Popular Posts

Aug 14, 2010

ஜிமெயிலில் அற்புத புதுவசதி "Multiple Sign in" நாம் Activate செய்ய


இணைய
உலகில் கூகுளின் சேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த
கூகுளின் சேவையில் மகத்தான ஒன்று ஜிமெயில் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
நாம் அனைவரும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட அக்கௌன்ட் வைத்திருக்கிறோம்.


பிளாக்கருக்கு ஒன்று சொந்த சேவைக்கு ஒன்று இப்படி பல அக்கௌன்ட்
வைத்திருப்போம். அப்படி இருக்கும் போது நாம் ஒவ்வொரு அக்கௌன்ட் திறக்க
வேண்டுமானால் தனியாக ஒரு விண்டோ ஓபன் செய்து ஒவ்வொரு தடவையும் sign in
செய்து வரவேண்டும். ஆனால் இப்பொழுது அந்த கவலை இல்லை ஜிமெயில் நமக்கு Multiple Signin என்ற
புது வசதியை அறிமுக படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் நாம் நம்முடைய
அணைத்து மெயில்களையும் ஒரே விண்டோவில் பார்த்து கொள்ளலாம். ஒவ்வொரு
தடவையும் தனி தனியாக விண்டோ ஓபன் செய்ய வேண்டியதில்லை. இந்த வசதியை பெற
இந்த லிங்கில் செல்லவும் கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.
Multiple Sign In
அங்கு உங்கள் Id மற்றும் Password கேட்டால் கொடுத்து விட்டு உள்ளே செல்லுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்
Multiple Sign In
மேலே உள்ள படத்தில் Multiple Sign In என்ற
இடத்தில் off என்று இருக்கும் இடத்தில் நான் காட்டியிருக்கும் Edit என்ற
பகுதியில் கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல
விண்டோ வரும்.
Multiple Sign In
இங்கு மேலே படத்தில் காட்டியுள்ள படி மாற்றங்கள் செய்து
கீழே உள்ள Save பட்டனை அழுத்தி விடுங்கள். அவ்வளவு தான் நீங்கள் இப்பொழுது
Multiple Sign In வசதியை பயன் படுத்தி விட்டீர்கள்.
பயன் படுத்தும் முறை

உங்கள் ஜிமெயில் அக்கௌண்டில்
நுழைந்து கொள்ளுங்கள். உங்கள் மெயில் விண்டோவில் கீழே இருப்பதை போல Sign
in another account என்ற புது வசதி வந்திருக்கும். கீழே உள்ள படத்தில்
பாருங்கள்.


Multiple Sign In
மேலே குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் கிளிக் செய்து நீங்கள் உங்களுடைய வேறொரு ஜிமெயில் id password கொடுத்து உள்ளே செல்லுங்கள். இது போல் நீங்கள் மூன்று அக்கௌன்ட்களை ஒரே சமயத்தில் ஒரே விண்டோவில் கையாளலாம்.

Multiple Sign In
இப்பொழுது உங்களுக்கு இது போல் வந்து விடும் இதில் உங்களுக்கு தேவையான மெயிலை க்ளிக் செய்தால் போதும் அந்த மெயிலுக்குள் செல்லலாம்.

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் ஒட்டு போடவும்

நன்றி :தமிழர்களின் சிந்தனை களம்

1 comment:

வேல் said...

G Mail-லில் இது போன்ற வசதி வந்தும் அது தெரியாமல் பல account-களை வைத்துக்கொண்டு கஷட்டப்பட்ட என்னை போன்றோருக்கு மிக உதவியாய் இருந்தது.
மிக்க நன்றி..

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்