Popular Posts

Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Mar 24, 2015

Microsoft To Offer Free Windows 10 Upgrades On Pirated Copies

Microsoft has officially announced to offer pirate amnesty to all qualified PCs, genuine and non-genuine, with free upgrades to Windows 10. Earlier, Microsoft has offered cheap Windows 8 activations for $14.99 to gain traction for the newly released OS, but this time it's absolutely free for all. The offer will be available worldwide and would also means that anybody during the first year of Windows 10 release can pirate Windows 7 or Windows 8.x and then upgrade to Windows 10 for free.



Microsoft has now also clarified that PCs with pirated copies of Windows 7 and Windows 8.1 will be allowed to get free upgrades to Windows 10, but will remain in a 'non-genuine' status and Microsoft will not support them. Microsoft spokesperson further said - "Non-genuine Windows is not published by Microsoft. It is not properly licensed or supported by Microsoft or a trusted partner. If a device was considered non-genuine or mislicensed prior to the upgrade, that device will continue to be considered non-genuine or mislicensed after the upgrade. According to industry experts, use of pirated software, including Non-genuine Windows, results in a higher risk of malware, fraud — identity theft, credit card theft, etc. — public exposure of your personal information, and a higher risk for poor performance or feature malfunctions."


Mar 2, 2015

ஆண்ட்ராய்ட் போன்களைப் பழுதுபார்க்க

கேட்ஜெட் பிரியர்கள் மத்தியில் ஐபிக்ஸிட் (iFixit) இணையதளம் மிகவும் பிரபலமானது. இந்தத் தளம் நவீன் சாதனங்களை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து அதன் செயல்பாடுகளை விளக்கி, அவற்றைப் பயனாளிகளே பழுதுபார்த்துக்கொள்ள வழிகாட்டக்கூடியது.
இந்தத் தளத்தின் பின்னே பெரிய இணைய சமூகமே இருக்கிறது. எல்லோருமே கேட்ஜெட் செயல்பாடுகளை அறிவதில் ஆர்வம் கொண்டவர்கள். அவற்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறவர்கள். இந்தத் தளத்தில் உள்ள ஒரே குறை என்ன என்றால் இது ஐபோன், ஐபேடு சாதனங்களைப் பிரதானமாகக் கொண்டது என்பதுதான்.
ஆனால் இந்தக் குறை இனி இல்லை. ஆம், இப்போது ஐபிக்ஸ்டி ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காகவும் அறிமுகமாகியிருக்கிறது. ஆண்ட்ராய்டு போன்களே பிரபலமாக இருப்பதால் இந்த வகை சாதங்களுக்கான பகுதி தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 252 சாதனங்களுக்கான டியர்டவுன் வழிகாட்டி இடம்பெற்றுள்ளது. அதாவது அந்தச் சாதனங்களைத் தலைகீழாகப் பிரித்துப்போட்டு அவற்றின் செயல்பாடுகள் விளக்கப்பட்டிருக்கும். ஸ்மார்ட் போன், டேப்லெட்கள் இதில் அடங்கும். இவற்றுக்கான பாகங்களை வாங்கும் வசதியும் இருக்கிறது.
 ஆண்ட்ராய்ட் சாதனம் தொடர்பாக எந்தச் சந்தேகம் என்றாலும் இந்த இணையதளத்துக்கு செல்லுங்கள். தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள், ஆனால் போனில் கை வைக்கும்போது நீங்கள்தான் பொறுப்பு. ஆண்ட்ராய்டுக்கான ஐபிக்ஸிட் தளம்: https://www.ifixit.com/android

Thanks Tamilrockers.com

Mar 16, 2012

Jan 7, 2012

Notification For Kaninimenporul

கணினி மென்பொருள் தளத்தில் இருந்து ஓர் முக்கிய அறிவிப்பு ESET Anti Virus Or ESET Smart Security போன்ற antivirus மென்பொருள்களுக்கு பயனர் பெயர் (username), பாஸ்வோர்ட் (password) தேவைப்படுவர்கள் என்னக்கு ஈமெயில் அனுப்பவும். ஈமெயில் முலமாக பயனர் பெயர் (username), பாஸ்வோர்ட் (password) அனுப்பி வைக்கப்படும்.


அன்புடன்  
ர.ரமேஷ் 

Jan 5, 2011

வருங்கால மடிக்கணினி - Crolltop

வணக்கம் நண்பர்களே,


                  என்ன தான் தொழில் நுட்பம் வளர்ந்து இருந்தாலும் கணிணி துறையில் இந்த
கணினியின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. முன்பெல்லாம் கணினியை ஒரு சிறு இடங்களில்  மட்டுமே காண முடிந்தது. அதன் பின் வீடுகளிலும் அலுவலுகங்களிலும் இருந்தன. 

