சமீப காலமாக சந்தையில் களமிறங்கியுள்ள Netbook என்றழைக்கப்படும் சிறிய வகை மடி கணினிகளை மக்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள். அவற்றின் விலை குறைவாக இருப்பதும் (மடிகணினிகளின் விலைப்பட்டியல்) , கையில் எடுத்துச் செல்வது எளிது என்பது போன்ற காரணங்களால் அனைவரையும் கவர்ந்திருப்பது ஆச்சர்யமல்ல.
ஆனால் இந்த நெட்புக்கில் DVD ட்ரைவ் இல்லை என்ற ஒரு குறைபாடு உண்டு. இதன் ஒரு சில மாடல்களில் இயங்குதளம் நிறுவப்படாமல், Free DOS உடன் வருகிறது. இது போன்ற நெட் புக் களில் விண்டோஸ் 7 , விஸ்டா போன்ற இயங்குதளங்களை நிறுவ, External DVD ட்ரைவ்களை நாட வேண்டியுள்ளது.
இந்த Netbook அல்லது DVD ட்ரைவ் இல்லாத/பழுதடைந்த கணினிகளில் பென் ட்ரைவ் மூலமாக இயங்குதளத்தை நிறுவ முடியுமா? இதற்கு நமக்கு தீர்வாக அமைகிறது WinToFlash என்ற மென்பொருள் கருவி.
இந்த மென்பொருளை உபயோகித்து உங்கள் பென் ட்ரைவை ஒரு Windows Bootable Installation Drive ஆக உருவாக்க, விண்டோஸ் 7 அல்லது தேவையான விண்டோஸ் இயங்குதள Installation CD/DVD இருக்க வேண்டும். மேலும் CD/DVD டிரைவ் உள்ள கணினி இருக்க வேண்டும்.
முதலில் நீங்கள் இதற்காக உபயோகிக்கும் பென் ட்ரைவை (8GB அளவு இருத்தல் நன்று) NTFS முறையில் Format செய்து கொள்ளுங்கள்.
WinToFlash மென்பொருள் கருவியை திறந்து கொள்ளுங்கள். Windows Setup Transfer Wizard ஐ க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து Task tab -இல் Task type இற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் உங்களுக்கு தேவையான இயங்குதளத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து வரும் Basic Parameters திரையில் Windows Files path என்பதில் உங்கள் Windows Installation CD/DVD யின் path ஐ கொடுங்கள். USB Drive இற்கு நேராக USB ட்ரைவின் path ஐ கொடுங்கள். சில சமயம் திறக்கும் விண்டோஸ் லைசன்ஸ் அக்ரீமென்ட் திரையில் I Accept கொடுத்து Continue பொத்தானை அழுத்துங்கள்.
இப்பொழுது பென் ட்ரைவ் மறுபடியும் போர்மட் செய்யப்பட்டு, கோப்புகள் காப்பியாக துவங்கும். இதற்கு பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் எடுக்கலாம். இது உங்கள் கணினியின் வேகத்தைப் பொருத்து மாறுபடும்.
அவ்வளவுதான்!. உங்கள் பூட்டபிள் USB டிரைவ் ரெடி. இதை தேவையான Netbook அல்லது கணினிகளில் Boot from USB drive option இல் சென்று எளிதாக இயங்குதளத்தை நிறுவி விடலாம்.
No comments:
Post a Comment