அவிஞ்சு போச்சு,
ஒரு காது தீஞ்சு போச்சு
சீட்டு மூலத்துல தேஞ்சு போச்சு,
நெஞ்சு TB-ல காய்ஞ்சு போச்சு
கால்'ல ஆணி பாய்ஞ்சு போச்சு"
ஒரு காது தீஞ்சு போச்சு
சீட்டு மூலத்துல தேஞ்சு போச்சு,
நெஞ்சு TB-ல காய்ஞ்சு போச்சு
கால்'ல ஆணி பாய்ஞ்சு போச்சு"
இவையனைத்திற்கும் ஒரே தீர்வு.. உபுண்டு இயங்குதளத்திற்கு நீங்கள் மாறுவதுதான்..
அதெல்லாம் முடியாது.. இருப்பதையே டிங்கரிங் வேலை பார்ப்போம்.. என்ற முடிவிற்கு வந்தவர்கள், மருந்து கடைக்கு போங்க..
No comments:
Post a Comment