முதலில் உங்கள் கூகிள் அக்கவுண்ட்ஸ் செட்டிங்க்ஸ் செல்லுங்கள்.
அங்கு Multiple Sign in என்பதற்கு நேராக Off என்று இருக்கும்.
அதற்கு கீழே Change என்று இருக்கும் அதை கிளிக் செய்து வரும் விண்டோவில் அனைத்திலும் டிக் செய்து Save செய்யவும்.
Save செய்த பிறகு Back என்பதை கிளிக் செய்து மெயில் விண்டோவிற்கு வாருங்கள்.
பிறகு இன்பாக்ஸில் மேலே உங்கள் மெயில் ஐடி அருகே ஒரு முக்கோணம் தலைகீழாக
இருக்கும் அதை கிளிக் செய்தால் Sign in to Another Account என்று
இருக்கும்.
அதை தேர்வு செய்தால் உடனே ஒரு விண்டோ ஒபன் ஆகும்.
அங்கு உங்களுக்கு தேவையான அடுத்த மின்னஞ்சல் முகவரி பாஸ்வேர்ட் டைப்
செய்து நுழைந்தால் போதும் அடுத்த மின்னஞ்சலின் ஜிமெயில் இன்பாக்ஸ்
உங்களுக்கு கிடைத்து விடும்.
என்னிடம் மூன்று ஜிமெயில் ஐடி இருந்ததால் மூன்றும் லாகின் செய்து மூன்று
இன்பாக்ஸ் வரை கிடைத்தது. நீங்களும் முயற்சி செய்து எத்தனை இன்பாக்ஸ் பெற
முடியும் என்பதை பின்னூட்டம் மூலம் சொல்லுங்கள்.
கூகிள் அட்டாச்மென்ட் தரவிறக்க
நீங்கள் கூகிள் அட்டாச் மென்ட்
செய்யும் பொழுது Drag & Drop முறையில் அட்டாச் செய்யலாம் என்று
கூறியிருந்தேன். அது போல உங்களுக்கு வரும் அட்டாச்மென்ட்டுகளை Drag &
Drop முறையில் தரவிறக்கலாம் இதை இப்பொழுது கூகிள்
சாத்தியமாக்கிருக்கிறது. உங்கள் அட்டாச்மென்டில் ஒரு சிறு ஐகான்
இருக்கும் நோட் பேட் என்றால் நோட்பேட் போலவும் பிடிஎப் என்றால் பிடிஎப்
போலவும் அதை பிடித்து இழுத்து உங்கள் டெஸ்க்டாபில் விட்டால் போதும் உங்கள்
அட்டாச்மென்ட் கோப்பு டெஸ்க்டாப்பில் சேமிக்கப்பட்டு விடும்.
ஜிமெயிலில் படிக்காத மெயிலை தேட
உங்கள் கூகிள் மெயிலில் படிக்காமல்
விட்ட மின்னஞ்சல்கள் நிறைய சேர்ந்து இருக்கும் எல்லாவற்றையும் படித்து
விட்டொம் என்றாலும் சில நேரம் இன்பாக்ஸில் 2 அல்லது 3 படிக்கப்படமால்
இருக்கும் அவ்வாறு படிக்கப்படாமல் இருக்கும் மின்னஞ்சலை தேட இன்பாக்ஸ்
மேலே ஒரு தேடு பொறி பார்த்திருப்பீர்கள்.
அதில் label:unread in:inbox
இவ்வாறு கொடுத்து Search Mail என்பதை கிளிக் செய்யுங்கள் நீங்கள் படிக்காத
மெயில் உங்கள் இன்பாக்ஸில் எங்கு ஒளிந்து இருந்தாலும் உங்கள் கண்முன்னே
காட்டப்படும்.
நீங்கள் உங்கள் கணினியில் வேலை
செய்யாத பொழுது தானாகவே ஸ்கீரின் சேவர் தொடங்கும் அதில் உங்களுக்கு
பிடித்த படங்கள் அல்லது குழந்தைகள் புகைப்படங்கள் என்பதை போட்டு
வைத்திருப்பீர்கள். அதற்கு பதில் அதில் நேரமும் உங்களுக்கு பிடித்த
வார்த்தைகளும் உங்கள் கணினியின் சிபியூ வேலைதிறன் மற்றும் உங்கள் மெமரி
எவ்வளவு உபயோகபடுத்தப்படுகிறது என்பதை காட்டினால் எப்படி இருக்கும்.
அதற்கு இந்த மென்பொருளை உபயோகப்படுத்துங்கள். மென்பொருள் தரவிறக்க சுட்டி
http://www.gouthaminfotech
நன்றி :தமிழர்களின் சிந்தனை களம்
No comments:
Post a Comment