Popular Posts

Jan 3, 2011

LCD திரையில் பழுது இருக்கிறதா என்று நொடியில் கண்டுபிடிக்கலாம்.

     LCD மானிட்டர் வாங்கும் போது அதன் வாரண்டி முடியும் முன்பும் நாம் நம் LCD மானிட்டரின் திரையின் பிக்சல் பழுதில்லாமல் இயங்குகிறதா என்று சரிபார்க்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
    LCD மானிட்டர் பயன்படுத்தும் போது சில நேரங்களில் திரையில் சில பிக்சல் சரியாக தெரியாமல் இருக்கலாம் இல்லை என்றால் சில வண்ணங்கள் மட்டும் சரியாக தெரியாமல் இருக்கலாம் இந்தப்
பிரச்சினை புது LCD மானிட்டர் வாங்குவதில் இருந்து தொடங்குகிறது. புதிய LCD மானிட்டர் வாங்குபவர்கள் அதற்கு முன் மானிட்டரில் ஏதும் பிக்சல் பிரச்சினை இருக்கிறதா என்று எளிதாக கண்டுபிடித்து நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் இருக்கிறது.
இணையதள முகவரி : http://flexcode.org/lcd.html
இந்தத்தளத்திற்கு Pick a கலர் என்பதில் விரும்பும் வண்ணத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்
அடுத்து அதன் அருகில் இருக்கும் toggle full screen என்ற பொத்தானை அழுத்தினால் முழுத்திரையில் நாம் தேர்ந்தெடுத்த கலர் இருக்கும் வண்ணத்தில் அல்லது மானிட்டரில் பிரச்சினை இருந்தால்
பிரச்சினை உள்ள பகுதியின் பிக்சல் மட்டும் வேறு கலரில் இருக்கும். இதிலிருந்து எளிதாக கண்டுபிடிக்கலாம். LCD மானிட்டர் வாங்கி இன்னும் சில மாதங்களில் வாரண்டி முடிவதாக
இருந்தால் நாம் கண்டிப்பாக இந்ததளத்திற்கு சென்று நம் LCD -ல் ஏதும் பிரச்சினை இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
கண்டிப்பாக இந்தப்பதிவு LCD மானிட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி : தமிழர்களின் சிந்தனைகளம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்