Popular Posts

Dec 30, 2010

தமிழில் விண்டோஸ் மற்றும் ஆபிஸ்

 விண்டோஸ் மற்றும் ஆஃபிஸ் ஆகியவற்றை தமிழிலே காணவேண்டுமா? மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய மொழிகளுக்கான இடைமுகத்தை தனது இயங்குதளம் மற்றும் ஆஃபிஸ் மென்பொருள் ஆகியவற்றிற்கு
வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாம் விண்டோஸ் மற்றும் ஆஃபிஸ் ஆகியவற்றை தமிழிலே அணுகலாம்.ஆம் முழு தமிழ் கணினியாயாக விண்டோசை இயக்க முடியும்.

மென்பொருளை பதிவிறக்குவதற்கான இணைப்புகள் கீழே உள்ளன
Office 2003 தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Office 2003 பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது
Office 2003 தமிழ் இடைமுக தயாரிப்பு


Office 2007 தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Office 2007 பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Office 2007 – தமிழ் இடைமுக தயாரிப்பு

Windows XP தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Windows XP பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Windows XP ® தமிழ் இடைமுக தயாரிப்பு

Windows Vista தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Windows Vista பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Windows Vista மொழி இடைமுகத் தொகுப்பு

இந்த தகவலிறக்கத்தை நிறுவ:
1. இந்த LIP.exe கோப்பை தகவலிறக்கம் செய்ய தகவலிறக்கம் பொத்தானை (மேலேயுள்ளது) கிளிக் செய்த பின்னர் கோப்பை உங்கள் நிலை வட்டில் சேமிக்கவும்.
2. அமைவு நிரலை துவங்க உங்கள் நிலை வட்டில் உள்ள LIP.exe நிரல் கோப்பை இருமுறை கிளிக் செய்யவும்.
3. நிறுவுதலை நிறைவு செய்ய திரையில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.
4. விருப்பச் செயல்: Tamil_GS.exe கோப்பை தகவலிறக்கம் செய்து, உங்கள் நிலை வட்டில் சேமிக்கவும். பின்னர் உங்கள் நிலை வட்டில் உள்ள Tamil_GS.exe நிரல் கோப்பை இரு-கிளிக் செய்யவும், நிறுவலை நிறைவு செய்ய திரையில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

வழிகாட்டுதல்கள்:
பயனீட்டாளர் இடைமுக மொழியை Office 2003 பதிப்பு தமிழ் இடைமுக தயாரிப்பின் பயனீட்டாளர் இடைமுக மொழிக்கு மாற்ற, கீழ்கண்ட செயல்களை பின்பற்றவும்:
1. நீங்கள் Start மெனுவில், All Programs சுட்டிக்காட்டி, Microsoft Office சுட்டிக்காட்டி, Microsoft Office Tools என்பதில் சுட்டிக்காட்டவும், பின்னர் Microsoft Office 2003 Language Settings கிளிக் செய்யவும்.
2. பின்னர் User Interface and Help தாவலில், Display Office 2003 in பட்டியலில், நீங்கள் காண்பிக்க விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கவும்.
3. பின்னர் OK கிளிக் செய்யவும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழி அமைப்புகள், அடுத்த முறை Office பயன்பாடுகளை நீங்கள் துவங்கும் போது செயற்படுத்தப்படும்.


இந்த தகவலிறக்கத்தை அகற்ற:1. அனைத்து நிரல்களிலிருந்தும் வெளியேறவும்.
2. நீங்கள் Start மெனுவில், Settings சுட்டிக்காட்டி, பின்னர் Control Panel என்பதில் கிளிக் செய்யவும்.
3. அங்கு Add/Remove Programs என்பதை இரு-கிளிக் செய்யவும்.
4. தற்போது நிறுவப்பட்டுள்ள நிரல்கள் பட்டியலில், Microsoft Office 2003 Edition Tamil Interface Pack கிளிக் செய்யவும். பின்னர், Remove அல்லது Add/Remove கிளிக் செய்யவும். உரையாடல் பெட்டி தோன்றினால், நிரல் அகற்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.
5. நிரலை அகற்ற விரும்புகிறீர்கள் என்பதை உறுதி செய்ய Yes அல்லது OK கிளிக் செய்யவும். 

முக்கிய  குறிப்பு இதற்கு உங்களுடைய ஒபெரடிங் சிஸ்டம் உண்மையான பதிப்பாக இருக்க வேண்டும்.

அன்புடன் : ரமேஷ்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்