                   பின் படிப்படியாக மடிக்கணினிகளின் வருகை அதிகமானது. மடிக்கணினியானது அதிக எடை மற்றும் அதன் எக்ஸ்டெர்னல் வன்பொருல்களால் அதனை தூக்கி கொண்டு செல்வது கடினமானது. உலக சந்தையில் புதிதாக வந்துள்ள இந்த மடிக்கணினியை சுருட்டி தூக்கி கொண்டு செல்வது மிகவும் எளிது.  அதுமட்டும் இல்லாமல் இந்த மடிக்கணினியில் USB PORT 3.0 , TCP/IP , WIFI , BLUE TOOTH போன்றவை இதன் உள்ளேயே உள்ளது .

                   இதன் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் மடிக்கணினியாகவும், வரைப்பலகை யாகவும் , தொலைக்காட்சியாகவும் பயன்படுத்தலாம். ஆனால் இதன் விலை என்ன வென்று சரியாக தெரியவில்லை.     
   
 வீடியோவை பார்க்க 

Jan 4, 2011

Window-98 & India 2010

நம்ம கணிணியில உபயோகப்படுத்தற மென்இயக்கி,அதாங்க சாளரம்-98 (விண்டோஸ்-98) இருக்கில்ல, அது உலகம் பூரா எப்படின்னு தெரியல, நம்ம நாட்டுல, முழுக்க முழுக்க திருட்டுப் படைப்பு(pirated version)தான், இல்லையா?

பார்த்தார் நம்ம பில்கேட்ஸ். இதை இப்படியே விட முடியாது,ஆனா திருத்தவும் முடியாது. எத்த்னை பேரு கிட்ட போயி ,'தயவு செய்து எங்க மென்பொருளை காசு கொடுத்து வாங்குங்க'-ன்னு கெஞ்ச முடியும்? நாம டி.வி.டி வாங்கி புதுப் ப்டம் பார்க்கறதை நிறுத்திட்டமா என்ன?(டி.வி.டி வாங்கி புதுப் ப்டம் பார்க்கறதை ஏன் நிறுத்தனும்? நமக்குப் புடிச்சிருக்கு, செய்யறோம்!)

அதனால,பெருந்தன்மையா ஒரு வேலை பண்ணார். சாளரம்-98ஐ அந்தந்த நாடுகளுக்கே தானமாக் கொடுத்திட்டார்.
அதாவது நம்ம பாணியில, "windows-98 நாட்டுடைமை ஆக்கப்பட்டது"
இதான் விஷ்யம்.

"அஞ்சாறு OS வச்சிருக்கறவன் எல்லாம் சந்தோஷமா கணிணிய இயக்கறான்; ஆனா ஒரு OS வச்சிகிட்டு நான் படற பாடு இருக்கே"-ன்ற கட்சியா நீங்க? பொறுங்க, அதை அப்புறம் பார்க்கலாம். (வேற என்ன ரீ-இன்ஸ்டால்தான்), இப்ப இதப் படிங்க…….!

*******************************************************
குடியரசுத்தலைவர் அவசர அறிவிப்பு : விண்டோஸ்-98ஐ வரும் ஜனவரி-26 ஆம் நாள் குடியரசு தினத்தன்று நாட்டுடைமை ஆக்குவதாக தேசத்தின் குடியரசுத்தலைவர் பிரதீப பாட்டீல் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விண்டோஸ்-98 மென்பொருள் எப்படி அரசுக்கு கிடைத்தது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பாக்.தீவிரவாதி கசாப்பின் கோப்புகள் பார்க்க வேண்டி இருப்பதால், குடியரசுதின உரையில் மேல் விவரங்கள் தெரிவிக்கப்படும் என முடித்துக் கொண்டார்.

மேலும் தகவல்கள் அரசு தரப்பில் இருந்து வரும் என எதிர்பார்க்கப் படுவதாகத் தெரிகிறது.

பிரதமர் பேட்டி : சீனாவின் லிங்-சுங் மாவட்டத்தில் அவசர பிரயாணம் சென்றுள்ள பாரதப் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அங்கேயே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இது காங்கிரஸ் அல்லாத ஆட்சியாளர்கள் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத ஒன்று என்வும், இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளினால் க(ல)வரப்பட்டே திரு.பில்கேட்ஸ் நமக்கு இப்படி ஒரு சௌகரியம் அளித்துள்ளார் எனவும் கூறினார். வரும் 2011 ஜனவரியில் நாட்டுடைமை ஆக்கப்படும் விண்டோஸ்-98, கிட்கி-98 எனும் புதிய பெயரில் 'ராஜிவ்காந்தி உத்யோக் நிகாம்' கீழ் வரும் என்றும், இதை எளிதில் தரவிரக்கம் செய்யும்விதமாக, அரசு வெப்-சைட்டில் லிங்க் தரப்படும், அதை பி.எஸ்.என்.எல். கட்டுப்பாட்டில் விடுவதற்காக துறை அமைச்சர் ராஜாவிடம் பேச தமிழக முதல்வரை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். (அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என யாரும் கேட்கவில்லை எனத் தெரிகிறது)


