Popular Posts

Sep 22, 2010

விண்டோஸ் 7 டிப்ஸ்

டாஸ்க்பார் ஹாட் கீ
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பலவிதமான ஷார்ட் கட் கீ மற்றும் ஹாட் கீ தொகுப்புகளைத் தந்துள்ளது. கீழே டாஸ்க்பாரில் நாம் இயக்கக் கூடிய ஹாட் கீகளைக் காணலாம்.
டாஸ்க்பாரில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனில் இயங்கும் பைல்கள் மொத்தமாக இருப்பின், அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று கண்ட்ரோல் + கிளிக் செய்தால், அந்த குரூப்பில் உள்ள பைல்கள் வரிசையாகக் காட்டப்படும்.
டாஸ்க்பாரில் உள்ள ஐட்டம் ஒன்றில், கண்ட்ரோல் + ஷிப்ட்+கிளிக் செய்தால், அந்த புரோகிராம் அட்மினிஸ்ட்ரேட்டர் திறப்பது போலத் திறக்கப்படும். இதே போல டாஸ்க் பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட் + கிளிக் செய்தால், அதற்கான புரோகிராம் இயக்கத்தை இன்னொரு விண்டோவில் திறக்கும்.
டாஸ்க்பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட + ரைட் கிளிக் செய்தால், அந்த புரோகிராமிற்கான விண்டோ மெனு காட்டப்படும்.
கால்குலேட்டர்
பொதுவாக விண்டோஸ் சிஸ்டத்தில் கால்குலேட்டர் ஒன்று அக்செசரீஸ் பட்டியலில் தரப்படும். இது சாதாரணமான கணக்குகளைப் போட்டுப் பார்க்க பயன்படும். கூட்டல், பெருக்கல், கழித்தல் மற்றும் வகுத்தல் கணக்குகளை இதில் மேற்கொள்ளலாம்.
விண்டோஸ் 7 தொகுப்புடன் கிடைக்கும் கால்குலேட்டரில் பல புதிய சிறப்புகள் உள்ளன. விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனு மேலாக உள்ள சர்ச் பாரில் CALC என டைப் செய்து என்டர் அழுத்தவும். உடன் கால்குலேட்டர் கிடைக்கும். இதன் மேலாக உள்ள View என்பதில் கிளிக் செய்திடவும். இதன் நேர் கீழாக கால்குலேட்டர் கட்டமைப்பை மாற்றிக் காணும் வகையில் ஆப்ஷன்ஸ் தரப்படும். இவை standard, scientific, programmer மற்றும் statistics என நான்கு வகைகளில் கிடைக்கும். மேலும் View> Worksheets என்ற பிரிவில் சென்றால் நம் கடன் தொகைக்கான மாதம் கட்ட வேண்டிய தொகையினைக் கணக்கிடும் வசதி உள்ளதனைப் பார்க்கலாம். இவை எதுவும் வேண்டாம் என பின் நாளில் எண்ணுகையில் ஙடிஞுதீ>ஆச்ண்டிஞி என்பதனை அழுத்தினால் போதும். சாதாரண கால்குலேட்டர் கிடைக்கும்.
விண்டோஸ் 7 வைத்திருப்பவர்கள் இந்த கால்குலேட்டரை இயக்கிப் பாருங்கள். பின் சாதாரண கணக்குகளுக்கான கால்குலேட்டரை மூட்டை கட்டி வைத்திடுவீர்கள்.
கிளாசிக் டாஸ்க் பார்
புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறியவுடன், நீங்கள் புதிய வடிவிலான டாஸ்க் பாரினைப் பார்த்து வியந்திருப்பீர்கள். அது உங்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. செவ்வக வடிவிலான பட்டன்களுக்குப் பதிலாக, சிறிய பட்டன்களைக் காணலாம். இது பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு பழைய வடிவிலான டாஸ்க் பார் தான் பிடிக்கிறது. இவர்கள் புதிய வடிவத்தைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணியிருந்த எனக்கு, டாஸ்க் பார் ப்ராப்பர்ட்டீஸ் பார்த்த போது பழைய வகைக்கு மாறிக் கொள்ளலாம் என்று தெரிய வந்தது. நீங்களும் விரும்பினால் கீழ்க்கண்டபடி அதனை செட் செய்திடலாம்.
டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Taskbar buttons என்ற கீழ் விரி மெனுவினைக் காணவும். இதில் Combine when taskbar is full என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அந்த புரோகிராம் பெயருடன் நீளமான சதுரத்தில், முன்பு காட்டப்பட்டது போல காட்சி அளிப்பதனைக் காணலாம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்