Popular Posts

Dec 16, 2010

ஓராண்டில் 8 முறை உயர்ந்த பெட்ரோல் : பொதுமக்கள் கொதிப்பு

பெட்ரோல் விலையை பிப்.,22 ல் ரூ.,3.01, ஏப்.,1 ல் 54 காசு, ஜூன் 26 ல் ரூ.,3.79 , செப்.,8 ல் 10 காசு, செப்.,29 ல் 29 காசு, அக்.,15 ல் 78 காசு, நவ.,8 ல் 35 காசு, டிச.,15 ல் ரூ.,2.95 என ஓராண்டில் எட்டுமுறை படிப்படியாக மொத்தம் ரூ.,11.88 காசை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு,
ஜூனில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது. இதன்படி, சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, ஜூன் முதல் தற்போது வரை ஆறு முறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. ஆனால் விலை

ஒரு போதும் விலை இறங்கவில்லை. பாரத் பெட்ரோலிய நிறுவனம் பெட்ரோலை
லிட்டருக்கு ரூ.2.95 அதிகரித்துள்ளதையடுத்து, மதுரையில் அந்நிறுவன பங்க்குகளில் ரூ.60.70 க்கு விற்பனையாகிறது. பிற பெட்ரோலிய நிறுவனங்களும் விலையை அதிகரிக்க உள்ளன. ஆட்டோ காஸ் விலை சில தினங்களுக்கு முன் ரூ.,33.௧௬ லிருந்து ரூ.,34.36 ஆக (ரூ.,1.20) உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சுமையை தாங்க முடியாமல் விழிபிதுங்கும் மதுரை வாகன ஓட்டிகளின் குமுறல் இதோ.... சரவணன் (டூவீலர்-தனியார் நிறுவன ஊழியர், விராட்டிபத்து):
பெட்ரோல் விலை முன்பு 45 ரூபாய் இருந்தபோது ஒரு ரூபாய், 50 காசு என
உயர்த்தினர். தற்போது மூன்று ரூபாய் என்பது மிக அதிகம். இதனால், அனைத்து
அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும். எங்களுக்கு லிட்டருக்கு
50 ரூபாய்தான் "அலவன்ஸ்' தருகின்றனர்.

கூடுதல் தொகையை, சம்பளத்திலிருந்துதான் சமாளிக்க வேண்டியுள்ளது. மதுரையில் ரோடுகள் மோசமாக உள்ளதால், மெதுவாகத்தான் செல்ல முடியும். இதனால் எரிபொருள் விரையமாகிறது.

சுப்பிரமணி (டூவீலர், தனியார் நிறுவன ஊழியர், மேலமாசி வீதி):
பால், டீ என தினசரி வீட்டுச் செலவு 30 ஆக இருந்தால், இனி 60 ரூபாயாக
அதிகரிக்கும். விலைவாசிக்கேற்ப, சம்பள உயர்வு கிடையாது. இதை எப்படி
எதிர்கொள்வது எனத் தெரியவில்லை. பெட்ரோல் விலையை, மத்திய அரசே நிர்ணயிக்கவேண்டும்.

பால்ராஜ் (ஆட்டோ டிரைவர், பெத்தானியாபுரம்): ஏற்கனவே, ஆட்டோ வாடகை அதிகம் என பயணிகள் புலம்புகின்றனர். இனி குறைந்தபட்ச கட்டணம் 20க்கு பதிலாக 40 ரூபாய் வசூலித்தால்தான், எங்களுக்கு கட்டுபடியாகும்.

முருகேசன் (கார்-தொழிலதிபர், எல்லீஸ் நகர்): அண்டை நாடுகளில்
பெட்ரோல் விலை, நம்மை விட மிகக்குறைவு. அதேபோல், நம்நாட்டில் வழங்குவதில்
என்ன சிரமம்? எங்களைப்போல் தொழில்புரிவோரின் வருவாய் நிலையில்லாதது. ஆட்டோகாஸ், பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க மாற்றுவழி தெரியவில்லை.