எம்.பி. கோட்டாவில் விண்டோஸ்-98 பெறுவது கட்டுப்படுத்தப்படுமா என்ற ஒரு 'பக்கா'வான கேள்விக்கு, (சிபாரிசு கடிதத்துக்கு எம்.பிக்கள் தற்போது ரூ.எட்டாயிரம் வாங்குகிறார்கள்) பிரதமர் சற்று கடுப்புடன், கேள்வி கேட்ட செய்தியாளரைப் பார்த்து சிரித்துக்கொண்டே 'பார்டன்' என பதிலளிக்க மறுத்துவிட்டார்.

எதிர்கட்சியினர் ஆவேசம் : விண்டோஸ்-98 ஐ உள்நாட்டிற்குள் கொண்டுவருவது(எங்கையா இருக்கீங்க?) இந்தியாவின் இறையாண்மையை சேதப் படுத்தும் என பா.ஜ. மூத்த தலைவர்களில் (ஒரே)ஒருவரான அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

நிதின் கட்காரியும் வேறு வழி இல்லாததால் இதே கருத்தை தான் வழிமொழிவதாகத் தெரிவித்துள்ளார்.
தன் பேரன் அரசியலில் ஈடுபடுவதை சகித்துக் கொள்ளமாட்டாமல்தான் மத்தியஅரசு இம்மாதியான பொய்பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக பால் தாக்கரே தெரிவித்துள்ளார். இதற்கு மஹாராஷ்ட்ராவில் தங்கியுள்ள மற்ற மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி பதில் தெரிவிக்க முடியும் என்வும், ஆனால் தமது இயக்கத்தினர் அம்மாதிரியான செயல்களில் ஈடுபடாமல் தன்னால் தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார். ஆனால் எக்காரணம் கொண்டும் விண்டோஸ்-98 இந்தியாவிற்குள் வருவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

கர்னாடகா மாநில குமாரசாமி,எடியூரப்பா பிரச்னைக்கும் விண்டோஸ்-98 வருகைக்கும் நிச்சயம் எதோ தொடர்பு இருப்பதாகவும், தனக்கு அது தொடர்பான ஆவணங்கள் விரைவில் வரும், வந்ததும் 2011 தமிழக தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று (சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் எப்பொழுதும்போல்) சுப்பிரமணிய சுவாமி அமெரிக்காவின் சான்-பிரான்ஸிசில் இருந்து தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் கதாநாயகன் சுரேஷ்கல்மாடியை மறந்துவிட்டு, விண்டோஸ்-98 CDஐ கையில் எடுத்துக்கொண்டு பாராளுமன்ற மைய மண்டபத்தில் கூக்குரல் எழுப்பி ரகளையில் ஈடுபட்ட எம்.பி.க்களிடம் சபாநாயகர் சோம்னாத்சட்டர்ஜி , விண்டோஸ்-98 வருகையினால் எம்.பி.க்களின் தொகுதி நிதி பாதிக்கப்படாது, பயணப்படி குறைக்கப்படாது என உறுதியளித்தார். நீங்கள் இப்படி நடந்து கொள்வது என் கடைசிக் காலத்தில்கூட எனக்கு வேதனையை தருகிறது எனக் கூறிவிட்டு வெளியேறினார். பிறகு எம்.பி.க்கள் பாராளுமன்ற கூட்டுக் குழுவிடம் மேல்முறையீடு செய்துவிட்டு போண்டா சாப்பிட கேண்டீன் சென்றனர்.

இதெல்லாம் அங்கே, மத்தியில்………இங்கே, மாநில நிலவரம் என்னன்னு பாக்கலாமா?

வரும் தேர்தலுக்கு முன்பாகவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வண்ணத்தொலைக்காட்சியோடு, விண்டோஸ்-98-ம், வழங்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யும் விதமாக 'அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் மாநாடு' வரும் நவம்பர் இறுதியில் நடக்கும் என துணைமுதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கும் பணி அதுவரை நிறுத்திவைக்கப்படும் எனவும், சத்துணவு பணியாளர்கள் குடும்பத்துக்கு தலா ஒரு ஓ.எஸ். வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அனைத்து கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் வழங்கப்பட்டாலும், இது அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ்தான் வரும் என்வும் தெரிவித்தார்.

