Popular Posts

Sep 2, 2010

கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம்.

கணினி பயன்படுத்தும் நாம் அனைவருவே தெரிந்து வைத்துக்கொள்ள


வேண்டிய முக்கியமான தகவல் தான் இந்தப்பதிவு கீபோர்ட்-ல் எந்த

கீ பழுதானாலும் நாம் பிரச்சினை இல்லாமல் தட்டச்சு செய்யலாம்.

படம் 1



படம் 2



இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து நண்பர் கிருஷ்ணன்

அவரது மடிக்கணினியில் இரண்டு கீ (பொத்தான்) வேலை

செய்யவில்லை இதனால் அந்த குறிப்பிட்ட கீயைப் பயன்படுத்த

முடியவில்லை என்றும் கூறி இருந்தார். சரி நாமும் இவருக்காக

தேடிய போது சில மென்பொருட்கள் கிடைத்தது. கூடவே அதிசயமான

ஒன்றும் கிடைத்தது இதுவரை நாம் இதைப் பயன்படுத்தி இருப்போமா

என்று கூட தெரியவில்லை எந்த மென்பொருளும் இல்லாமல்,

ஆன்லைன் கூட செல்லாமல், நம் கணினியில் Start – > Run

சென்று OSk என்று கொடுத்தால் போதும் ஆன் ஸ்கிரின் கீபோர்ட்

ஒன்று நம் கண்முன்னால் வருகிறது. எந்த கீ தட்டச்சு செய்ய

வேண்டுமோ அந்த கீ மேல் மவுஸ்-ஐ வைத்து சொடுக்கினால்

போதும் எளிதாக நாம் அந்த கீ-யைப் பயன்படுத்த முடிகிறது.

படம் 3



குழந்தைகள் பயன்படுத்தும் சிலவகையான மடிக்கணினியில்

கண்டிப்பாக சில கீ பொத்தான் வேலை செய்யாமல் இருக்கும்

அவர்களுக்கும், கணினி பயன்படுத்தும் நாமும் தெரிந்து

வைத்திருக்க வேண்டிய முக்கியமான பதிவாக இது இருக்கும்.

1 comment:

PAATTIVAITHIYAM said...

நண்பரே உங்களை வாழ்த்துகிறேன். பலருக்கும் உபயோகமான மென்பொருட்களைப்பற்றியும் கணிணி சந்தேகங்களையும் இலவசமாக தீா்த்து வைக்கிறீா்கள். என்னுடைய கணிணி புட் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. இதை சரி செய்வதற்கு (பார்மட் செய்யாமல்)ஏதாவது வழி இருக்கிறதா என்று தெரிவித்தால் உபயோகமாக இருக்கும். நன்றி

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்