Popular Posts

Nov 30, 2010

Duplicate கோப்புகளை கண்டறிந்து நீக்க

நாம் நமது கணினியில் டாக்குமெண்டுகள், புகைப்படங்கள், MP3 பாடலகள், வீடியோ க்ளிப் போன்ற பலவகையான கோப்புகளை வைத்திருப்போம். பல சமயங்களில் ஒரே கோப்பு உங்கள் வன் தட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ட்ரைவ் மற்றும் ஃபோல்டர்களில் இருப்பதுண்டு. இதனால் உங்கள் வன் தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதும் உண்டு.

இந்த பிரச்சனையை தீர்க்க பல கட்டணம் செலுத்த வேண்டிய மென்பொருட்கள் இருந்தாலும், ஒரு இலவச மென்பொருள் Duplicate Cleaner. வெறும் 3 எம்பி அளவுள்ள மிகவும் பயனுள்ள கருவி!. உங்கள் கணினியில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இதன் Installation Wizard இல் Registry Reviver பகுதியில் Registry Cleaner தேவையில்லை என்றால், Do not Install Registry Reviver ஐ தேர்வு செய்து Install பொத்தானை அழுத்தி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.


இந்த கருவியை இயக்கும் பொழுது, முதல் திரையில் எச்சரிக்கை செய்தியை வாசித்து, OK பொத்தானை அழுத்துங்கள்.



இப்பொழுது திறக்கும் Duplicate Cleaner திரையில், இடதுபுற பெட்டியில் தேவையான ட்ரைவ் மற்றும் கோப்புறைகளை தேர்வு செய்து அடுத்த பெட்டிக்கு ADD செய்து கொள்ளுங்கள்.





அடுத்து வலது புறமுள்ள File Search பகுதியில் உள்ள File Filter இல் கோப்பு வகையை கொடுங்கள் (Word கோப்பு எனில் *.DOC எனவும், படங்களுக்கு *.JPG.. )



பிறகு, கீழே உள்ள GO பொத்தானை அழுத்துங்கள். உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புகளின் அளவை பொறுத்து தேடும் வேகம் மாறுபடும்.





அடுத்த திரையில் தேடுதல் பணி முடிந்து விட்டதற்கான அறிவிப்பு வருவதை கவனிக்கலாம்.





இனி தேவையற்ற டூப்ளிகேட் கோப்புகளை கவனமாக தேர்வு செய்து கீழே உள்ள பொத்தான்களில் தேவையானதை க்ளிக் செய்து, டூப்ளிகேட் கோப்புகளை உங்கள் கணினியிலிருந்து நீக்கி, உங்கள் வன் தட்டினை பராமரிக்கலாம்.


 நன்றி : தமிழர்களின் சிந்தனைகளம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்