டாஸ்மாக் பணியாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு பக்கத்து வீடுகளுக்கும் ஓ.எஸ் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்த் தெரிகிறது.

அந்தந்த ஏரியா கவுன்சிலர்களின் சிபாரிசுக் கடிதத்துடன், கிராம நிர்வாக அலுவலர் ஒப்புகையுடன், மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விண்ணப்பித்தால், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள், சத்துணவு ஆயா மூலம் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, மலிவு விலையில் அரசு கம்ப்யூட்டரும், தேவைப்பட்டால் விண்டோஸ்-98-ம் அடுத்து வரும் அரசு விழாவில் வழங்கப்படும்.

"மதுரையில் தமிழகமே கிடுகிடுக்க நடந்த அ.தி.மு.க.வின் கண்டனப் பொதுக்கூட்டம், எங்கே கின்னஸ் பதிவாகி விடுமோ எனப் பயந்தே கருணாநிதி இப்படி ஒரு புதிய- தமிழகத்துக்கு தேவையே இல்லாத திட்டத்தை அறிவித்திருக்கிறார்" என்று செல்வி.ஜெ.ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் அ.தி.மு.க.வில் கூட்டணி முடிவாகிவிட்ட படியால்தான் காங்கிரஸ் தைரியமாக விண்டோஸ்-98 ஐ களமிறக்கியுள்ளது எனவும்,கடந்த பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டமே விண்டோஸ்-98 மக்களுக்குக் கிடைத்திடக் காரணம், இல்லையேல் இது ஒரு தனிப்பட்ட குடும்பச் சொத்தாக மாறியிருக்கும் என்றார். ஆனாலும் அடுத்துவரும் அ.தி.மு.க ஆட்சியில் விண்டோஸ்-98ஐ அரசு அலுவலர்கள் தவிர அனைவருக்கும் இலவசமாகத் தர உடனடி நடவடிக்கை உண்டு என்றார்.

ஏதென்ஸ் நகரம்….என ஆரம்பித்த வை.கோ. தலையை சிலுப்பிக்கொண்டு 'சரி, அது வேண்டாம்' என தனக்குள் சொல்லிக் கொண்டு,பின் ஏதோ நினைத்தவராக "இலங்கையில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுவிட்ட வேளையில், ஏதும் அசைந்து கொடுக்காத அமெரிக்க ஏகாதிபத்திய விண்டோஸ்-98 நமக்கெதற்கு? இதற்கெல்லாம் கலைஞர் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒரு குடும்ப உபயோகத்திற்காக ஒரு விண்டோஸா? திருவாசகம் பற்றி உரையாற்ற அவசரமாக போய்க் கொண்டு இருப்பதால் மீண்டும் இது போல் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறேன்" என்றார்.

"இலவசங்கள் மூலம் இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தைக் கெடுத்து குட்டிச்சுவராக்கியுள்ளன", என விருதாச்சலம் பொதுக்கூட்டத்தில்(மட்டும்) பேசிய விஜயகாந்த் "தே.மு.தி.க (ஒருவேளை) ஆட்சிக்கு வந்தால், அல்லது 'விருதகிரி' தியேட்டருக்கு வந்தால் விண்டோஸுடன் எம்.எஸ்.ஆபிஸ்-2007-ம் இலவசமாக வழங்கப்படும், அதுவும் பொது மக்களின் இல்லத்துக்கே வந்து இன்ஸ்டால் செய்து, ஸ்டார்ட்  ஆல் ப்ரொக்ராம்ஸ்  கேம்ஸ்  சாலிடர் கேம்ஸ், போவது வரை அருகில் இருந்தே சொல்லித்தர 24 மாவட்டங்களில் 7 தினப் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து,5000 பட்டதாரிகளை இண்டர்வியூ செய்து, 3000 பட்டதாரிகளை தேர்ந்தெடுக்கும் பணியும் தொடங்கிவிட்டதாக……."( உஷ்….கண்ணைக் கட்டுது)

Dec 31, 2010

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் - 2011

                        

      அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் , வணக்கம் நண்பர்களே புதிய வருடம் பிறக்க போகிறது இந்த நேரத்தில்     நமது வலைத்தளம்        வாயிலாக புத்தாண்டு           வாழ்த்துகளை         தங்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.       இந்த வருடம் உங்களுக்கு         சகல செல்வத்தையும் மன அமைதியையும் தரட்டும், எப்பொழுதும் சிந்தித்து செயல்படும் திறன் கிடைக்கட்டும், உங்கள் குடும்பத்தாருடனும் நட்புகளுடனும் நெருங்கிய பந்தம் நிலைக்கட்டும்.இது வரை வாய்ப்பளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இனிய வணக்கம்
கணிணி மென்பொருள் வலைத்தளம் www.computersoftware.co.cc என்ற வலைத்தளத்திர்க்கு மாற்றப்பட்டு உள்ளது. 

