Popular Posts

Jan 28, 2011

கணினியை வேகமாக பூட் செய்ய வைப்பது எப்படி? பாகம் -2

 கேள்வி : திரு . கலிராஜன்  மிகவும் நன்றி ரமேஷ். இப்பொழுது என் சிஸ்டம் வேகமாக செயல்படுகிறது. வரிசை எண்.12, 16ஐ எப்படி செயல்படு்த்துவது என்று தெரிவியுங்கள்.


12.விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம்.
16. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.


பதில் :


01 .விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்க start->run->msconfig->ok (or)enter.


என்டர் செய்தவுடன் மேலே உள்ள விண்டோவில் boot.ini கிளிக் செய்யவும். பின் /NOGUIBOOT என்பதை கிளிக் செய்து apply & ok கொடுத்து ரிஸ்டார்ட் செய்து பார்க்கவும்.  


௦௨.சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்க மைகம்ப்யூட்டர் கிளிக் செய்து வலது கிளிக் செய்து ப்ரோபர்டீஸ்( properties ) என்பதை கிளிக் செய்தவுடன் கீழே உள்ள விண்டோ ஓபன் ஆகும் .

  மேலே உள்ள படத்தில் காணப்படும் போர்ட்களில் தாங்கள் எந்த போர்ட் பயன்படுத்தாமல் உள்ளிர்களோ அதை கிளிக் செய்து வலது கிளிக் செய்து disable என்பதை கிளிக் செய்யவும்.                              (எ . கா) நான் எனது  கணினியில் bluetooth pan networkadapter யை  disable செய்து உள்ளேன் .
இதுபோல் உங்கள் கணினியில் உள்ள போர்ட் லிஸ்டில் காம் போர்ட் மற்றும் எல்பிடி போர்ட் disable செய்யலாம் . தாங்கள் Dot Matrix Printer பயன்படுத்தினால் உங்கள் கணினியில் உள்ள போர்ட் லிஸ்டில் காம் போர்ட் மற்றும் எல்பிடி போர்ட் disable செய்ய வேண்டாம் .


என்றும் அன்புடன் 
ரமேஷ்.ர 

2 comments:

S.முத்துவேல் said...

மிக பயணுள்ள தகவல்...
நன்றி..

மாணவன் said...

வணக்கம் நண்பரே உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்...

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்