Popular Posts

Dec 9, 2010

டேலி 9 மென்பொருள் முழுவதும் தமிழில் பயன்படுத்த...


Tally 9 in Indian Languagesடேலி பிரபலமான அக்கவுண்டிங் மென்பொருள் என்பது எல்லோருக்கும் தெரியும். நிறுவனமாக இருந்தாலும் தனிநபராக இருந்தாலும் அவரவர்களின் கணக்கு வழக்கு, வரவு செலவு போன்றவற்றை திறம்பட இதில் நிர்வகிக்கலாம். இந்தியாவில் அதிகமாக டேலி மென்பொருளைத் தான் பயன்படுத்துகின்றனர். மேலும் டேலி படிப்பிற்கு அதிக மவுசு உள்ளது. டேலியின் புதிய பதிப்பான 9 ஐ இந்திய மொழிகளிலும் பயன்படுத்தலாம்.

இது டேலி 9 கோல்டு வெர்சனின் 90 நாட்கள் மட்டும் பயன்படுத்த முடியும் என்றிருந்தது. ஆனால் இதை ஏமாற்ற நிறுவும் போது உங்கள் கணிணியின் தேதியை 30 வருடங்கள் முன்னே உள்ளே மாதிரி ( 2040 ) அமைத்துக்கொள்ளவும். இந்த மென்பொருளை நிறுவி முடித்ததும் கணினியின் தேதியை மறுபடியும் இன்றைய தேதிக்கு மாற்றிக்கொள்ளுங்கள். இதன் பின்னர் டேலி மென்பொருள் எப்போதும் போல தடையின்றி செயல்படும். இல்லையென்றால் RunAsDate என்ற மென்பொருளையும் பயன்படுத்தலாம்.

டேலியை நிறுவும் போது Country -> India/Saarc எனவும் Language-> Tamil எனவும் கொடுங்கள்.
Tally 9 in Indian Languagesநிறுவி முடித்தபின்னர் டேலியைத்திறந்தால் அறிவிப்பு ஒன்று வரும். அதை Esc கொடுத்து தவிர்த்தால் அதன் முகப்பு பக்கம் வரும்.
Tally 9 in Indian Languagesஉங்களுக்கு வேண்டிய் மொழியை மாற்ற மெனுவில் Language அல்லது மொழி என்பதை தேர்வு செய்து மாற்றிக்கொள்ளலாம். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகள் உள்ளன். வேண்டிய மொழியை தேர்வு செய்தால் அந்த மொழிக்கு மாறி விடும்.

Tally 9 in Indian Languages

மேலும் இதில் உள்ள விசேசம் என்னவென்றால் விசைப்பலகை உள்ளீட்டுக்கான மொழி(Keyboard Layout Language). நீங்கள் விரும்பிய மொழியில் தட்டச்சிட்டுக் கொள்ளலாம். இதை மாற்ற மெனுவில் Keyboard அல்லது விசைப்பலகை என்பதை கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக தமிழை தேர்ந்தெடுத்தால் Amma என தட்டச்சிட்டால் அம்மா என மாறிக்கொள்ளும். நீங்கள் கம்பெனியின் பெயரிலிருந்து பதிவேடுகள், பேரேடுகள் முழுவதும் தமிழிலேயே தட்டச்சிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழிலேயே அறிக்கைகளை அச்சிட்டுப்பெறலாம்.

Tally 9 in Indian Languages
மேலும் Balance sheet, Trial Balance, Profit and Loss Account போன்ற அறிக்கைகளையும் தமிழில் பெறலாம்.

தரவிறக்கச்சுட்டி:
http://www.4shared.com/file/WlGi-lj5/Tallyinstall.html (16 Mb)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்