வணக்கம் நண்பர்களே !
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. சிறிது காலம் ஜாவா மற்றும் உபுண்டு கற்று கொண்டு இருப்பதால் பதிவுகள் குறைவாக இருக்கும் என கருதுகிறேன்.
விசைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து படித்து நம்
பொன்னான நேரத்தை மீச்சப்படுத்தாலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
மைக்ரோசாப்ட் வேர்டு- ல் கோப்பை திறக்க மற்றும் சேமிக்க மட்டும்
தான் Shortcut கீ உங்களுக்கு தெரிந்திருக்கிறதா இனி உங்களுக்கு
தெரிந்த தெரியாத அத்தனை ஷார்ட்கட் கீ -யையும் ஒரே இடத்தில்
இருந்து தெரிந்து கொள்ளலாம் இது மைக்ரோசாப்ட் வேர்டு-க்கு
மட்டும் அல்ல அத்தனை மென்பொருட்களுக்கும் உண்டான Shortcut
கீ -யும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.
இணையதள முகவரி : http://www.shortcutworld.com
Shorcut World என்ற இந்த தளத்திற்கு சென்று நாம் Firefox 4 ,
Chrome 6 , Word 2010 , Excel 2010 , Photoshop CS5, After Effects CS5 ,
Windows 7 , GMail ,OneNote 2010 ,Internet Explorer 8 ,VLC Media Player
Ubuntu Desktop 9 , PowerPoint 2007 , Outlook 2010 , Windows Media
Player 11 இன்னும் பல மென்பொருட்களின் எளிய பயன்பாட்டு
ஷொர்ட்கட் கீ -க்களை தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக இந்தத்தளம்
கணினியே உலகம் என்று பயன்படுத்துபவர்களுக்கு நேரத்தை
மீச்சப்படுத்தும் ஒரு பொக்கிஷமான தளம்.
நன்றி :
No comments:
Post a Comment