--
இப்படிக்கு தங்களின் அன்புடன்
ர.ரமேஷ்
அலை பேசி : 9789119976
இணையதளம் : WWW.prabu2010-ramesh.blogspot.com
மின்அஞ்சல் : prabu2010r@gmail.com

Dec 29, 2010

 பிளாப்பி டிஸ்க் எல்லாம் காணாமல் போன பொருளாகி, சிடி, மற்றும் ப்ளாஷ் ட்ரைவ்கள் மட்டுமே பைல்களைக் கொண்டு செல்லும் பொருட்களாகிவிட்டன. இவற்றில் சிடிக்களில் அதன் தொழில் நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. 

இன்றைய நாளில் புளு ரே டிஸ்க்குகள் அதிக அளவில் டேட்டாக்களைக் கொள்ளும் சிடியாக அறிமுகமாகி, மக்களிடையே இடம் பெறத் தொடங்கி உள்ளன. 

கணனி சம்பந்தமான இலவச டுட்டோரியல் தளம்

 சிறு வயதிலிருந்து நாம் எதனையாவது கற்றுக் கொள்கிறோம் என்றால் படம் பார்த்து விளக்கம் பெற்றுத்தான் அதனை மனதில் இறுத்திக் கொள்வோம். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கின்றன. அத்தனையும் ஒருவர் தன் வாழ்நாளில் கற்றுக் கொள்ள முடியாது.



எனவே அவரவருக்கு எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறதோ அதனை மட்டும் தேடிப் பிடித்து கற்றுக் கொள்கிறோம். இணைய தளம் ஒன்றைத் தயாரிக்கிறீர்கள். டிஜிட்டல் போட்டோ எடுத்து அவற்றை கம்ப்யூட்டரில் இணைக்க முயற்சிக்கிறீர்கள். எடுத்த போட்டோக்களை எடிட் செய்திட விரும்புகிறீர்கள். இதற்கெல்லாம் உதவிக் குறிப்புகளை நாடுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கென உள்ள இந்த தளம் குறித்து நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். 


இத்தகைய உதவியினை வளமாக நல்ல டுட்டோரியல் பாடங்களாகப் பதிந்து வைத்து இந்த இணையதளம் தருகிறது. இதன் முகவரிhttp://www.goodtutorials.com/ இந்த செய்தியை எழுதும் போது இந்த தளத்தில் 25,049 டுடோரியல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 பிரிவுகளாக இந்த வழிகாட்டும் தளங்கள் உள்ளன. அவை : CSS, Flash, HTML, Illustrator, Java, JavaScript, Maya, Photography, Photoshop, PHP, Ruby, Ruby on Rails and 3ds Max   என பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் புதியதாக பதியப்பட்ட 15 உதவித் தளங்களின் பட்டியல் காணப்படுகிறது. 


நான் பார்த்த போது போட்டோ ஷாப்பிற்கான இன்டர்பேஸ் குறித்த டுடோரியல் காணப்பட்டது. இதனைத் திறந்து பார்க்கையில் போட்டோ ஷாப் குறித்து பல செய்திகள் கிடைத்தன. இந்த உதவிக் கட்டுரைகளின் கீழாக மேலும் பல உதவி தரும் தளங்களுக்கான லிங்க்குகள் உள்ளன. அவற்றையும் கிளிக் செய்து படித்துத் தெரிந்து கொள்ளலாம். இதன் கீழ் சில பிரிவுகளும் உண்டு. அவை: Rating, Clicks, Comments, Save, Share and Report இந்த தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். 


எந்த கட்டுரையை சேவ் செய்திட வேண்டுமென்றால் சேவ் டேபைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம். அப்போது இன்னொரு லிங்க் தரப்பட்டு அங்கு சேவ் செய்யப்படும். உங்கள் அக்கவுண்ட்டில் இந்த கட்டுரைகள் சேவ் செய்யப்பட்டு இருக்கும். உங்கள் அக்கவுண்ட்டை ஏற்படுத்த இந்த தளத்தில் பதிவு செய்வதும் எளிது. 