வித்யா (ஜவுளிக்கடை உரிமையாளர், எல்லீஸ் நகர்): அனைத்து
பொருட்களின் விலையும் ஏற்கனவே உச்சத்தில் உள்ளது. இனி, மேலும் உயரும்.
மக்கள் அனைத்து வழிகளிலும் அதாவது பொருளாதார ரீதியாகவும் சிக்கனத்தை
கடைபிடித்தால்தான் சமாளிக்க முடியும். நாம் கார், டூவீலர்களுக்கு மாற்றாக,

பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டியதுதான் சிறந்த வழி. இந்த விலைஉயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு கூறினர்.
பெட்ரோலை சேமிக்க என்ன வழி?
* அபார்ட்மென்டுகளில் வசிப்போர், ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தால்,யாராவது ஒருவரின் வாகனத்தில் சேர்ந்து செல்லலாம். மற்றவர்களின் வாகனத்தையும் மாறி மாறி பயன்படுத்தலாம்.
* வீட்டின் அருகில் "ஷாப்பிங்' செல்ல வேண்டி இருந்தால், முடிந்த அளவு நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது சைக்கிளை பயன்படுத்துங்கள்.உடலுக்கும் நல்லது.
* டவுன் பஸ் வசதி உள்ளோர், அதையும் பயன்படுத்தலாம்.
* மாணவ பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்கு டூவீலர் வாங்கித் தருவதை தவிர்த்து, சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவியுங்கள்.
* தனி நபராய், கார் பயன்படுத்துவதையும் குறைக்க முயற்சிக்கலாம். குடும்பத்துடன் செல்ல வேண்டி இருந்தால் மட்டுமே, காரை எடுங்கள்.
* மிக பழைய வாகனங்களை மாற்றி விடுங்கள். இவை பெட்ரோலை அதிகம் குடிக்கும்.
* வாகனத்தில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை நெருங்கி விட்டால், குறைந்தது 50 மீட்டர் தூரத்திலேயே இன்ஜினை அணைத்து விடுங்கள். நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை பெட்ரோல் செலவு இல்லாமலேயே வாகனம் அடைந்து விடும்.
இப்படி 20 முறை செய்தால் கூட ஒரு கி.மீ., தூரத்திற்கு செல்ல வேண்டிய பெட்ரோல் மிச்சம் ஆகும்.

* ஒரு இடத்தில் டூவீலரை நிறுத்தி விட்டு, மீண்டும் திரும்ப வேண்டி இருந்தால், வண்டியை ஸ்டார்ட் செய்யாமலேயே திருப்பி விட்டு, பின்னர் இன்ஜினை ஸ்டார்ட் செய்தாலும் பெட்ரோல் மிச்சம் ஆகும். இதுபோன்ற வழிகளை பின்பற்றினால், வீட்டுக்கும் நாட்டுக்கும் சேமிப்பு.

பெட்ரோலை சிக்கனப்படுத்தி வாகனம் ஓட்டுவது எப்படி?

* குறைந்த தூர பயணம் மற்றும் அடிக்கடி வாகனத்தை நிறுத்துவதை குறைக்க வேண்டும்.

*வாகனம் நின்றுக்கொண்டிருக்கும் போது இன்ஜினை ஓடவிடக்கூடாது. 10 நிமிடம் இன்ஜின் ஓடினால் 100 மி.லி., பெட்ரோல் வீணாகும்.

* அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

* 40 கி.மீ., வேகத்தை தாண்டினால் "டாப் கியரில்' சென்றால் பெட்ரோல் மிச்சமாகும்.

* டயர்களில் காற்றின் அளவு சரியாக இருக்கிறதா என வாரம் ஒருமுறை "செக்கப்' செய்வது நல்லது.

* பழுதடைந்த "கிளட்ச்', சரியில்லாத இன்ஜின், டியூனிங், தூசி போன்றவை பெட்ரோலை "குடிக்கும்'.

* தேவையில்லாமல் இன்ஜினை "ரைஸ்' செய்யக் கூடாது.

* திடீர் திடீரென வேகத்தை கூட்டவோ, குறைக்கவோ கூடாது.

* அடிக்கடி பிரேக், கிளட்ச் பிடித்து வாகனம் ஓட்டக்கூடாது.

* சிக்னல்களில் 20 வினாடிகளுக்கு மேல் நிற்க நேர்ந்தால், இன்ஜினை அணைப்பது நல்லது.

"கியருக்குரிய' கி.மீ., தெரியுமா? இரு சக்கர வாகனங்கள் 10கி.மீ., வேகத்தில் முதல் மற்றும் 2வது "கியரிலும்', 20 கி.மீ., வேகத்தில்மூன்றாவது "கியரிலும்', 30 கி.மீ., வேகத்தில் 4வது "கியரிலும்', 40கி.மீ.,க்கு மேலே 5வது "கியரிலும்' "பறக்கலாம்'. அரசின் கவனத்திற்கு சாலைகளை குண்டும் குழியுமாக இல்லாமல் மாற்றினால், எரிபொருள் மிச்சமாகும் என்பதை கவனத்தில் கொண்டால் நல்லது..
நன்றி : தமிழர்களின் சிந்தனை களம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்