Popular Posts

Oct 4, 2010

விரைவில் பில்கேட்ஸ் ஆக போகும் இரண்டு இந்திய நண்பர்கள் – அவர்கள் உருவாக்கிய BlixOS operating சிஸ்டம்

 
சுயெஸ் ஸ்ரிஜன் நொய்டா கேயைதான் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இவர் தன்னுடைய நண்பன் சிதிஜ் குமார்ருடன் இணைந்து உருவாக்கியது இந்த BlixOS operating சிஸ்டம்.
இதன் முக்கிய அம்சம் இது 12 நொடிகளில் கணினியை boot
செய்யும். இது main memory யை குறைந்த அளவிற்கு உபயோகித்து கொள்ளும்( 100 -120 MB ).உங்கள் Hard drive வில் ( 600 – 640 MB ) அளவுமட்டுமே இடத்தை எடுத்துக்கொள்ளுமாம்.


கணினி உபயோகிப் பவர்களில் அனைவரும் விரும்புவது தங்கள் OS வேகமாக வேலை செய்ய வேண்டும் என்பதுதான். அந்த வகையில் BlixOS சின் வேலை செய்யும் வேகம் பிரமிக்கதக்கது. 1 GB அளவிற்கான கோப்புகளை ஒரு drive வில் இருந்து மற்றொரு drive விக்கு மாற்ற 40 வினாடிகள் மட்டும் எடுத்துகொள்ளுமாம்.
பலர் இன்னும் குறைந்த செயல்பாடுடைய pentium 4 ப்ரோசெச்செர் வகை கணினியை உபயோகித்து வருகிறார்கள். இதில் விண்டோஸ் XP, Vista மற்றும் 7 Operating System தை இயக்குவது கடினம். ஆனால் BlixOS நீங்கள் நினைத்து பார்க்கமுடியாத செயல்பாட்டை காட்டுமாம்.BlixOs மூன்று வெவ்வேறு வடிவில் உருவாக்க பட்டு உள்ளது. BlixOS Home ,BlixOS Professional மற்றும் BlixOS ultimate ஆகும். இதில் BlixOS Home ஒரு operating environment, இது OS இல்லை.
__________
__________
ஒரு பொருளை உருவாக்கினால் போதுமா அந்த பொருளை
சரியான முறையில் வியாபாரம் செய்ய வேண்டும்.
அந்த வகையில் சுயெஸ் தன் நண்பனுடன் இணைந்து தங்களுடைய
Blix Corporation நிறுவனத்தை உருவாக்கினார். வரும் செப்டம்பர் 30
அதிகாரப்பூர்வமாக BlixOS Professional Beta வை வெளியிட உள்ளனர்.




இவர்கள் வெற்றிபெற வாழ்த்துகள்.

இதை  பற்றிய அனைத்து வீடியோக்களும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும். 
நன்றி : www.blixcorp.com, www.youtube.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்