நிச்சயமாய் இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இன்றே இந்த தளம் சென்று பதிந்து கொள்ளுங்கள். குறைந்த பட்சம் உங்கள் பேவரிட் தளப் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி : திலிப்

Dec 28, 2010

கட்டுமான பொருள் முதல் காய்கறி வரை "கிடுகிடு': தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி

                        கட்டுமான பொருள் முதல் காய்கறி வரை, அனைத்து பொருட்களின் விலை
அதிகரித்து கொண்டே போவது, ஏழை, நடுத்தர குடும்பத்தினரை கடுமையாக பாதித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தி.மு.க.,வுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருவதோடு, சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில், விலைவாசி உயர்வும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

                      நாடு முழுவதும் கடந்த ஒரு ஆண்டில், கட்டுமான பொருட்கள் முதல், காய்கறி
வரை, அனைத்து பொருட்களின் விலையும் வரையறையின்றி அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி, ஒரு மூட்டை சிமென்ட் 270 ரூபாய், கம்பி ஒரு டன் 39 ஆயிரம் ரூபாய், மணல், ஜல்லி தலா ஒரு யூனிட் 2,500 ரூபாய், ஒரு செங்கல் ஏழு ரூபாய் என, விலை அதிகரித்துள்ளது. 

                            கட்டுமான பொருட்களின் இந்த விலை உயர்வால், வங்கி கடன், சேமிப்பு ஆகியவற்றை கொண்டு, சொந்த வீடு கட்ட நினைக்கும் ஏழை, நடுத்தர மக்கள் கூட, அந்த எண்ணத்தை கைவிட்டு தவிக்கின்றனர். சொந்த வீடு கனவு நிராசையாகியுள்ள நிலையில், வீட்டு வாடகையும்,"கிடுகிடு'வென உயர்வதால், வேலை விஷயமாக வெளியூரில் வசிக்கும் ஏழை குடும்பத்தினர், தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை வாடகைக்கே கொடுத்து, குடும்பம் நடத்த திணறுகின்றனர். 
                          
                                 இந்நிலையில், காய்கறிகளின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது, அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏழை, நடுத்தர குடும்பத்தினர் திருமணத்துக்கு வாங்கும் தங்க நகையும், ஒரு சவரன் 15 ஆயிரத்து 700 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் மத்திய அரசு பெட்ரோல் விலையையும், மூன்று ரூபாய் உயர்த்தியதால், தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 61 ரூபாயாக உள்ளது. 

                                       அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால், வெளியூரில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பலர், தங்கள் குடும்பத்தை ஊரிலேயே விட்டு, விட்டு தாங்கள்
மட்டும் தனியாக தங்கி, ஓட்டலில் சாப்பிட்டு வேலை செய்கின்றனர்.இந்நிலையில், ஓட்டல்களிலும் காபி விலை 14 ரூபாய், இரண்டு இட்லி 17 ரூபாய், டீ 9 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது மசாலா பொருட்கள், காய்கறி, கட்டுமானபொருள் என, அன்றாட பயன்பாட்டிற்கான அனைத்து பொருட்கள் விலையும், "கிடுகிடு'வென உயர்ந்து வரும் நிலையில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 355 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காஸ் விலையையும் மத்திய அரசு 50 ரூபாய் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ஏழை, நடுத்தர குடும்பத்தினரிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dec 27, 2010

புதுமையான ஸ்போர்ட்ஸ் வாட்ச் & ஸ்பை கேமரா

                 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவதுபோல் மிகவும் அருமையான ஸ்போர்ட்ஸ் வாட்ச் & ஸ்பை கேமரா கை கடிகாரத்தை தயாரித்து சந்தையில் விடப்பட்டுள்ளது. இந்த கை கடிகாரத்திற்கு ஸ்போர்ட்ஸ் வாட்ச் & ஸ்பை கேமரா என்று பெயர் வைத்து உள்ளார்கள். 

              இந்த புதுமையான ஸ்போர்ட்ஸ் வாட்ச் & ஸ்பை கேமரா மூலம் எதையும் படம் பிடிக்கலாம் . இதில் உள்ள வாட்ச் ஸ்போர்ட்ஸ் மற்றும் இதில் உள்ள கேமராவை கொண்டு காம்கார்டர் ஆகவும் கேமரா & ரெகார்டர் ஆகவும் பயன்படுத்தலாம். 



             மேலும் இதில் rechargable Li-ion battery, 4GB built-in மெமரி உள்ளன . இதில் உள்ள காமெராவை கொண்டு கணிணி மூலம் வெப் கேமராவாக பயன்படுத்தலாம். இதில் சிறப்பு அம்சம் என்ன வென்றால் யுஷ்பி(USB) 2 .0  போர்ட் உள்ளது. 


