உங்களுக்கு விண்டோஸ் எக்ஸ்பியில் ‘ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்’ ரக தொந்தரவுகளும் , மற்றும் இன்ன பிற ஸ்டார்ட்டப் பிரச்சனைகள் , லாகின் தொந்திரவுகள் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால் , நீங்கள் மறக்காமல் நிறுவ வேண்டிய மென்பொருள் விண்டோஸ் ரெக்கவரி கன்சோல் .
அடம்பிடிக்கும் ஒரு எக்ஸ்பி இயங்குதளத்தை வழிக்கு கொண்டுவர ரீஇன்ஸ்டால் செய்வதற்க்கு முன் ஒரு கடைசி முயற்சி கொடுத்து சரி செய்வதற்கு இந்த ரெக்கவரி கண்ஸோல் உதவும் .
இதை நிறுவுவதற்கு முதலில் விந்டோஸ் எக்ஸ்பி சிடியை எடுத்துக்கொள்ளுங்கள் .
1) முதலில் சிடியை கணினியில் இட்டு ஸ்டார்ட் -> ரன் , தேர்ந்தெடுங்கள் .
2) வருகிற ரன் டயலாக் பாக்ஸில் CD-ROM drive letter:\i386\winnt32.exe /cmdcons என்று டைப்புங்கள் . [ கவனிக்க : இங்கே CD-ROM drive letter என்றிருக்கும் இடத்தில் உங்களுடைய சிடி அல்லது டிவிடி டிரைவின் எழுத்தை கொடுக்க வேண்டும் .
3)இப்பொழுது வரும் டயலாக் பாக்ஸின் தகவல்களை பின்பற்றி “பினிஷ்” கொடுங்கள் .
இது உங்கள் கணினியில் ரெக்கவரி கன்சோலை நிறுவி விடும் .
உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்தீர்களென்றால் டீபால்டாக முப்பது நொடிகளுக்கு உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பியை பூட் செய்யவா அல்லது ரெக்கவரி கன்சோலை பூட் செய்யவா என்ற மெனு வந்திருக்கும் .
ரெக்கவரி கன்சோலை உபயோகிக்க உங்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்டு தெரிந்திருக்க வேண்டும் .
தற்போதைக்கு இவ்வளவுதான். ” மரித்த நீலத்திரை ” யை ரெக்கவரி கன்ஸோல் வைத்து சமாளிக்கும் விதத்தை முந்தைய பதிவில் பாருங்கள்..
வணக்கம் .
No comments:
Post a Comment