Popular Posts

Apr 20, 2011

கணணியில் நோட் பாட் பேச வேண்டுமா?

நோட் பாட் பற்றி நமக்கு தெரியும். ஆனால் பேசும் நோட் பாட் பற்றி
 கேள்விப்பட்டதுண்டா? இதற்கு முதலில் இந்த லிங்கை கிளிக் செய்து இந்த
மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளவும். அடுத்து ஓபன் ஆகும் விண்டோவில்
தேவையான டாக்குமெண்டை திறந்து கொள்ளுங்கள் அல்லது புதியதாக
 ஒன்றை தட்டச்சு செய்து கொள்ளுங்கள். இதில் உள்ள Reading டேபை கிளிக்
 செய்யுங்கள்.
Read என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் தட்டச்சு செய்த அல்லது ஓப்பன் செய்த
டாக்குமெண்டை இந்த மென்பொருள் படித்துக் காண்பிக்கும். இதில் உள்ள மற்றும்
ஒரு வசதி என்னவென்றால் இதில் விதவிதமான 12 ஆண்-பெண் குரல்கள் உள்ளது.
உங்களுக்கு எது தேவையோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இதில்
உள்ள டாக்குமெண்டை படிக்க வைத்து அதை wav.mp3 என எந்த வகையான
ஓடியோ-சீடியாகவும் எளிதில் மாற்றிக் கொள்ளலாம்.
மாணவர்கள் தயாரிக்கும் கட்டுரையை ஓடியோ சீடியாக மாற்றிக் கொண்டு
ஒலியாக கேட்டால் எளிதில் மனதில் பதியும். இதில் பல வண்ணங்களும்
இணைத்துள்ளதால் வேண்டிய வண்ணத்திற்கு இதன் முகப்பை மாற்றிக்
கொள்ளலாம்.
Read வசதி மூலம் நாம் தட்டச்சு செய்யும் போதே தட்டச்சு செய்ததை கேட்கும்
வசதியும் மற்றும் கர்சரை எங்கு வைத்திருந்தாலும் அங்கிருந்து கேட்கும்
வசதியையும் இதில் கொண்டு வரலாம்.

1 comment:

PAATTIVAITHIYAM said...

Super software. அறிமுகம் செய்ததற்கு நன்றி ரமேஷ். MS word document-ல் இது போல் தட்டச்சு செய்வதை படிக்கும் மென்பொருள் இருந்தால் மேலும் உதவியாக இருக்கும். அதே போல் நாம் பேசுவதை தட்டச்சு செய்யக்கூடிய மென் பொருள் இருக்கிறதா? இருந்தால் அதையும் வெளியிடுங்கள். மீண்டும் நன்றி

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்