இதில் உள்ள கேமரா மூலம் போட்டோ எடுக்கும் போது அதன் resolution 3264 X 2448 pixel என்ற அளவில் உள்ளது . இதன் வீடியோ resolution  1280 X 960 pixel என உள்ளது . இது JPEG, AVI மற்றும்  WAV போன்ற பைல் போர்மெட்களை சப்போர்ட் செய்கிறது.
இதன் விலை சுமார் : 4450 /-  

Dec 16, 2010

ஓராண்டில் 8 முறை உயர்ந்த பெட்ரோல் : பொதுமக்கள் கொதிப்பு

பெட்ரோல் விலையை பிப்.,22 ல் ரூ.,3.01, ஏப்.,1 ல் 54 காசு, ஜூன் 26 ல் ரூ.,3.79 , செப்.,8 ல் 10 காசு, செப்.,29 ல் 29 காசு, அக்.,15 ல் 78 காசு, நவ.,8 ல் 35 காசு, டிச.,15 ல் ரூ.,2.95 என ஓராண்டில் எட்டுமுறை படிப்படியாக மொத்தம் ரூ.,11.88 காசை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு,
ஜூனில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது. இதன்படி, சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, ஜூன் முதல் தற்போது வரை ஆறு முறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. ஆனால் விலை

ஒரு போதும் விலை இறங்கவில்லை. பாரத் பெட்ரோலிய நிறுவனம் பெட்ரோலை
லிட்டருக்கு ரூ.2.95 அதிகரித்துள்ளதையடுத்து, மதுரையில் அந்நிறுவன பங்க்குகளில் ரூ.60.70 க்கு விற்பனையாகிறது. பிற பெட்ரோலிய நிறுவனங்களும் விலையை அதிகரிக்க உள்ளன. ஆட்டோ காஸ் விலை சில தினங்களுக்கு முன் ரூ.,33.௧௬ லிருந்து ரூ.,34.36 ஆக (ரூ.,1.20) உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சுமையை தாங்க முடியாமல் விழிபிதுங்கும் மதுரை வாகன ஓட்டிகளின் குமுறல் இதோ.... சரவணன் (டூவீலர்-தனியார் நிறுவன ஊழியர், விராட்டிபத்து):
பெட்ரோல் விலை முன்பு 45 ரூபாய் இருந்தபோது ஒரு ரூபாய், 50 காசு என
உயர்த்தினர். தற்போது மூன்று ரூபாய் என்பது மிக அதிகம். இதனால், அனைத்து
அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும். எங்களுக்கு லிட்டருக்கு
50 ரூபாய்தான் "அலவன்ஸ்' தருகின்றனர்.

கூடுதல் தொகையை, சம்பளத்திலிருந்துதான் சமாளிக்க வேண்டியுள்ளது. மதுரையில் ரோடுகள் மோசமாக உள்ளதால், மெதுவாகத்தான் செல்ல முடியும். இதனால் எரிபொருள் விரையமாகிறது.

சுப்பிரமணி (டூவீலர், தனியார் நிறுவன ஊழியர், மேலமாசி வீதி):
பால், டீ என தினசரி வீட்டுச் செலவு 30 ஆக இருந்தால், இனி 60 ரூபாயாக
அதிகரிக்கும். விலைவாசிக்கேற்ப, சம்பள உயர்வு கிடையாது. இதை எப்படி
எதிர்கொள்வது எனத் தெரியவில்லை. பெட்ரோல் விலையை, மத்திய அரசே நிர்ணயிக்கவேண்டும்.

பால்ராஜ் (ஆட்டோ டிரைவர், பெத்தானியாபுரம்): ஏற்கனவே, ஆட்டோ வாடகை அதிகம் என பயணிகள் புலம்புகின்றனர். இனி குறைந்தபட்ச கட்டணம் 20க்கு பதிலாக 40 ரூபாய் வசூலித்தால்தான், எங்களுக்கு கட்டுபடியாகும்.

முருகேசன் (கார்-தொழிலதிபர், எல்லீஸ் நகர்): அண்டை நாடுகளில்
பெட்ரோல் விலை, நம்மை விட மிகக்குறைவு. அதேபோல், நம்நாட்டில் வழங்குவதில்
என்ன சிரமம்? எங்களைப்போல் தொழில்புரிவோரின் வருவாய் நிலையில்லாதது. ஆட்டோகாஸ், பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க மாற்றுவழி தெரியவில்லை.

