Popular Posts

Dec 16, 2010

வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக வெறும் 32 கேபி அளவுள்ள ஒரு குட்டி மென்பொருள் பற்றி பார்க்கலாம் இதன் வழியாக நீங்கள் வங்கியில் கடன் பெற நினைத்தால் உங்களுக்கு எந்த விகிதத்தில் கடன் தருகிறார்கள் என்பதையும் நீங்கள் கடனை திருப்பி கொடுக்க நினைக்கும் கால அவகாசத்தையும் கணக்கில் வைத்து ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலுத்தவேண்டும் என்பதை எளிதாக அறியலாம் இந்த மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யவேண்டியதில்லை நேரடியாகவே இயங்கும்.


இனி Loan Calculator தரவிறக்குங்கள் இப்போது 5 கேபி அளவு மட்டுமே இருக்கும் இனி இதை வின்ரார் உபயோகபடுத்தி கோப்பை எக்ஸ்ட்ராக்ட் செய்து மென்பொருளை இயக்குங்கள் உங்களுக்கு தேவையான வட்டி விகிதத்தை நொடியில் கணக்கிடுங்கள்.

                                   
என்ன நண்பர்களே இந்த குட்டி மென்பொருள் தஙகளுக்கு இப்பொழுது பயன்படாது என நினைக்கிறேன் முடிந்தவரை இதன் தேவை தங்களுக்கு வராமல் இருக்கட்டும் ஒரு வேளை சுப காரியாமாக வீடு கட்ட நினைத்தால் அந்த நேரத்தில் வங்கியில் லோன் எடுக்க வேண்டி வரும் (முடிந்தவரை சிக்கனமாக இருந்து சேமித்து வையுங்கள் நாம் வாழ்வது நமக்காக மட்டுமே மற்றவர்களுக்காக ஆடம்பரமாக இருந்து கடனாளியாகி விடாதீர்கள்) பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய அளித்து செல்லவும்.

நன்றி : ஞானசேகர்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்