Popular Posts

Sep 4, 2010

உங்கள் கம்ப்யூட்டரில் “NTLDR missing, press ctrl + alt + delete to Restart” என்று வந்தால்....




உங்கள் கம்ப்யூட்டரை Start செய்யும் போது "NTLDR missing, press ctrl+alt+delete to Restart” என்று வந்தால் என்ன செய்வீர்கள்?

NTLDR என்பது New Technology loader என்பதாகும். கம்ப்யூட்டர் Start ஆகும்போது BIOS ஆனது Harddrive ன் Active Partition MBR க்கான முதலாவது Sector ஜ Read செய்யும் பின்புதான் மற்ற Os பகுதிகள் Loading ஆகும். MBR ஆனது NTLDR ற்கு point செய்யப்பட்டுள்ளது. ஆகவேதான் NTLDR , Ntdetect.com போன்ற பூட்டிங் பைல்களில் ஏதாவது பிழை ஏற்படும் போதுதான் மேற்கூறிய Error message வருகிறது.

இப்படி பிரச்சனை வரும்போது விண்டோஸை புதிதாக நிறுவாதீர்கள் ஏனெனில் இப்படிச் செய்தால் நீங்கள் "My document" ல் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து பைல்களும் அளிந்துவிடும். இந்தப் பிரச்சனைக்கு சிறந்த வளியொன்று உள்ளது.

•முதலில் கம்ப்யூட்டரை "Restart" செய்யுங்கள்
•பின்பு கம்ப்யூட்டரை 'விண்டோஸ் CD' மூலம் பூட்டிங் செய்யுங்கள்
•சிறிது நேரத்தில் Taskbar , Enter=Continue , R=Rapier , F3=Quit போன்றவற்றைக்
கொண்ட திரை தோன்றும்
•அப்போது 'R' என்பதை அளுத்துங்கள் பின்பு
•1 Windows என்பதும் அதற்குக்கீழ் Which windows installation would you like to log onto (to cancel, press Enter)? காணப்படும் இதில் 1 ஜ அளுத்துங்கள்.
•பின்பு உங்கள் “Administrator” பாஸ்வேடைக் கொடுத்து “Log on” செய்யுங்கள்.
•இனி C:\Windows> என்பதில் கீழுள்ள Code ஜ Type செய்யுங்கள்

Copy E:\I386\NTLDR C:\
Copy E:\I386\NTDETECT.COM C:\

என்று Type செய்து Enter செய்தால் சரி.

இனி Exit எனறு Type செய்தால் இதை விட்டு வெளியேறலாம். அல்லது 'Restart' செய்யுங்கள். இப்போது உங்கள் பிரச்சனை சரியாகிவிடும்.

குறிப்பு : இங்கு C என்பது “CD Rom Drive” ஆக கொடுத்துள்ளேன். நீங்கள் உங்கள் கம்யூட்டரில் CD Rom Drive ஆக எது உள்ளதோ அதைக் கொடுத்தால் சரி.

குறிப்பு : இங்கு E என்பது எனது கம்ப்யூட்டரில் விண்டோஸ் install செய்துள்ள Drive ஆக கொடுத்துள்ளேன். நீங்கள் உங்கள் கம்யூட்டரில் எந்த Drive ல் விண்டோஸ் install செய்துள்ளீர்களோ அதைக் கொடுத்தால் சரி.

இந்த இரண்டையும் சரியாகக் கொடுப்பது மிகவும் அவசியம்.

நன்றி : மேனன் 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்