வித்யா (ஜவுளிக்கடை உரிமையாளர், எல்லீஸ் நகர்): அனைத்து
பொருட்களின் விலையும் ஏற்கனவே உச்சத்தில் உள்ளது. இனி, மேலும் உயரும்.
மக்கள் அனைத்து வழிகளிலும் அதாவது பொருளாதார ரீதியாகவும் சிக்கனத்தை
கடைபிடித்தால்தான் சமாளிக்க முடியும். நாம் கார், டூவீலர்களுக்கு மாற்றாக,

பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டியதுதான் சிறந்த வழி. இந்த விலைஉயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு கூறினர்.
பெட்ரோலை சேமிக்க என்ன வழி?
* அபார்ட்மென்டுகளில் வசிப்போர், ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தால்,யாராவது ஒருவரின் வாகனத்தில் சேர்ந்து செல்லலாம். மற்றவர்களின் வாகனத்தையும் மாறி மாறி பயன்படுத்தலாம்.
* வீட்டின் அருகில் "ஷாப்பிங்' செல்ல வேண்டி இருந்தால், முடிந்த அளவு நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது சைக்கிளை பயன்படுத்துங்கள்.உடலுக்கும் நல்லது.
* டவுன் பஸ் வசதி உள்ளோர், அதையும் பயன்படுத்தலாம்.
* மாணவ பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்கு டூவீலர் வாங்கித் தருவதை தவிர்த்து, சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவியுங்கள்.
* தனி நபராய், கார் பயன்படுத்துவதையும் குறைக்க முயற்சிக்கலாம். குடும்பத்துடன் செல்ல வேண்டி இருந்தால் மட்டுமே, காரை எடுங்கள்.
* மிக பழைய வாகனங்களை மாற்றி விடுங்கள். இவை பெட்ரோலை அதிகம் குடிக்கும்.
* வாகனத்தில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை நெருங்கி விட்டால், குறைந்தது 50 மீட்டர் தூரத்திலேயே இன்ஜினை அணைத்து விடுங்கள். நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை பெட்ரோல் செலவு இல்லாமலேயே வாகனம் அடைந்து விடும்.
இப்படி 20 முறை செய்தால் கூட ஒரு கி.மீ., தூரத்திற்கு செல்ல வேண்டிய பெட்ரோல் மிச்சம் ஆகும்.

* ஒரு இடத்தில் டூவீலரை நிறுத்தி விட்டு, மீண்டும் திரும்ப வேண்டி இருந்தால், வண்டியை ஸ்டார்ட் செய்யாமலேயே திருப்பி விட்டு, பின்னர் இன்ஜினை ஸ்டார்ட் செய்தாலும் பெட்ரோல் மிச்சம் ஆகும். இதுபோன்ற வழிகளை பின்பற்றினால், வீட்டுக்கும் நாட்டுக்கும் சேமிப்பு.

பெட்ரோலை சிக்கனப்படுத்தி வாகனம் ஓட்டுவது எப்படி?

* குறைந்த தூர பயணம் மற்றும் அடிக்கடி வாகனத்தை நிறுத்துவதை குறைக்க வேண்டும்.

*வாகனம் நின்றுக்கொண்டிருக்கும் போது இன்ஜினை ஓடவிடக்கூடாது. 10 நிமிடம் இன்ஜின் ஓடினால் 100 மி.லி., பெட்ரோல் வீணாகும்.

* அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

* 40 கி.மீ., வேகத்தை தாண்டினால் "டாப் கியரில்' சென்றால் பெட்ரோல் மிச்சமாகும்.

* டயர்களில் காற்றின் அளவு சரியாக இருக்கிறதா என வாரம் ஒருமுறை "செக்கப்' செய்வது நல்லது.

* பழுதடைந்த "கிளட்ச்', சரியில்லாத இன்ஜின், டியூனிங், தூசி போன்றவை பெட்ரோலை "குடிக்கும்'.

* தேவையில்லாமல் இன்ஜினை "ரைஸ்' செய்யக் கூடாது.

* திடீர் திடீரென வேகத்தை கூட்டவோ, குறைக்கவோ கூடாது.

* அடிக்கடி பிரேக், கிளட்ச் பிடித்து வாகனம் ஓட்டக்கூடாது.

* சிக்னல்களில் 20 வினாடிகளுக்கு மேல் நிற்க நேர்ந்தால், இன்ஜினை அணைப்பது நல்லது.

"கியருக்குரிய' கி.மீ., தெரியுமா? இரு சக்கர வாகனங்கள் 10கி.மீ., வேகத்தில் முதல் மற்றும் 2வது "கியரிலும்', 20 கி.மீ., வேகத்தில்மூன்றாவது "கியரிலும்', 30 கி.மீ., வேகத்தில் 4வது "கியரிலும்', 40கி.மீ.,க்கு மேலே 5வது "கியரிலும்' "பறக்கலாம்'. அரசின் கவனத்திற்கு சாலைகளை குண்டும் குழியுமாக இல்லாமல் மாற்றினால், எரிபொருள் மிச்சமாகும் என்பதை கவனத்தில் கொண்டால் நல்லது..
நன்றி : தமிழர்களின் சிந்தனை களம்

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்